ரஜினி, கமலுக்கு இணையாக கேப்டன் பிரபாகரன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நடிகர் விஜயகாந்தை அணுகிய, எஸ்.ஏ.சந்திரசேகர். என் மகன் விஜய்யை ஹீரோவாக வைத்து நான் எடுத்த படம் தோல்வி தழுவி, இதனால் 40 லட்சம் ரூபாய் கடனில் இருக்கிறேன், இனி என்னுடைய வீட்டை விற்று தான் கடனை கட்ட வேண்டும், நீங்க என் மகன் விஜய் உடன் இணைந்து ஒரு படம் நடித்தால், கடனையும் அடைத்து விடுவேன், என் மகன் விஜய்யும் மக்கள் மத்தியில் அறியப்படும் நடிகராக அறியப்படுவார் என எஸ் ஏ சந்திரசேகர் தெரிவிக்க.
சற்றும் யோசிக்காமல் உடனே விஜய் உடன் இணைந்து செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து கொடுத்தார் விஜயகாந்த். இந்த படத்திற்கு பின்பு விஜய் என்கின்ற ஒரு நடிகர் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். இதன் பின்பு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று ஒரு முன்னணி நடிகராக வந்தார் விஜய். அந்த வகையில் விஜய்க்கு சினிமாவில் வாழ்க்கை கொடுத்தது மட்டுமின்றி விஜய் குடும்பத்தினர் கடலில் தத்தளித்த போது, அவர்களை செந்தூரப்பாண்டி படம் மூலம் காப்பாற்றி கரை சேர்த்தவர் விஜயகாந்த்.
இந்த நிலையில் பல வருடங்களாக விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது விஜய் எட்டி கூட பார்க்கவில்லை, இதனால் தொடர்ந்து விஜய்க்கு எதிராக நன்றி இல்லாத மனிதர் விஜய் என கடும் விமர்சனம் எழுந்த நிலையில், விஜயகாந்த் மரணம் அடைந்ததை தொடர்ந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த கையில் மாலையுடன் வந்த விஜய் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டார்.
விஜயகாந்தின் உடல் இருக்கும் இடத்திற்கு செல்வதற்குள் விஜய்யை ஏராளமானோர் சூழ்ந்து கொண்டனர். இருப்பினும் காவல்துறையினர் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு விஜய்யை பாதுகாப்பாக கொண்டு சேர்த்தனர். கனத்த இதயத்துடன் விஜயகாந்தின் உடலை பார்த்த விஜய், கண்கலங்கி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.மேலும் அங்கிருந்த விஜயகாந்தின் மனைவி மற்றும் மகன்களிடம் துக்கம் விசாரித்தார். கடைசியாக அங்கிருந்து புறப்படும் போது,
விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்க்கு எதிராக, உயிரோடு கேப்டன் இருக்கும் போது எட்டி கூட பார்க்காத விஜய் இப்ப எதுக்கு வருகிறார் என எதிர்ப்பு குரலும் எழுந்தது, கூட்டத்தில் இருந்து விஜய் இருந்த இடத்தை நோக்கி செருப்பு பறந்து வந்ததது. அந்த செருப்பு விஜய் முதுகில் விழுவது போன்று ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும் விஜய் கன்னத்தில் மர்ம நபர் ஒருவர் குத்துவது போன்று மேலும் கூட்டத்தில் இருந்த ஒரு சிலர், விஜய்யை வெளியேறுமாறு கூறி முழக்கமிட்டனர். இது குறித்த வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகி வந்தது.இருந்தும் தன் மீது செருப்பு வீசப்பட்டதையும், கண்ணத்தில் குத்து விழுந்ததையும் கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டார் விஜய். பலரும் விஜய் மீது செருப்பு வீசவில்லை இது சித்தரிக்கப்பட்ட வீடியோ என்றும் தெரிவித்து வந்த நிலையில்,
தற்பொழுது விஜய் மீது செருப்பு வீசப்பட்டதை உறுதி செய்யும் விதத்தில் விஜய் ரசிகர் ஒருவர் செய்துள்ள செயல் விஜய் மானம் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. கோயம்பேடு காவல் நிலையத்தில் விஜய் மக்கள் மன்ற தென் சென்னை மாவட்ட தலைவர் அப்புனு புகார் ஓன்று கொடுத்துள்ளார் அந்த புகாரில்,கடந்த 28 /12/ 2023. அன்று நடிகர் திரு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பிற்கு துக்கம் விசாரிப்பதற்காக இரவு சுமார் 10:30 மணி அளவில் தளபதி விஜய் அவர்கள், சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் திருமண மண்டபத்திற்கு வருகை தந்திருந்த தளபதி விஜய் அவர்களின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காலணியை கழற்றி தளபதியை நோக்கி எரிந்துள்ளார்,
இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள், அவர்களின் சொந்தங்கள், மற்றும் அவர் மீது பாசத்தை வைத்துள்ள ஒட்டுமொத்த மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் அருவருக்கத்தக்க இம்மாதிரியான செயலில் ஈடுபட்ட, அந்த நபரை கண்டுபிடித்து அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் படியும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என விஜய் ரசிகர்கள் ஒருவர் புகார் தெரிவித்துள்ளது, அப்படியானால் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது உண்மை தான் என்பதை உறுதி செய்யும் விதத்தில் அமைத்துள்ளதால், செருப்பு வீச்சுக்கு உள்ளான விஜயின் மானம் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.