சார் ப்ளீஸ்..அது மட்டும் வேண்டாம்.. விஜய்க்கு கண்டிஷன் போடும் தயாரிப்பாளர்..

0
Follow on Google News

தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியின் சூப்பர் ஹிட் பிலிம்ஸ் தமிழ் சினிமாவில் பல குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்த ஒரு நிறுவனம். இதில் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி போன்ற பல ஹிட் படங்களை தயாரித்தது சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ்.

தொடர்ந்து இதுவரை 96 படங்கள் தயாரித்துள்ள சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ் கடந்த சில வருடங்களாக அதிகமாக தமிழ் படங்களை தயாரிப்பதை விட்டு விட்டு தெலுங்கு மற்றும் மலையாள படங்களை பிஸியாக தயாரித்து வருகிறது. குறிப்பாக அதிகமாக தெலுங்கு படங்களை தயாரித்து வருகிறது சூப்பர் ஹிட் பிலிம்ஸ். இதற்கு முக்கிய காரணம் தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் சம்பளம் அதிகம் என்பதால் தெலுங்கு மற்றும் மலையாள படங்களை சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ் தயாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய்யிடம் சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க கால்ஷீட் கேட்டு வந்து கொண்டிருக்கிறார்கள், அந்த வகையில் நடிகர் விஜயும் சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ்க்கு கால் சீட் தருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆரம்பத்திலேயே நடிகர் விஜயிடம் சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

அதாவது 20 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் இயக்குனர்களை நீங்கள் தயவு செய்து அனுப்பி வைக்காதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள், அதற்கு விஜய் பரவாயில்லை நீங்களே இயக்குனர்களிடம் கதை கேட்டுவிட்டு நீங்கள் தேர்வு செய்யும் இயக்குனரை என்னிடம் அனுப்பி வையுங்கள் என விஜய் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆர்.பி.சவுத்ரி அடங்கமறு இயக்குனர் கார்த்திக். ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய் சங்கர், மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ பட இயக்குனர் போன்ற இதுவரை சினிமாவில் வெற்றி பெறாத இயக்குனர்களிடம் கதையை கேட்டு வருகிறார்.இதற்கு காரணம் வெற்றி பெற்ற இயக்குனர்களிடம் கதை கேட்டால் அவர்கள் சம்பளம் அதிகமாக கேட்பார்கள் என்கின்ற ஒரு காரணத்திற்காக இதுபோன்ற டம்மி இயக்குனர்களிடம் ஆர் பி சவுத்ரி கதை கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் இதுபோன்ற இயக்குனர்களை ஆர்பி சவுத்ரி தேர்வு செய்யும் பட்சத்தில் நிச்சயம் விஜய் அந்த இயக்குனர்களின் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார். அந்த வகையில் சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ்க்கு விஜய் கால் சீட் கொடுக்க முன் வந்தாலும், ஆர்பி சவுத்ரி வெற்றி பெற்ற இயக்குனர்களை தேர்வு செய்வதில் தயக்கம் காட்டி வருவதால் இந்த ப்ராஜெக்ட் நடைபெறுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதே நேரத்தில் தற்பொழுது 96வது படங்களை தயாரித்து வரும் ஆர்பி சவுத்ரி. விஜய் தன்னுடைய தயாரிப்பில் கமிட்டான ஆவது உறுதி செய்யப்பட்டால், உடனே அடுத்தடுத்து சிறிய பட்ஜெட்டில் மூன்று படங்களை தயாரிக்க முடிவு செய்த ஆர்.பி சவுத்ரி நூறாவது படம் விஜய் நடிக்கும் படமாக தயாரிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.