நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் நடந்த மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய். மாணவர்கள் மத்தியில் பேசுகையில் நிறைய படிங்க. அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து படிங்க என பேசி இருந்தார், இந்நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் சௌத்ரி தேவர் இந்த விவகாரம் குறித்து பேட்டி ஒன்றில் மிக கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஒரு தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை புறக்கணித்துவிட்டு விஜய் பேசியுள்ளார், அப்படியானால் ஒரு சொல்லக்கூடிய தலைவர் இடத்தில் தேவர் இல்லை என்று விஜய் சொல்கிறாரா.? அடுத்த முறை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை உச்சரிக்கவில்லை என்றால் விஜய் ரசிகராக இருக்கக்கூடிய முக்குலத்தோர் சமூகத்தினர் அவருடைய ரசிகர் மன்றங்களை நிச்சயமாக களைப்பார்கள். அது நடக்குமா.? இல்லையா.? என்று மட்டும் பாருங்கள் என சவால் விடுத்த சௌத்ரி தேவர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தவிர்த்து விட்டு ஒருவர் அரசியல் செய்தால் எங்கள் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்று தென் மாவட்டங்களில் விஜய் படம் ஓடுகிறது என்றால் அதற்கு காரணம் எங்களுடைய சமூகத்தினர் தான், உறுதியாக இந்த விவகாரத்தில் விஜய்க்கு எதிராக அவர்கள் மாறுவார்கள், மன்றங்கள் அனைத்தும் கலைக்கப்படும். அனைத்து தலைவர்களையும் பொதுவாக சொல்லியிருந்தால் நாங்கள் கேள்வி எழுப்ப மாட்டோம்.
குறிப்பிட்டு தேவரை விஜய் தவிர்த்தார் என்றால் நாங்கள் யார் என்பதை காட்ட நேரிடும், அந்த வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை உச்சரிக்காமல் விஜய் அரசியலுக்குள் வந்தால் அது மிகப் பெரிய வீழ்ச்சியை சந்திக்கும், எங்களுடைய மக்களும் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் தான். அப்படி இருக்கும்போது எப்படி விஜயை தலைவராக ஏற்றுக் கொள்வார்கள் என சௌத்ரி தேவர் மிக கடுமையாக விஜயை எச்சரித்தார்.
மேலும் பசும்பொன் முத்துராமலிக்க தேவர் மட்டுமின்றி சுதந்திர போராட்ட வீரர் வா.ஊ.சி பெயரையும் விஜய் குறிப்பிட்டு மேடைகளில் பேச வேண்டும் என பிரபல தயாரிப்பாளர் சௌத்திரி தேவர் தெரிவித்து இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் கப்பலோட்டிய தமிழன் வா.உ.சி பெயரை விஜய் குறிப்பிட்டு வசனம் பேசியுள்ளார்.
மேலும் வரும் அக்டோபர் 30 அன்று நடைபெற இருக்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் தன்னுடைய விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளில் தமிழகம் முழுவதும் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைகளுக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்த வேண்டும், என விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் புஸ்சி ஆனந்த் மூலம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் சௌத்ரி தேவர் தொடர்ந்து விஜய் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வா.உ.சி போன்ற தலைவர்களை திட்டமிட்டு புறக்கணித்தால் பின்விளைவுகள் படு மோசமாக இருக்கும் என எச்சரித்து வந்த நிலையில், விஜய் அடிபணியும் விதமாக சமீபத்தில் வெளியான லியோ படத்தில் வா.உ.சி பெயரை குறிப்பிட்டு வசனம் பேசியது, மேலும் தேவர் ஜெயந்தி விழாவுக்கு தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகள் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பசும்பொன் தேவர் சிலைக்கு மாலை அனுவித்து மாறியதை செலுத்துவதும் மட்டுமில்லாமல்,விஜய் அவருடைய வீட்டில் பசும்பொன் தேவர் உருவ படத்திற்கு மலர் தூவி மாறியதை செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.