கழுவி கழுவி ஊத்திய மக்கள்… ஏன்டா மானத்தை வாங்குறீங்க… ரசிகர்களை டோஸ் விட்ட விஜய்…

0
Follow on Google News

வங்கக் கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மிக்ஜாம் புயலாக உருமாறி, சென்னை உட்பட அதைச் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டது. கடலில் வலுப்பெற்ற புயலின் கோரத்தாண்டவத்தால் இரண்டு நாட்கள் இடைவிடாது கன மழை கொட்டி தீர்த்தது. இதனால், ஏரி குளங்கள் நிரம்பி நகரம் முழுவதையும் பெரு வெள்ளம் ஆக்கிரமித்துக் கொண்டது.

வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்ததால் குடியிருப்பாளர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் உணவு , நீர் மற்றும் மின்சாரம் இன்றி வீட்டிற்குள்ளேயே தவித்து வந்தனர். தற்போது படிப்படியாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில், பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் உட்பட சினிமா பிரபலங்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

சில திரை பிரபலங்கள், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வெள்ள நிவாரணத்திற்கு குறிப்பிட்ட தொகையை காசோலையாக வழங்கிய அதே வேளையில், சில பிரபலங்கள் நேரடியாக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிக்கு நிவாரண பொருட்களை அனுப்பி உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஜய்யும் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறார்.

இது தொடர்பாக X தளத்தில் டிசம்பர் ஆறாம் தேதி வெளியிட்ட பதிவில், ” சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் “மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.” என்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நடிகர் விஜயின் இந்த ட்வீட், தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதுமட்டுமின்றி, விஜயின் வேண்டுகோளுக்கு இணங்க, விஜய் மக்கள் இயக்கத்தினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தனர். விஜயின் இந்த நடவடிக்கை அரசியல் கட்சிகள் உட்பட ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது என்று கூறலாம்.

அதே சமயம், நலத்திட்ட உதவிகளை செய்த போது, விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்த சில காரியங்கள் தற்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அதாவது நலத்திட்ட பணிகளை செய்த விஜய் மக்கள் இயக்கத்தினர், விஜயின் புகைப்படத்தை கையில் ஏந்திய வாரும், அவரது பெயரை கோஷமிட்டவாரும் விஜய்யை விளம்பரம் செய்து கொண்டிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமின்றி, இணையவாசிகள் பலரும் விஜய்யையும் அவரது நிர்வாகிகளையும் வறுத்து எடுத்து வருகின்றனர். இன்னும் சிலர், இப்படி எல்லாம் பெருமை தேடிக் கொள்ள வேண்டுமா என்று விஜயை விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே நடிகை நயன்தாராவும் இது போன்ற விமர்சனங்களுக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் விஜய் காதுக்கு போகவே, அவர் ” நான் நலத்திட்ட பணிகளை செய்யத்தானே கூறினேன். எதற்காக நீங்கள் விளம்பரம் செய்யும் வகையில் பெருமைக்கு செய்கிறீர்கள்? ” என்று கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அமைதியாக நலப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.