எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், என தொடர்ந்து தற்பொழுது அஜித் – விஜய் என சினிமாவின் இன்றைய தலைமுறையின் கடும் போட்டியாளராக திகழ்ந்து வருகின்றவர் விஜய் – அஜித், இதில் விஜய் இடைவிடாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வரக்கூடியவர், ஆனால் அஜித் தீடிரென சினிமாவுக்கு கேப் விட்டுவிட்டு பைக் டூர் என சென்று விடுவார், இப்படி சினிமா தொழிலை விருப்பம் இல்லாமல் அஜித் செய்து வருகிறாரா.? என்கிற விமர்சனம் கூட எழுந்துள்ளது.
பொதுவாக சினிமா நடிகர்கள் தங்களுடைய உடலை கட்டு கோப்பாக வைத்திருக்க வேண்டும், அந்த வகையில் விஜய் அவருடைய உடலை இப்படி கட்டு கோப்பாக மைண்டைன் செய்து வருவதற்கு, அவருடைய உணவு பழக்க வழக்கம் மற்றும் இடைவிடாமல் செய்து வரும் உடல் பயிற்சியும் தான், ஆனால் அஜித் தன்னுடைய உடலை அவ்வாறு மைண்டைன் செய்வது இல்லை என்பது அஜித் திரையில் தோன்றும் காட்சிகளே உணர்த்துகிறது.
மேலும் விஜய் உடன் அஜித்தை ஒப்பிடும் போது, விஜய்யின் நடனம், சண்டை காட்சிகள் என எதற்கு ஈடு கொடுக்க முடியாதவர் அஜித் என்கிற விமர்சனமும் இருந்தாலும் கூட, எங்க தல நடிக்க வேண்டாம், டான்ஸ் ஆட வேண்டாம், திரையில் தோன்றினாலே போதும், அவர் நடந்து வந்தாலே போதும், அந்த படத்தை நாங்கள் ஓட வைத்து விடுவோம் என அஜித்துக்காக சில்லறையை சிதற விடும் ரசிகர்கள் ஏராளம்.
மேலும் அஜித் போன்று ஒரு நடிகர் அடிக்கடி பைக்கை எடுத்துவிட்டு ஓர் சுற்ற சென்று விடுவது, சினிமாவில் நடிக்க விருப்பமே இல்லாதது போன்று, சினிமா துறையை சேர்ந்தவர்கள் வலுக்கட்டாயமாக இழுத்து வந்து அஜித்தை நடிக்க வைப்பது போன்று வேறு எந்த நடிகரும் இருந்தாலும் கூட சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் சென்று விடுவார்கள். அஜித் பொது நிகழ்வுக்கு வருவதில்லை, ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வருவதில்லை,
சினிமாவை சீரியசாக எடுத்து கொள்வதில்லை என்றாலும் கூட அஜித் படம் வசூல் சாதனை படைக்குது என்றால், விஜய்க்கு சக போட்டியாளராக அஜித் இருப்பதால் தான், அந்த வகையில் அஜித் பப்ளிசிட்டியை அஜித் விரும்பவில்லை என்று காட்டி கொண்டாலும், கூட விஜய் குறித்து எதாவது ஒரு செய்தி வந்தால் தன்னை பற்றி ஒரு செய்தியை கசிய விட்டு தன்னுடைய இருப்பை காட்டி கொண்டு வருகின்றவர் அஜித்.
அந்த வகையில் அஜித்தை விட நடிப்பில் அதிக திறமை உள்ள விக்ரம் நடித்த ஒரு சில படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் சினிமாவில் அட்ரெஸ் இல்லாமல் இருக்கிறார் என்றால் அவருக்கு விஜய் போன்ற வலுவான ஒரு போட்டியாளர் இல்லை என்பது தான், அந்த வகையில் விஜய்யின் போட்டியாளராக அஜித் இருக்கும் வரை அவருக்கான சினிமா மார்கெட் மற்றும் அவருடைய படமும் வசூலை குவிக்கும்.
இந்நிலையில் தற்பொழுது விஜய் அரசியல் கட்சியை தொடங்கி, தற்பொழுது கைவசம் இருக்கும் படங்களில் மட்டுமே நடித்து விட்டு சினிமாவில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக விஜய் அதிரடியாக அறிவித்துள்ளது அஜித்தின் சினிமா வாழ்க்கைக்கு ஆப்பு வைக்கும் விதத்தில் அமைத்துள்ளது, அந்த வகையில் விஜய் சினிமாவை விட்டு விலக இருப்பதால், அஜித் நடிக்கும் படங்கள் இனிவரும் காலங்களில் சும்மா வந்து கை கால்களை ஆட்டிவிட்டு படத்தை ஒட்டி விடலாம் என்பது நடக்காத செயல் என்கின்றது சினிமா வட்டாரங்கள்.
அந்த வகையில் அஜித் இனி சினிமாவில் சீரியசாக எடுத்து வேலை செய்யவேண்டும், அல்லது விருப்பம் இல்லை என்றால் முழு நேரமும் பைக்கை எடுத்து வழக்கம் போல் ஊர் சுற்ற கிளம்பி விடலாம் என விமர்சனம் எழுந்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.