நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தை முடித்துவிட்டு விஜய் அவருடைய 67 வது படத்தில் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கான பட பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள விநாயகர் கோவிலில் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படத்திற்கான படபிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதைக்களம் இருக்கும். அந்த வகையில் விஜய் 67 படத்தில் கதை தாதாக்கள் கதை கொண்ட ஒரு படமாகவே லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா மற்றும் வில்லன் நடிகர்களாக பல பேர் நடிக்க உள்ளனர்.
இந்த படத்தில் ஐந்து வில்லன்கள் நடிக்க உள்ளனர், அதில் இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையில் தன்னுடைய புதிய படத்தில் வில்லன்களாக நடிக்க நடிகர் அர்ஜுன் மற்றும் விஷால் ஆகிய இருவரும் நடிக்க வேண்டும் என விரும்பிய நடிகர் விஜய், அதற்காக இருவரிடம் பேசி கமிட் செய்ய இயக்குனர் லோகேஷ் கங்கராஜை வலியுறுத்தியுள்ளார் விஜய்.
இதனை தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஷாலை நேரடியாக சென்று சந்தித்த லோகேஷ் கனகராஜ். விஜய் நடிக்கும் புதிய படத்தின் கதையை தெரிவித்து இதில் வில்லன் கதாபாத்திரத்தில் விஷால் நடிக்கும் கதையையும் தெரிவித்துள்ளார். மேலும் விக்ரம் மற்றும் மாஸ்டர் படத்தில் எப்படி வில்லனுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமோ.? அதே போன்று உங்களுக்கும் இந்த படத்தில் உங்கள் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருக்கிறார்.
தற்போது சினிமாவில் மார்க்கெட் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ள விஷால் வில்லன் கதாபாத்திரதிற்கு அதிக சம்பளம் கொடுக்கும் பட்சத்தில், வில்லன் கதாபாத்திரத்தை விஷால் ஏற்றுக் கொள்வார் என்று லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இருவரும் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் விஷால் யோசித்து சொல்கிறேன் என்று லோகேஷ் கனகராஜ் அனுப்பி வைத்துள்ளார்.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, விஷாலை தொடர்பு கொண்டு புதிய படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். அதற்கு நடிகர் விஷால் அடுத்து ஒரு படம் உங்களுடன் செய்யலாம் ஆனால் அது எனக்கான படமாக இருக்க வேண்டும். அடுத்து என்னை ஹீரோவாக வைத்து ஒரு கதை தயார் செய்து வாருங்கள், நாம் அடுத்து இணைந்து பணியாற்றுவோம் மற்றபடி என்னுடைய இமேஜை நான் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.
அதனால் விஜய் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க தனக்கு விருப்பமில்லை என்று ஓப்பனாகவே விஜய் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தூக்கி எறிந்து விட்டு கெத்து காட்டிவிட்டார் விஷால் என்றும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் ஐந்து வில்லன்களில் ஏற்கனவே சஞ்சய் கமிட் ஆகியுள்ள நிலையில், நடிகர் அர்ஜுனன் ஒரு வில்லனாக கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.