பொங்கல் பண்டிகைக்கு திரையில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜ் தயாரித்துள்ளார். பொதுவாக பல தயாரிப்பாளர்கள் முகம் மீடியாவில் பெரிய அளவில் பேசப்படுவது இல்லை. குறிப்பாக இன்றைய தமிழ் சினிமாவில் மிக பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் லைக்கா நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் சுபாஷ் கரண் கூட சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு பின்பு தான் பிரபலமாக அறியப்பட்டார்.
இப்படி பல படங்கள் தமிழில் தயாரித்தும் அறியப்படாத பல தயாரிப்பாளர்கள் இருக்கையில், வாரிசு ஒரே படத்தில் தமிழகத்தில் மிக பிரபலமாக அறியப்பட்டவர் அப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ், இதற்கு காரணம் விஜய் தான் தமிழகத்தில் நம்பர் ஒன், அவர் தான் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என சர்ச்சைக்குரிய வகையில் தில் ராஜ் பேசியது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இரண்டு குழந்தைக்கு தகப்பனான தில்ராஜ் முதல் மனைவி கடந்த 2017ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைத்தார், அப்போது தில் ராஜுக்கு 49 வயது. மனைவி இறந்த அடுத்த இரண்டு வருடத்தில் தில் ராஜ் இரண்டாவது திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார் அவரது மகள் ஹர்ஷிதா ரெட்டி, மகள் ஆசைக்காக தேஜஸ்வினிஎன்கிற பெண்ணை திருமணம் செய்ய முன் வந்தார் தில் ராஜ்.
தில் ராஜ் மகள் ஹர்ஷிதா ரெட்டிக்கு திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. பேத்தி முன்னிலையில் கடந்த 2019ம் ஆண்டு குடும்பத்தினர் மட்டும் பங்கேற்ற தில் ராஜ் திருமணம் நடைபெற்றது, இதனை தொடர்ந்து தன்னுடைய 51 வயதில் இரண்டாவது மனைவி மூலம் ஆண் குழந்தைக்கு தந்தையானார் தில் ராஜ். வாரிசு படத்தின் படப்பிடிப்பின் போது தில்ராஜ் குழந்தையுடன் விஜய் இருக்கும் புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.