அட்லீ – அஜித் ரகசிய சந்திப்பு… இனி அட்லீ மூஞ்சிலே முழிக்க மாட்டார் விஜய்.. என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

இன்றைய தமிழ் சினிமாவில் சமகால போட்டியாளராக இருந்து வருகின்றவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்குமே அவரவர்களுக்கு விருப்பமான இயக்குனர்கள் உண்டு, அந்த வகையில் நடிகர் அஜித்துக்கு மிக விருப்பமான இயக்குனராக வலம் வருகின்றவர்கள் சிறுத்தை சிவா மற்றும் எச் வினோத், பொதுவாக தங்களின் விருப்பமான இயக்குனர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகின்றவர்கள் நடிகர் அஜித்.

அந்த வகையில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் தொடர்ந்து மூன்று படங்கள் நடித்துள்ளார் அஜித், மேலும் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ந்து நான்கு படங்கள் நடித்துள்ளார்.மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் இனிவரும் காலங்களில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்நிலையில் இயக்குனர் அட்லி இதுவரை தமிழ் சினிமாவில் நான்கு படங்கள் மட்டுமே இயக்கி உள்ளார். அதில் மூன்று படம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியானது, தற்பொழுது ஹிந்தியில் ஜவான் திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் அட்லி, இந்த படத்தை முடித்துவிட்டு விஜயை வைத்து மீண்டும் புதிய படத்தில் இணைகிறார்.

விஜய்யின் விருப்பமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் அட்லி, தற்பொழுது அஜித் துணிவு படத்திற்கு பின்பு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு இயக்குனர் அட்லி இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் வெளியானது. இந்த படத்தை லைக்கா தயாரிக்க இருப்பதாகவும். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்க இருப்பதாக கூடுதலாக தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் அஜித் மற்றும் இயக்குனர் அட்லி இருவரும் தனியாக ஒரு இடத்தில் சந்தித்து படத்தின் கதை குறித்து பேசியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து தமிழ் சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்றும், அட்லியும் நடிகர் அஜித்தும் இணைவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவித்தவர்கள்.

மேலும் இன்றைய தலைமுறை சினிமாவில் சம போட்டியாளராக இருக்கும் அஜித் மற்றும் விஜய் இருவரும் தங்களுடைய விருப்பமான இயக்குனர்கள் தங்கள் போட்டியாளர் நடிக்கும் படத்தை இயக்கக் கூடாது என்பதில் ஒரு ஈகோ இருந்து வருவதாகவும், ஒருவேளை அஜித் நடிக்கும் படத்தை அட்லீ இயக்கினார் இனி அட்லி மூஞ்சிலேயே கூட விஜய் முழிக்க மாட்டார் என்கின்ற ஒரு சூழல் உருவாகும் என்கின்றனர் சினிமா வட்டாரத்தினர், அந்த வகையில் அட்லி மற்றும் அஜித் இருவரும் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள்