லியோ படத்தின் கதை திருடி எடுக்கப்பட்டதா…. திருடுவதில் கூட ஒரு நேர்மை வேண்டாமா.?

0
Follow on Google News

உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போடுகிறது. லியோ திரைப்படம் வெளியாகிய முதல் நாளிலேயே அதிக வசூலை குவித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டிருந்தது. தொடர்ந்து நான்காவது நாளாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மேலும், இணையவாசிகள் பலர் நெகட்டிவ் விமர்சனங்களை மட்டுமே வாரி இறைத்து வருகின்றனர். இப்படியான சூழலில் லியோ படம் ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது விஜய் இரசிகர்களிடையே கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. உண்மையிலேயே ஹாலிவுட் படத்தின் காட்சிகள் திருடப்பட்டதா என்பதைப் பற்றி விவரமாக இங்கே பார்க்கலாம்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏற்கனவே, கைதி, விக்ரம் போன்ற அற்புதமான பிளாக்பஸ்டர் படங்கள் மூலம், ஏகப்பட்ட ரசிகர்களின் கவனத்தையும் தன்வசம் ஈர்த்த இயக்குனர் லோகேஷ், விஜயின் லியோ படத்தில் LCU இருக்குமா இல்லையா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டார். இதனாலேயே லியோ ரிலிசுக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஒருவழியாக, ரசிகர்களின் எதிர்பார்ப்பை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. பெரும்பாலான ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். லியோ படத்திற்கு யூட்யூப் சேனல்கள், சோஷியல் மீடியாக்கள் என பல்வேறு ஊடகங்கள் வழியாக நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும், திரையரங்குகளில் கூட்டம் எப்போது அலைமோதிக் கொண்டுதான் இருக்கின்றன.

இதன் விளைவாக, படம் ரிலீஸ் ஆகி நான்கு நாட்களிலேயே 400 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதனால், படக் குழுவும் தயாரிப்பு நிறுவனமும் உற்சாகத்தில் உள்ளது. அதிரடியான ஸ்டன்ட் காட்சிகள், அலறவைக்கும் ரத்தக் காட்சிகள், விறுவிறுப்பான கார் சேசிங், அதிகளவிலான சண்டைக் காட்சிகள் என படம் முழுவதும் இயக்குனர் லோகேஷின் டச் இருந்தாலும் கூட, படத்தைப் பார்த்த பலரும் ஹாலிவுட் படமான ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தை காப்பியடித்து எடுத்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், மீம்ஸ் மற்றும் ட்ரோல் என இயக்குனர் லோகேஷை இயக்குனர் அட்லீயுடன் கம்பேர் செய்து சோஷியல் மீடியாக்களில் கலாய்த்து வருகின்றனர். இது விஜய் இரசிகர்களுக்கும் மற்ற ஹீரோக்களின் ரசிகர்களுக்கும் இடையே இணையத்தில் விவாதப் போரை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், இயக்குனர் லோகேஷ் லியோ படம் ஆரம்பிப்பதற்கு முன்பு, ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்துக்கு ட்ரிப்யூட் என்பதை படத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதைக் கவனிக்காத பலரும் ‘ஹாலிவுட் படத்தை சுட்டுதான் எடுத்திருக்காங்க’ என்று கமென்ட் செய்து வருகின்றனர். அதேசமயம், படத்தின் ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டிருப்பதால், ஹாலிவுட் படக்குழுவினரிடம் அனுமதி பெற்றுதான் ரீமேக் செய்துள்ளார்கள் என்றும் கூறி வருகின்றனர். இப்படி, இரு தரப்பினரிடையே விவாதம் சூடு பிடித்துள்ள நிலையில், உரிய அனுமதி பெறாமல்தான் லோகேஷ் லியோ படத்தை உருவாக்கியுள்ளார் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

இது இணையத்தில் வைரலாகி பரபரப்பை உண்டாக்கி வருகிறது. எப்படியானாலும், அனுமதி பெறப்பட்டதா இல்லையா என்பது பற்றி இயக்குனர் லோகேஷ் வாயைத் திறந்தால்தான் தெரியும்… அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.