நடிகர் விஜய் நடிப்பில் தற்பொழுது விறு விறுப்பாக நடைபெற்று முடியும் தருவாயில் இருக்கிறது பீஸ்ட் படம். இந்த படத்தை சன் பிச்சர் தயாரிக்கிறது. விஜய் நடிக்கும் திரைப்படங்களில் ஆடியோ வெளியிட்டு விழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஆடியோ வெளியிட்டு விழாவில், விஜய் சொல்லும் குட்டி கதை மற்றும் அவரின் அரசியல் பேச்சு, அந்த படத்தின் ப்ரோமோஷன் தான்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும்.
இந்நிலையில் தற்பொழுது விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பீஸ்ட் படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா எப்போது, அதில் விஜய் என்ன பேசப்போகிறார் என தமிழக அரசியல் வட்டாரங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், பீஸ்ட் படத்தின் ஆடியோ நிகழ்ச்சி நடைபெறாது என உறுதியாகியுள்ளது. இதற்கு காரணம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பீச்சர் என தகவல் வெளியான நிலையில்,இதன் பின்னணியில் பாஜக இருப்பது தற்பொழுது தெரியவந்துள்ளது.
நடிகர் விஜய் அரசியல் வருகையில் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவர்களின் குடும்ப நிறுவனம் சன் பிச்சர் தயாரிப்பில் வெளிவர இருக்கும் பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியிட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், நடிகர் விஜய்யை பார்த்து பயப்பட திமுகவுக்கு அவசியம் இல்லை என்றும், ஆடியோ நிகழ்ச்சியை ரத்து செய்ததற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய் தான் என்று கூறப்படுகிறது.
இதற்கு முன்பு ஆடியோ நிகழ்ச்சி மற்றும் தனது திரைப்படம் வாயிலாக தொடர்ந்து மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்து வந்தார் நடிகர் விஜய். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் நெய்வேலியில் விஜய் ஈடுபட்டு கொண்டிருந்த வேலையில், சென்னையில் விஜய்க்கு சொந்தமான இடங்களில் அதிரடியாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் நெய்வேலியில் இருந்த விஜய்யை ஒரு கைதியை அழைத்து வருவது போன்று நெய்வேலியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர் வருமான வரித்துறையினர்.
இந்த வருமான வரித்துறை ரெய்டில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், அந்த முக்கிய ஆவணங்களை வைத்து நடிகர் விஜய்க்கு கடும் நெருக்கடியை பாஜக கொடுத்து வந்துள்ளது. இதனால் என்ன செய்வது என திகைத்து நின்ற விஜய் மத்திய பாஜக அரசிடம் சரண்டராகியுள்ளார். இந்த சம்பவம் நடந்து முடிந்த பின்பு அரசியல் குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை விஜய், இதற்க்கு முக்கிய காரணம் பாஜகவின் பிடியில் விஜய் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நேரில் விஜய் சந்தித்து பேசினார். இது குறித்து விஜய் மற்றும் ரங்கசாமி தரப்பில் இருந்து, எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில். பாஜக ஆதரவுடன் முதல் அமைச்சராக இருக்கும் ரங்கசாமி உடன் விஜய் சந்திப்பு குறித்து அரசியல் வட்டாரத்தில் பரப்பாக பேசப்பட்ட நிலையில், இந்த சந்திப்பில் அரசியல் ஏதும் இல்லை என பாஜகவை சேர்ந்த புதுச்சேரி அமைச்சர் நமசிவாயம் விளக்கம் கொடுத்தார்.
இந்நிலையில் பாஜக உத்தரவுப்படியின் தான் விஜய் – ரங்கசாமி சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதனால் தான் இந்த சந்திப்பு குறித்து பாஜகவை சேர்ந்த நமசிவாயம் விளக்கம் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் அரசியல் பேச முடியாதவாறு, குறிப்பாக பாஜகவுக்கு எதிராக பேசாதபடி பாஜக விரிந்த வருமான வரித்துறை ரெய்ட்
வலையில் நடிகர் விஜய் சிக்கியுள்ளார் என்றும்.
மேலும் ஆடியோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விஜய் அரசியல் பேசவில்லை என்றால், மத்திய பாஜகவுக்கு விஜய் பயந்து விட்டார் என்கிற விமர்சனம் எழும் என்பதால் தான் ஆடியோ நிகழ்ச்சியை விஜய் வலியுறுத்தலின் பெயரில் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் புதுச்சேரி பாஜக ஆதரவு முதல்வர் ரங்கசாமியை விஜய் சந்தித்ததில் வாயிலாக எதிர்காலத்தில் பாஜக ஆதரவாளராக விஜய் உருவெடுப்பர் என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.