கடந்த டிசம்பர் 2ம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் டி.எஸ்.பி. இந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட வெற்றி படங்களை படங்களை இயக்கிய பொன் ராம் இயக்கியுள்ளார். டி. இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பொன்ராம் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சீமராஜா, எம்.ஜி.ஆர். மகன் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி படம் வெளிநாடுகளில் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டு பல திரையரங்குகளில் ஒருவர் கூட படம் பார்க்க வராததால், கனடா,அமெரிக்கா போன்ற நாடுகளில் டிஎஸ்பி படம் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் படம் வெளியாகி மூன்று நாட்கள் கூட ஆகாத நிலையில் சென்னை சத்தியம் திரையரங்குகளில் உள்ள செரின் என்கின்ற திரையில் 12 மணி காட்சிக்கு ஒருவர் கூட டிக்கெட் வாங்கவில்லை.
இதனால் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி படம் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு மாஞ்சா குருவி என்கின்ற படம் திரையிடப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகத்தில் பல திரையரங்குகளில் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, மாஞ்சா குருவி படம் திரையிடப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் விஜய் சேதுபதி சினிமா வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த படம் டிஎஸ்பி.
இந்த படம் திரைக்கு வந்த முதல் நாளே மண்ணை கவி விட்டது. ஆனால் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி டிஎஸ்பி படம் ரிலீஸ் ஆன நிலையில், அடுத்த நாள் டிசம்பர் 3ம் தேதி இந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாடினார் விஜய் சேதுபதி. இந்த படம் ரிலீஸ் ஆன முதல் நாளே படம் பார்க்க ஆட்கள் இல்லாமல் மண்ணைக் கவிய நிலையில், அடுத்த நாள் மக்களை ஏமாற்றும் விதமாகவெற்றி பெற்றது என்று ஒரு பித்தலாட்டம் செய்து கொண்டாடியுள்ளார்.
இது விஜய் சேதுபதியின் இமேஜை பெருமளவு பாதித்துவிட்டது, தன் நடித்த படம் தோல்வி அடைந்தால் அந்த தோல்வியை ஒப்புக்கொண்டு, அடுத்த தான் நடிக்க இருக்கும் படங்களில், இதற்கு முன்பு செய்த தவறை திரித்து கொள்ள வேண்டும். ஆனால் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கின்ற கதை போன்று தோல்வி அடைந்த படத்திற்கு வெற்றி விழா கொண்டாடியது விஜய் சேதுபதியின் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
டிஎஸ்பி படம் தோல்விக்கு முக்கிய காரணம் விஜய் சேதுபதி தான் என்கின்ற தகவலும் வெளியாகி உள்ளது. இயக்குனர் பொன்ராஜ் முதலில் கதை சொன்ன போது அதற்கு ஒப்புக் கதை ஒப்புக்கொண்ட விஜய் சேதுபதி, பின்பு கதையில் சில மாற்றங்களை கொண்டு வரச் செய்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி ஒரு கேரக்டரில் மொட்டை அடித்து நடிக்க வேண்டும். இதுதான் இந்த படத்தின் முக்கியமான கேரக்டர் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார். ஆனால் விஜய் சேதுபதி மொட்டை அடிக்க மறுத்ததால் படத்தின் மொத்த கதையில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது, இதுவே அந்த படத்திற்கு தோல்வி என்று கூறப்படுகிறது.