நடிகர் விஜய் சேதுபதி சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து 1996 களில் வெளியான லவ் போர்ட்ஸ் மற்றும் கோகுலத்தில் சீதை படத்தில் கண்ணனுக்கு தெரியாத சிறு பாத்திரங்களில் நடித்து, பின்பு சினிமாவில் சிறு சிறு பாத்திரங்கள் நடிக்க கூட வாய்ப்புகள் இல்லாமல். துபாய்க்கு வேலைக்கு சென்றார். சில வருடம் துபாயில் வேலை செய்தவர் மீண்டும் சினிமா ஆசையில் சென்னைக்கு திரும்பி, 2004 தொடங்கி சுமார் 6 வருடங்கள் சிறு சிறு வேடங்களில் நடித்து கொண்டு பெரிய பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார் விஜய் சேதுபதி.
ஒரு கட்டத்தில் மீண்டும் துபாய்க்கு செல்ல திட்டமிட்ட போது தான் தென் மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்தது. இந்த படம் மிக பெரிய ஹிட் கொடுத்தது. இதன் பின்பு அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் விஜய் சேதுபதிக்கு கிடைத்தது. எந்த கதையாக இருந்தாலும் யோசிக்காமல் உடனே நடிக்க சம்மதம் தெரிவிக்கும் விஜய் சேதுபதி வருடத்துக்கு சுமார் 6 முதல் 8 படங்கள் வரை இவரின் நடிப்பில் வெளியாகும்.
ஒரு நேரத்தில் பல படங்களில் கமிட்டாகும் விஜய் சேதுபதி. கிடைக்கும் சம்பளத்தில் மிக பெரிய ஷாப்பிங் காம்ப்ளஸ் கட்டி வருவதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சினிமாவில் தன்னுடைய நிலை உயர்ந்த போது. மெல்ல அரசியல் பேச தொடங்கியவர் இதனால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இவருடைய அரசியல் கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்துக்கு எதிராகவே அமைத்திருந்தது. இதனால் அந்த சிந்தாந்ததை பின்பற்ற கூடியவர்கள் மத்தியில் கடும் எதிப்பை பெற்றார் விஜய் சேதுபதி.
மேலும் இரு குறிப்பிட்ட மத கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி பெரும் எதிப்புகளுக்கு உள்ளானார்.ஆரம்பக்கட்டத்தில் அனைவருக்கும் பொதுவானவர் விஜய் சேதுபதி என்கிற நிலை மாறி, இவருடைய அரசியல் கருத்துக்கு பின்பு ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் அரசியல் கட்சிக்கு எதிரானவர் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டார் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமின்றி, மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார் விஜய் சேதுபதி.
தற்பொழுது இந்தியிலும் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழில் வில்லன் கதாபாத்திரத்துக்கு அதிக சம்பளம் கிடைத்ததால் தொடர்ந்து சில படங்கள் வில்லன் பாத்திரங்களிலும் நடித்தார். பெரும்பாலும் விஜய் சேதுபதி படத்தின் கதை மற்றும் என்ன பாத்திரம் என்பதை ஒரு பொருட்டாக கருத மாட்டார். அவருக்கு சம்பளம் அதிகம் கிடைத்தால் போதும் என்பது தான் குறிக்கோள். இந்நிலையில் சமீபத்தில் தமிழில் எந்த ஒரு புதிய படங்களிலும் ஒப்பந்தம் செய்யாமல் இருக்கிறார்.
தமிழில் வரும் பட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறார், அதே நேரத்தில் இந்தி படங்களில் கமிட்டாகி வருகிறார். இது குறித்து விசாரித்ததில், தற்பொழுது தமிழ் சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டு இந்தியில் ஒரு ரவுண்ட் வருவதர்க்கு விஜய் சேதுபதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியில் சினிமா வாய்ப்பு குறைந்த பின்பு இந்தி தெரியாது போடா என தமிழுக்கு வந்துவிடுவார் விஜய் சேதுபதி என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுவது குறிப்பிடதக்கது.