நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் அன்று திரைக்கு வர இருக்கும் துணிவு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. அதேபோன்று பொங்கல் அன்று விஜய் நடிப்பில் வெளியாகும் வாரிசு படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையையும் வாங்கி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்.
ஆனால், பீஸ்ட் படத்தின் போது உதயநிதி ஸ்டாலின் உடன் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக தன்னுடைய வாரிசு படத்தை எந்த ஒரு காரணத்திற்காகவும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு விற்பனை செய்யக்கூடாது என்று படத்தின் தயாரிப்பாளருக்கு உத்தரவு போட்டுள்ளார் நடிகர் விஜய். இதனை தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் லலித்திடம் வாரிசு படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வாரிசு படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ்க்கு விற்பனை செய்யவிடாமல், தான் நினைத்ததை சாதித்து விட்டதாக கருதிய நடிகர் விஜய்க்கு தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் தரப்பில் இருந்து ஆப்பு மேல் ஆப்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பொங்கலை ஒட்டி வெள்ளி கிழமை விஜய் நடித்த வாரிசு வெளியாகிறது. இதற்கு முந்தைய நாள் வியாழக்கிழமை அஜித்தின் துணிவு படம் வெளியாவதற்கு திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் தற்பொழுது வாரிசு படத்தை தனக்கு விற்பனை செய்யாத கோபத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின், வாரிசு படம் வெளியாகும் வெள்ளியன்று, தான் வாங்கிய துணிவு படத்தையும் வெளியிடுவதற்கு உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதனால் பெரும்பாலான திரையரங்குகள் வாரிசு படத்தை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருவதாகவும், அதிக திரையரங்குகளில் துணிவு படத்தை வெளியிட போட்டி போட்டு முன்வந்துள்ளனர்.
அதே நேரத்தில் வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை வாங்கியுள்ள லலித், அந்த படத்தை திரையரங்குகளில் விற்பனை செய்வதற்கான வேலையை தொடங்கி, அட்வான்ஸ் பணத்தை வாங்குவதற்கு ஒவ்வொரு திரையரங்கு உரிமையாளர்களிடம் பேசி வருகிறார். ஆனால் பெரும்பாலான திரையரங்குகள், இந்த படத்தை நேரடியாக உங்களிடம் வாங்க முடியாது, நீங்கள் உதயநிதி ஸ்டாலினிடம் விற்பனை செய்யுங்கள், அவரிடம் இருந்து நாங்கள் வாங்கி வெளியிடுகிறோம் என தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. வாரிசு படத்தை லலித்திடம் விற்பனை செய்யும் போதே, இந்த படத்தை எந்த ஒரு காரணத்திற்காகவும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்ஸ்க்கு ஏரியா வாரியாக கூட உள் விற்பனை செய்ய கூடாது என விஜய் கண்டிஷன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் துணிவு மற்றும் வாரிசு படத்தின் விற்பனை தொடங்கப்பட்டுள்ள நிலையில்.
அஜித் நடிக்கும் துணிவு படம் படு ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வாரிசு படத்தை வாங்க பெரும்பாலும் யாரும் முன் வரவில்லை.இதனால் உதயநிதி ஸ்டாலினை எதிர்க்க நினைத்த நடிகர் விஜய் மண்ணை கவ்வி தன்னுடைய படத்தை எப்படி ஓட வைப்பது என கதறி கொண்டிருக்கிறார். வாரிசு படத்தை ஓட வைக்க வேண்டும் என்றால் உதயநிதி ஸ்டாலினிடம் சரண்டராக வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் விஜய்.
வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை வாங்கியுள்ள லலித். ஏரியா வாரியாக சில ஏரியாக்களை உதயநிதி ஸ்டாலினுக்கு விற்பனை செய்யவேண்டும் அல்லது வாரிசு படத்தின் மொத்த தமிழ்நாடு உரிமையையும் உதயநிதி ஸ்டாலினுக்கு விற்பனை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாரிசு படத்தை பொங்கல் அன்று வெளியிட வேண்டும் என்றால் விஜய் தன்னுடைய கோபத்தை ஓரமாக வைத்து விட்டு உதயநிதி உடன் கை கோர்த்தால் மட்டுமே தப்பிக்க முடியும் என்கிறது சினிமா வட்டாரங்கள்.