காஷ்மீரில் ஓவர் குளிர்… குளிரை கட்டுப்படுத்த விஜய்-திரிஷா இருவரும் கிடைக்கும் கேப்பில் இப்படி செய்யலாமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், பிகில், பைரவா போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காமல், தொடர் சரிவை சந்தித்து வந்த நடிகர் விஜய்க்கு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. மாஸ்டரை தொடர்ந்து விஜய் நடிப்பில் தற்பொழுது வெளியாகி உள்ள வாரிசு திரைப்படம் விஜய் ரசிகர்களை மட்டுமின்றி இன்றைய இளம் தலைமுறையினரை மிகப்பெரிய அளவில் ஏமாற்றம் அடையச் செய்தது.

இருந்தாலும் இந்த படம் மெகா சீரியல் போல் உள்ளது என்கின்ற விமர்சனத்தினால் சீரியல் விரும்பும் பெண்கள் பெருமளவில் இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க முன் வந்ததால், வாரிசு திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு ஆக்சன் படம் கொடுக்க விரும்பிய நடிகர் விஜய், தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடித்துள்ளது, இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக, பட குழுவினர் தனி விமானத்தில் காஷ்மீர் சென்றுள்ளார்கள், இதில் இந்த படத்தில் நடிக்கும் விஜய் , திரிஷா , லோகேஷ் கனகராஜ் உட்பட பலரும் காஷ்மீர் சென்றுள்ளார்கள்.சுமார் 14 வருடங்களுக்கு பிறகு விஜய் உடன் லியோ படத்தில் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தில் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளார் திரிஷா.

பொதுவாகவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய வேளையில் மிக தீவிரமாக இருக்க கூடியவர். அந்த வகையில் காஷ்மீர் சென்ற உடனே படப்பிடிப்பை தொடங்கிய லோகேஷ் கனகராஜ், ஒரே நாளில் மூன்று லொகேஷனலில் படப்பிடிப்பு நடத்தும் அளவுக்கு அதி வேகமாக படப்பிடிப்பு நடத்தி வருகிறார், காஷ்மீரில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடந்த திட்டமிட்டுள்ள லியோ பட குழுவினர், காஷ்மீரில், ஸ்ரீநகரில் உள்ள நட்சதிர ஓட்டல் ஒன்றில் விஜய், திரிஷா, லோகேஷ் கனகராஜ் உட்பட நட்சத்திரங்கள் மட்டும் அங்கே தங்கி வருகிறர்கள்.

மற்றவர்கள் அருகில் உள்ள வேறு ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள், இந்த நிலையில் காஷ்மீரில் குளிர் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது, இதனால் குளிர் தாங்க முடியாமல் தவித்து வரும், திரிஷா, விஜய் ஆகியோர் படப்பிடிப்பு இடைவேளையில் விறகுகளால் பற்ற வைத்த நெருப்பில் இருவரும் குளிர் காய்ந்து வருகிறார்கள், இதில் விஜய் ஓரளவுக்கு குளிரில் தாக்கு பிடித்து விடுகிறார், ஆனால் திரிஷா மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.

இதனால் படப்பிடிப்பில் இயக்குனர் கட் சொல்லிவிட்டு, சிறிய கேப் கிடைத்தால் கூட குளிர் தாங்க முடியாமல் அந்த கேப்பில் நெருப்பில் குளிர் காய சென்று விடுகிறாராம் திரிஷா.இதற்காகவே படப்பிடிப்பு நடக்கும் இடம் அருகில் விஜய்,திரிஷா இருவரும் குளிர் காய்வதற்காக எப்போதும் தயார் நிலையில் விறகுகளால் பற்ற வைத்த நெருப்பு எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஓவர் குளிர் காரணமாக, ஆர்ட்டிஸ்களை மிகவும் சிரம படுத்த வேண்டாம் என்பதற்காக, மிக விரைவில் படத்தை எடுத்து முடித்துவிட்டு சென்று விட வேண்டும் என திட்டமிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், 60 என கணக்கிட்டிருந்த நிலையில், அதற்கு முன்பே விரைவில் எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்துவிட்டு பேக் அப் செய்துவிட வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறார், இந்நிலையில் படப்பிடிப்பு ரெம்ப சீரியசாக சென்று கொண்டிருப்பதால், படப்பிடிப்பு தளமும் சீரியஸாகவே பார்க்க முடிகிறது என லியோ படப்பிடிப்பு தளத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றது.