நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா முதல் முதலில் ஜோடி சேர்ந்து நடித்த படம் கில்லி. இந்த படம் மிக பெரிய ஹிட் கொடுத்து. இந்த படத்தில் விஜய் – திரிஷா இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதை தொடர்ந்து, சினிமாவில் மட்டுமில்லை, நிஜத்திலும் இருவரும் நெருங்கி பழக தொடங்கினர். திரிஷா மீது கொண்ட நெருக்கத்தின் காரணமாக அடுத்தடுத்து தன்னுடைய படத்தில் திரிஷாவை நடிக்க வைக்க இயக்குனரிடம் சிபாரிசு செய்தார் விஜய்.
அந்த அளவுக்கு இவர்களின் நெருக்கம் அதிகரித்தது. கில்லி படத்தை தொடர்ந்து திருப்பாச்சி, ஆதி, குருவி என விஜய் உடன் ஜோடி சேர்ந்த திரிஷா தொடர்ந்து ஆதி, குருவி தோல்வியை தொடர்ந்து அடுத்து விஜய் உடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தும் விஜய் – திரிஷா இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். இருவரும் இன்னும் வெளியில் அடிக்கடி சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய் நீண்ட நாள் ஆசையான அரசியலில் களம் காண வேண்டும் என்பதை கடந்த உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் இருந்தே திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை களத்தில் இறக்கி தேர்தலை சந்தித்து, மக்கள் மன நிலை என்ன என்பதை தெரிந்து கொண்டார், இந்நிலையில் எதிர்காலத்தில் அரசியலில் குதிக்க இருக்கும் விஜய் புதிய கட்சியை தொடங்குவாரா அல்லது எதாவது ஒரு கட்சியில் இணைத்து கொள்வாரா என்கிற கேள்வி உண்டு.
ஆனால் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்த விஜய், அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு, தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தினால் காங்கிரஸ் கட்சியில் இணைய தயார் என்கிற கோரிக்கையை வைத்ததாக கூறப்பட்டது. மேலும் சமீபத்தில் கடந்த இரண்டு மதங்களுக்கு முன்பு பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்து கிஷோரை ரகசியமாக விஜய் சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், விஜய்யின் அரசியல் நகர்வுகள் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து வருகிறது என்றும், மேலும் புதியதாக ஒரு கட்சியை தொடங்குவதை விட, ஒரு கட்சியில் இணைந்து அந்த கட்சியை தலைமை ஏற்று நடத்துவது என்பது எளிதானாக இருக்கும் என திட்டம்மிட்டு. எம்ஜிஆர் அரசியல் வளர்ச்சிக்கு எப்படி ஜெயலலிதா உறுதுணையாக இருந்தாரோ, அதே போன்று தனக்கு நடிகை திரிஷா நிச்சயம் இருப்பார் என திட்டமிட்ட நடிகர் விஜய்.
முதலில் திரிஷாவை காங்கிரஸ் கட்சியில் இணைக்க அதன் தேசிய தலைமையிடம் நடிகர் விஜய்யே நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவை கொள்கை பரப்பு செயலாளராக நியமித்து தமிழகம் முழவதும் தனக்காக பிரச்சாரம் செய்ய வைத்த எம்ஜிஆர் போன்று, திரிஷாவை அரசியலில் களம் இறக்க முடிவு செய்துள்ளார் விஜய், மேலும் திரிஷாவும் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு ஜெயலலிதா போன்று முழு நேர அரசியவாதிகயாக மாறுவதாக நடிகர் விஜய்யிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைய இருக்கும் திரிஷாவுக்கு தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கிறது. என்பதை வைத்து தான் விஜய் அரசியலின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்கிறது நம்ப தகுந்த வட்டாரம். மேலும் அரசியல் ஆழம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தான் திரிஷாவை களம் இறக்கியுள்ளார் விஜய் என்கிறது சினிமா வட்டாரங்கள்.