கீர்த்தி சுரேஷ் – திரிஷா இடையில் சிக்கி தவிக்கும் விஜய்… விஜய் எடுக்கக்போகும் முடிவு என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை திரிஷா – விஜய் இருவரும் முதல் முதலில் ஜோடி சேர்ந்து நடித்த கில்லி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, விஜய் மற்றும் திரிஷா இருவருக்குமே இந்த படத்தில் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி உள்ளது என்கின்ற பாராட்டுகளுடன் அடுத்த திருப்பாச்சி படத்தில் இவர்கள் ஜோடி சேர்ந்து நடிக்க அந்த படமும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ராசியான ஜோடி இவர்கள் என்கிற ஒரு பிம்பத்துடன் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து நடித்தனர் விஜய் – திரிஷா ஜோடி.

விஜயுடன் தொடர்ந்து ஜோடி சேர்ந்து நடித்து வந்த திரிஷா குருவி படத்திற்கு பின்பு விஜய் உடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைக்கவில்லை, இதற்கு காரணம் திரிஷா பற்றிய கிசு கிசுவால் விஜய் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை தான் என கூறப்படுகிறது.இந்நிலையில் 14 வருடங்களுக்குப் பின்பு தற்பொழுது மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய் உடன் சோடி சேர்ந்துள்ளார் திரிஷா.

கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் மார்க்கெட் இழந்து வீட்டிலே முடங்கி இருந்த நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். திரிஷா மீண்டும் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு வருவதற்கு விஜய்யின் உதவியை நாடியுள்ளார், உடனே இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் சிபாரிசு செய்து புதிய படத்தின் தனக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் விஜய்.

இந்நிலையில் ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் கிசு கிசுக்கபட்டு வரும் நடிகர் விஜய் நீலாங்கரை வீட்டின் அருகில் விஜய் நண்பர் சஞ்சய் வீட்டின் மாடியில் கீர்த்தி சுரேஷ் குடியிருந்து வருவதாகவும், கீர்த்தி சுரேஷுக்கு ஒரு கார்டியன் போன்று விஜய் செயல்படுவதாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அதே விஜய் குடியிருக்கும் நீலாங்கரை வீட்டின் அருகிலே நடிகை திரிஷா சுமார் 30 கோடி மதிப்பில் புதிய பங்களா ஒன்று வாங்கியுள்ளார்.

கடந்த சில காலமாகவே விஜய்க்கு மிக நெருக்கமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வரும் நிலையில், தற்பொழுது நடிகை த்ரிஷாவும் விஜய் உடன் மீண்டும் நெருக்கமாக பழகி வருவது கீர்த்தி சுரேஷுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது, நடிகர் விஜய் உடன் பைரவா, சர்க்கார் ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்த பின்பு விஜய் உடன் நெருக்கமாக இருந்து வந்தாலும் கூட அடுத்தடுத்து விஜய் நடித்த படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷ்க்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தற்பொழுது விஜய் சிபாரிசில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் திரிஷாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால், அடுத்து விஜய் நடிக்கும் அட்லீ இயக்க இருக்கும் படத்தில் தனக்கு வாய்ப்பு தரவேண்டும் என விஜயை நச்சரித்து வருகிறாராம் கீர்த்தி சுரேஷ். இதனால் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கும் புதிய படத்தில் விஜய் சிபாரிசில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது என்கின்றது கோலிவுட் வட்டாரங்கள்.

அதே போன்று, தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் உடன் ஜோடி சேர்ந்துள்ள நடிகை திரிஷா, இந்த படம் மிக பெரிய அளவில் பெற்று, கில்லி படத்தின் வெற்றியை வைத்து அடுத்தடுத்து விஜய் உடன் தொடர்ந்து ஜோடி சேர்ந்து நடித்தது போன்று, அதே பார்முலாவை பின்பற்றி விஜய்யின் சிபாரிசில் அடுத்தடுத்து அவருடைய படத்தில் இடம் பெற்றுவிட்ட வேண்டும் என திட்டமிட்டுள்ளாராம் திரிஷா, இப்படி கீர்த்தி சுரேஷ் – திரிஷா இருவருக்கும் இடையில் சிக்கி தவித்து வருகிறார் விஜய் என கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடதக்கது.