அரசியல் வருகை குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட விஜய், ஒப்பந்தம் செய்துள்ள படங்களை நடித்துக் கொடுத்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் 2026 ஆம் தேர்தலில் இலக்கு என்றும் தொடர்ச்சியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். மேலும், நாட்டில் ஊழல் அதிகரித்து விட்டதாகவும், மதவாதம் மூலம் மக்களை பிளவுபடுத்தும் சக்திகள் அதிகரித்து விட்டதாக விஜய் தெரிவித்து இருந்தார்.
விஜயின் அரசியல் வருகைக்கு ஏராளமான ஒரு ஆதரவு தெரிவித்திருந்தாலும் சிலர் எதிர்மறையான கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைக்கத்தான் செய்கின்றனர். அந்த வகையில் இயக்குனர் அமீர், ஊழல் அதிகரித்திருப்பதாக கூறும் விஜய், ஏன் கடந்த காலங்களில் சரியாக வருமான வரியை கட்டவில்லை? இன்று ஊழலை எதிர்க்கும் விஜய் அன்று வருமானவரி செலுத்தாமல் இருந்தது சரியா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் “விஜய் வெளியிட்டிருந்த அறிக்கையில் மதவாதம் மற்றும் ஊழலை எதிர்க்க போகிறேன் என்று தெரிவித்திருந்தார். முதலில் ஊழலையும் மதவாதத்தையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பதே தவறு என தெரிவித்த அமீர். ஊழலும் மதவாதமும் வேறு வேறு. ஊழல் அதிகரித்துக் கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் அதை சட்டரீதியாக கையாண்டு தீர்வு கண்டுவிடலாம்.
ஆனால் நாட்டில் மதவாதம் அதிகரிக்கும் போது அங்கு ஜனநாயகம் என்பது இருக்காது மாறாக சர்வாதிகாரம் தலை தூக்க ஆரம்பிக்கும். ஊழலைப் பற்றி பேசும் விஜயின் கடந்த கால நிகழ்வை எடுத்துக் கொள்வோம். 2012 ஆம் ஆண்டில் விஜய் இங்கிலாந்தில் இருந்து கார் வாங்குகிறார். இறக்குமதி செய்யப்பட்ட கார் என்பதால் அதற்கு வருமான வரி அதிகமாக கட்ட வேண்டியிருக்கிறது. காரின் மீதான வரியை குறைக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார் விஜய்.
விஜயின் மனுவிற்கு நீதிமன்றம் என்ன சொன்னது தெரியுமா? “நடிகர்கள் திரை உலகில் மட்டும் ஹீரோவாக இருப்பது பெரிய விஷயம் அல்ல நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருக்க வேண்டும். உங்களைப் போன்றவர்கள் கட்டும் வரி தான் வறுமையில் வாடும் மக்களின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது. அதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று பதிலளித்திருந்தது.
அன்று ஆடம்பர கார் வாங்கிய விஜய், வரி கட்டுவதில் மிச்சம் பிடிக்க நினைத்தது ஊழலா இல்லையா? இதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி அவரது பிகில் படத்தின் போது வருமானவரித்துறையினர் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, அவர் புலி படத்திற்கு வாங்கிய சம்பளத்தில் ஐந்து கோடி ரூபாயை கணக்கு காட்டாமல் இருந்த ஆவணம் வெளிவந்தது.
வரி செலுத்தாமல் பதுக்கி வைத்திருந்த பணத்துக்கு எல்லாம் அபராதம் போட்டு அதை உடனடியாக கட்டுமாறு உத்தரவிடப்பட்டது. விஜய்யும் அதை கட்டினார். இதையெல்லாம் அவரை குற்றம் சாட்டுவதற்காக சொல்லவில்லை. ஊழல் என்பது எங்கிருந்து தொடங்குகிறது. தனிமனிதனிடமிருந்து தான் தொடங்குகிறது. நீண்ட காலமாக அரசியலில் களம் இறங்க திட்டமிட்டு வரும் விஜய், இது போன்ற விஷயங்களில் எல்லாம் சரியாக இருந்திருக்க வேண்டும்.
அதேபோல் மதவாதத்தை எதிர்ப்பவர் 2024 ஆம் தேர்தலில் போட்டியிட்டு இருக்க வேண்டும். மதவாதத்தை எதிர்ப்பவர் இப்படி அமைதியாக இருக்கக் கூடாது ஒரு தலைவன் என்பவன் வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்ட யோசிக்க வேண்டும் என்று இயக்குனர் அமீர் விஜய்யை நோக்கி சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில். அமீர் கருத்தை வரவேற்று, நீயே பெரிய டுபாக்கூர்… நீ நாட்டை திருத்த போறியா..? என மக்களும் விஜய் அரசியல் அறிவிப்பை கேலி செய்து வருவதை பார்க்க முடிகிறது.