நடிகர் விஜய் நடிகர் தெரிவிக்கும் அரசியல் கருத்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி அவரை மிகப் பெரிய சிக்கலிலும் கடந்த காலங்களில் மாட்டி விட்டிருக்கிறது. ஒரு முறை முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் நடிகர் விஜய் கைகட்டி மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிடும் அளவுக்கு கூட,அவரின் நிலை பரிதாபமாக பார்க்கப்பட்டது.
ஒவ்வொரு முறையும் அரசியல் ரீதியாக நடிகர் விஜய்க்கு பிரச்சனை ஏற்படும் போது சில காலம் எந்த ஒரு அரசியல் கருத்துக்களும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பார். ஆனால் அடுத்த சில நாட்களில் மீண்டும் அரசியல் கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்துவார் விஜய். பெரும்பாலும் நடிகர் விஜய் ஆடியோ தன்னுடைய புதிய படத்தின் ஒவ்வொரு ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் கருத்துக்கள் தெரிவிப்பார்.
அந்த வகையில் நடிகர் விஜய்யின் ஆடியோ வெளியிட்டு விழாவில், விஜய் என்ன பேசுகிறார் என்கின்ற பரபரப்பும் எதிர்பார்ப்பும் இருக்கும். இதனை தொடர்ந்து அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்த நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது . விஜய்க்கு சொந்தமான இடங்களில் நடந்த ஐடி ரெய்ட்க்கு பின்பு கடும் நெருக்கடிக்கு உள்ளானார் நடிகர் விஜய்.
இதன் பின்பு அரசியல் கருத்துக்களை தெரிவிப்பதை நிறுத்திக் கொண்ட விஜய். மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச்சில் கூட எந்த ஒரு அரசியல் கருத்து தெரிவிக்க தெரிவிக்கவில்லை. மேலும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச்சில் விஜய் அரசியல் கருத்து தெரிவிப்பார் என பரபரப்பாக பேசப்பட்ட நிலையில்.
அரசியல் கருத்து தெரிவித்தால் தங்களுடைய படத்திற்கு சிக்கல் ஏற்படும் என்பதால் அந்த படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஆடியோ லான்ச் நடத்தவில்லை.இந்நிலையில் தற்பொழுது விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் தயாரிப்பாளரிடம்டம் இந்தப் படத்திற்கு நிச்சயம் ஆடியோ லான்ச் நடத்த வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளார்.
இருந்தும் படத்தின் தயாரிப்பாளர் விஜய் ஆடியோ லான்ச்ல் ஏதாவது அரசியல் கருத்து தெரிவித்தால், தங்களுடைய படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுவிடும் என்று தயக்கம் காட்டி வரும் நிலையில், இம்முறை ஒரு கை பார்த்து விட வேண்டும் என்று விஜய் இருப்பதால் ஆடியோ லான்ச் கண்டிப்பாக நடத்திய ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் ஏதோ ஒரு திட்டத்துடன் தான் இவ்வாறு தயாரிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார் என்கின்றனர் சினிமா துறையினர்.