வருசத்துக்கு 400 கோடி…ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த பிரியாணி விருந்துக்கு இது தான் காரணமாம்..

0
Follow on Google News

நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தை கடை கோடியில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் கொண்டு சென்று அந்த இயக்கம், தமிழக முழுவதும் பரந்து விரிந்து முழுமை அடைய வேண்டும் என்பதில் தீவிரமாக மக்கள் மன்ற நிர்வாகிகள் மூலம் செய்யப்பட்டு வருகிறார். தொடர்ந்து சென்னையில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அடிக்கடி ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு பிரியாணி விருந்தும் கொடுத்து வருகிறார்.

தன்னுடைய ரசிகர்களை அழைத்து பிரியாணி விருந்து கொடுக்கும் போது, அந்த ரசிகர் ஊருக்கு சென்று இந்த நிகழ்வை பெருமையாக பல இடங்களில் பேசுவான், மேலும் அவன் விஜய் மக்கள் மன்றத்தில் குறைத்து 50 நபர்களையாவது இணைத்து மன்றத்தை வலுப்படுத்துவான், இப்படி ரசிகர்களை உசுப்பேத்தி விடுவதற்காக தான் விஜய் ரசிகர்களை அடிக்கடி அழைத்து பிரியாணி விருந்து கொடுப்பதாக கூறப்படுகிறது.

தற்பொழுதும் கூட விஜய் மக்கள் மன்ற தலைவர் புஸ்லி ஆனந்த் தொடர்ந்து விஜய் ரசிகர்களை சந்தித்து விஜய் அரசியல் வருகை குறித்து பேசி உசுப்பேத்தி ரசிகர்களை துடிப்புடன் வைத்து வருவதில் திறன்பட செய்து வருகிறார் என்றே கூறப்படுகிறது. அதே நேரத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜய்யின் அரசியல் பிரவேசம் இருக்காது, என்றும் மேலும் இதற்கு முன்பு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்து வந்த விஜய்.

அவருடைய மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் பொழுது வருமானவரி துறை அதிகாரிகள் அவருக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனைக்கு பின்பு அரசியல் குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல், குறிப்பாக பாஜக பற்றி வாயே திறக்காமல் கப் சிப் ஆனார் விஜய். இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் என்ன நடக்கும் என்பதை நன்கறிந்தவர் விஜய். அதனால் நாடாளுமன்ற தேர்தலை அமைதியாக கடந்து சென்று விடுவார் விஜய் என எதிர்ப்பார்க்கப்டுகிறது.

அதே நேரத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ஒவ்வொரு படம் வெளியாகும் பொழுது அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது, இந்த நிலையில் நடிகர் விஜய்யின் சமகால நடிகராக அவருக்கு இணையாக அதே உயரத்தில் ரசிகர் பலத்துடன் இருக்கும் அஜித்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் அரசியல் ரீதியாக வருவதில்லை. இதற்கு காரணம் எந்த ஒரு சூழலிலும் அரசியல் குறித்து அஜித் பேசாதது தான் காரணம்.

ஆனால் விஜய் அடுத்த சில நாட்களில் கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்க போவது போன்று தொடர்ந்து அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் சிக்குகின்றவர். மேலும் அதனால் ஏற்படும் சர்ச்சைகளால் தன்னுடைய படத்திற்கு வரும் எதிர்ப்புகள் அந்த படத்தின் ப்ரோமோசனுக்கு உதவும் என்கின்ற வகையில் வேண்டுமென்றே கூட விஜய் இது போன்ற அரசியல் சர்ச்சைகளில் சிக்குகிறார் என்கிற குற்றச்சாட்டும் சினிமா வட்டாரத்தில் உண்டு.

இந்நிலையில் நடிகர் விஜய் தற்பொழுது ஒரு படத்திற்கு சுமார் 130 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார், அடுத்த அவருடைய படத்திற்கு 150 கோடி சம்பளம் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் தயாராக இருக்கிறது. இந்த நிலையில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலின் பொழுது சுமார் 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக விஜய் நிச்சயம் தமிழ் சினிமாவில் இருப்பார்.

அப்பொழுது வருடத்திற்கு இரண்டு படம் நடித்தாலே சுமார் 400 கோடி சம்பளம் வருவாய் ஈட்டி தரும் சினிமா துறையை விட்டு விட்டு அவர் அரசியலுக்கு வருவதற்கு ஒன்றும் முட்டாள் இல்லை என்றும், மேலும் இதற்கு மும்பு அரசியல் பிரவேசம் எடுத்து பலத்த அடி வாங்கியுள்ள கமல், ரஜினி ஆகியோரை பார்த்து பாடம் கற்று கொண்ட விஜய், இதற்கு மும்பு ரஜினி சுமார் 20 வருடங்களுக்கு மேலாக இதோ அரசியலுக்கு வருகிறார், அதோ வருகிறார் என தன்னுடைய ரசிகர்களை துடிப்புடம் இருக்க வைத்து.

அடுத்தடுத்து படங்களை வெளியிட்டு தன்னுடைய சினிமா மார்க்கெட்டை சரிய விடாமல் பார்த்து கொண்டது போன்று, இனி வரும் காலங்களில் சுமார் வருடத்திற்கு சுமார் 400 கோடி வருவாயை ஈட்டி தரும் சினிமா துறையை விட்டு விட்டு விஜய் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார் விஜய் என்றும், அதனால் காலம் கடந்து ரஜினி ரசிகர்களுக்கு ரஜினி கொடுத்த ஆல்வாவை தான் விஜய் அவருடைய ரசிகர்களுக்கும் கொடுக்க இருக்கிறார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.