வழக்கமாக ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் மட்டும் அரசியல் கருத்துக்களை தெரிவித்து விட்டு அடுத்த படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நடிகர் விஜய், சமீப காலமாக மாணவர்கள் சந்திப்பு, விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சந்திப்பு, அவருடைய இயக்கத்தினர் மூலம் தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதையை செலுத்துவது, குறிப்பாக காமராஜர் பிறந்த தினத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், ‘தளபதி விஜய் பயிலகம்’ ஆரம்பிக்கப்பட உள்ளது என்கிற அதிரடியை தொடங்கியுள்ளார் விஜய்.
விஜய்யின் இது போன்ற நடவடிக்கைகளால் விஜய் அரசியலுக்கு என்ட்ரி கொடுப்பதை உறுதி செய்துள்ளது, மேலும் இதற்கு முன்பு விஜய் பல காலகட்டத்தில் அரசியலில் என்ட்ரி கொடுக்க முன்னெடுப்புகளை மேற்கொண்ட போது, அந்ததந்த காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்தவர்களால், விஜய் தட்டி உட்கார வைக்கப்பட்டார், அதில் ஒரு சம்பவம் தான் தலைவா படத்தின் போது விஜய் கை கட்டி ஜெயலலிதாவிடம் கெஞ்சி வீடியோ வெளியிட்ட சம்பவம்.
இந்நிலையில் இதற்கு முன்பு விஜய்க்கு எதிராக அரசியல் ரீதியாக வந்த பிரச்சனைகளை துணிந்து எதிர்கொள்ள முடியாத விஜய், அரசியலில் இறங்க துணித்துள்ளது பின்னனி குறித்த சில தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலின் அரசியல் வியூக வகுப்பாளராக பிரபலமாக அறியப்பட்டவர் பிரசாந்த் கிஷோர், இவர் வெற்றி பெறுவதற்கு எந்த கட்சிக்கு வாய்ப்பு இருக்கிறதோ அந்த கட்சின் அரசியல் ஆலோசகராக ஒப்பந்தமாகி, அந்த கட்சியின் வெற்றிக்கு காரணம் தான் என்பதை வெளிப்படுத்துகின்றவர்.
அந்த வகையில் குஜராத்தில் முன்றாவது முறையாக மோடி முதலமைச்சராக வெற்றி பெற்ற போதும், 2014 பிரதமராக மோடி வெற்றி பெற்ற போது, பாஜகவின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர், இந்த வெற்றிக்கு நான் தான் காரணம் என பாஜகவிடம் பிரசாந்த் கிஷோர் நடந்து கொண்ட அணுகுமுறை அவர்களுக்கு பிடிக்காமல் கழட்டி விட்டனர்.
இதனை தொடர்ந்த்து அடுத்து நடந்த உத்திரபிரதேச சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை உத்திரபிரதேசத்தில் ஆட்சியில் அமைத்தே தீருவேன் என்கிற சபதத்துடன் காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆலோசகராக பணியாற்றினார் பிரசாந்த் கிஷோர், ஆனால் அவர் பணியாற்றிய அந்த தேர்தலில், 403 தொகுதிகளை கொண்ட உ.பி. மாநிலத்தில் 7 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் வென்றது. இது பிரசாந்த் கிஷோர் வியூகத்திற்கு கிடைத்த பலத்த அடியாக அப்போது பார்க்க பட்டது.
இதன் பின்பு சுதாரித்து கொண்ட பிரசாந்த் கிஷோர், இனி யார் தங்களை அணுகினாலும் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதா என்று ஆய்வு செய்த பின்பு தான் அரசியல் ஆலோசகராக கமிட்டாக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோர், அதன் பின்பு ஆந்திராவில் நடந்த ஜெகன் மோகன் ரெடி, தமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் மம்தா என வெற்றி வாய்ப்பு உள்ள கட்சிகளுக்கு அரசியல் வியூகங்களை வகுத்து அந்த வெற்றியை பங்கு போட்டு கொண்டார் பிரசாந்த் கிஷோர்.
இந்நிலையில் தற்பொழுது விஜய் மாணவர் சந்திப்பு, தளபதி விஜய் பயிலகம் என செயல்பாடு பின்னனியில் இருந்து வியூகங்களை வகுத்து கொடுப்பது பிரசாந்த் கிஷோர் என கூறப்படுகிறது, ஏற்கனவே விஜய் பிரசாந்த் கிஷோரை இரன்டு முறை சந்தித்து பேசிய நிலையில் அவர் வகுத்து கொடுக்கும் வியூகங்கள் படி விஜய் செயல்பட்டு வருவதாகவும், மேலும் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு வியூகம் வகுத்து கொடுத்து முதல்வராக்கியது போது விஜய்க்கு வாய்ப்பு இருக்கிறது என பிரசாந்து கிஷோர் விஜய்க்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் விஜய்யின் தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் வேலை செய்ய சுமார் 400 கோடி வரை பிரசாந்த் கிஷோர் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், விஜய் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை படி வரும் சட்டசபை தேர்தலில் களம் இறங்கினால் அரசியலில் மண்ணை கவ்வும் சூழல் தான் ஏற்படும்,
மேலும் அரசியலில் களம் இறங்கினால் , அவர் எதிர்த்து அரசியல் செய்யும் கட்சிகளில் இருக்கும் விஜய் ரசிகர்கள் பெரும்பாலானவர் அவருக்கு எதிராக திரும்புவார்கள், இதனால் தேர்தல் தோல்விக்கு பின்பு சினிமாவுக்கு விஜய் வந்தாலும் சினிமாவில் அவருடைய மார்க்கெட் மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்,
பிரசாந்த் கிஷோர் இல்லாமல் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் 66 தொகுதிகளில் வெற்றி பெற்றவர், அந்த அளவுக்கு அவருக்கான கட்டமைப்பு இருந்தது, ஆனால் தமிழகத்தில் விஜய் சார்பில் ஒரு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெரும் அளவுக்காவது கட்டமைப்பு உள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. ஆகையால் பிரசாந்த் கிஷோரை விஜய் அரசியலில் இறங்கினால் அவருடைய 400 கோடி நாமம் தான் என எச்சரிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.