சமீப காலமாக சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது, நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என நடிகர் சரத்குமார் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சரத் குமார் பேசியது குறித்து நடிகர் நெப்போலியன் பேட்டி ஒன்றில் கூறுகையில்,
திரைப்படத்துறையில் ஒவ்வொருத்தரும் அவர்கள் செய்கின்ற சாதனைகள், திறமைகள், உழைப்புக்கு ஏற்றார் போல் திரைப்பட துறையைச் சார்ந்தவர்களும், ரசிக பெருமக்களும், பொதுமக்களும் கொடுக்கும் ஒரு பட்டம் தான் சினிமா கலைஞர்களுக்கு ஒவ்வொரு விதமான பட்டங்களை கொடுக்கிறார்கள், ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒரு பட்டம் உண்டு, மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று சொன்னால் அது எம்ஜிஆர் மட்டும்தான்.
நடிகர் திலகம் என்று சொன்னால் அது சிவாஜி சார் மட்டும்தான். காதல் மன்னன் என்று சொன்னால் அது ஜெமினிகணேசன் மட்டும். தான் நடிகவேள் என்று சொன்னால் அது எம் ஆர் ராதா மட்டும்தான், கலைவாணர் என்று சொன்னால் அது என் எஸ் கே அவர்கள் மட்டும்தான். இது போன்று அந்த காலத்து நடிகர்களுக்கு பட்டங்கள் உண்டு. அதேபோன்று இன்றைய தலைமுறையில் இருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் ஒரு பட்டம் உண்டு.
சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அது ரஜினிகாந்த் மட்டும்தான், உலக நாயகன் என்று சொன்னால் அது கமலஹாசன் மட்டும் தான், புரட்சி கலைஞர், கேப்டன் என்று சொன்னால் அது விஜயகாந்த் அவர்கள் மட்டும்தான். அதுபோன்று ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒரு பட்டம் இருக்கின்ற பொழுது, என்னுடைய இனிய நண்பர் சரத்குமார் அவர்களுக்கும் ஒரு பட்டம் இருக்கிறது, சுப்ரீம் ஸ்டார் என்று சொன்னால் அது சரத்குமார் அவர்கள் மட்டும்தான்.
அப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டம் இருக்கும் பொழுது அந்த பட்டத்தை மற்றொருவருக்கு பொருத்தி பார்த்தால் பொருந்தவே பொருந்தாது, அதனால் அந்த டாபிக்கவே விட்டுவிட்டு, சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் தமிழ்நாட்டில், ஏன்.? இந்தியாவிலேயே ரஜினி சார் ஒருத்தர் மட்டும் தான் என சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு விளக்கம் அளித்த நெப்போலியன், மேலும் விஜய் குறித்து பேசிய மற்றொரு தகவல் ஓன்று வைரலாகி வருகிறது/
அதில்,போக்கிரி படத்தின் நான் நடித்த போது, ஒரு சம்பவம் நடந்தது, அதில் இருந்து நானும் விஜய்யும் பேசுவது கிடையாது, அவர் படங்கள் எதையும் நான் பார்ப்பது கிடையாது. விஜய் ரெடினா நானும் பேசுறதுக்கு ரெடி, இதை நீங்க விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். ஏன்னா விஜய் அவரோட அப்பா அம்மா கிட்டயே பேசமாட்றாரே. விஜய் தன்னோட அப்பா அம்மா கிட்டயே பேசிக்கிறது இல்லனு எல்லோரும் சொல்றாங்க.
அமெரிக்கா வரை இந்த செய்தி வந்திருக்கு. அது உண்மையா? பொய்யா? என்று கூட எனக்கு தெரியாது. முதல்ல அவரோட அப்பா அம்மா கூட சமரசம் ஆகட்டும் என நடிகர் விஜய்க்கு இந்த பேட்டி மூலம் அறிவுரை வழங்கியுள்ளார் நடிகர் நெப்போலியன்.