பீஸ்ட் படு மொக்கை… கதறும் விஜய் ரசிகர்கள்..! நெல்சன் இப்படியா விஜய் அண்ணாவ வெச்சு செய்வார்.!

0
Follow on Google News

தளபதி விஜய் நடிப்பில் திரையரங்கில் இன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிரூத் இசையமைத்துள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததால் பீஸ்ட் படத்துக்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இன்று காலை 4 மணிக்கு வெளியான பீஸ்ட் இந்த அளவுக்கு படு மொக்கையாக இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் நினைத்து பார்த்து இருக்கமாட்டார்கள், அதிகாலை 4 மணிக்கு திரையரங்குகளுக்கு சென்ற விஜய் ரசிகர்களுக்கு காத்திருந்தது மிக பெரிய ஏமாற்றம். தமிழ் சினிமாவில் அரைச்ச மாவை அரைச்சது போன்று. மிக பெரிய மால் ஒன்றை ஹைஜாக் செய்கின்றனர் தீவிரவாதிகள். சிறையில் இருக்கும் தீவிரவாதியை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

படத்தின் சன்டை காட்சிகள் சிறிதும் லாஜிக் இல்லாமல் உள்ளது. விஜய் தனி ஒருவனாக அணைத்து தீவிரவாதிகளையும் சுட்டும் தள்ளும் காட்சிகள் சிறுவர்களை வேண்டுமானால் குஷி படுத்தலாம். மேலும் ஒரு காட்சியில் விஜய்க்கு எப்படி விமானம் கிடைத்தது, அந்த விமானத்தில் தீவிரவாதிகளை எப்படி கடத்தி வருகிறார் என்பதெல்லாம் படம் பார்ப்பவர்களுக்கு புரியாத புதிராக லாஜிக்கே இல்லாமல் அமைத்துள்ளது.

மால் உள்ளே வழக்கம் போல் தீவிரவாதிகள் ஹைஜாக் செய்யும் போது, முக்கிய பிரபலம் உள்ளே சிக்கி கொள்வது வழக்கம். அதே போன்று அமைச்சர் ஒருவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் உள்ளே இருக்கிறார்கள். படத்தின் ட்ரைலர் வெளியான போது, இது கூர்க்கா படம் போன்று அமைத்துள்ளது என விமர்சனம் எழுந்தது போன்று, அதே சாயலில் படத்தின் காட்சிகள் பல அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கூர்க்கா படத்தில் யோகி பாபு காமெடி செய்து மாலில் சிக்கியவர்களை மீட்பார். இதில் சீரிஸ் காமெடி செய்து மீட்பது போன்று அமைத்துள்ளது. இது தான் கூர்க்கா படத்துக்கு பீஸ்ட் படத்துக்கு உள்ள வித்தியாசம் என்று சொல்லலாம், இந்த படத்தை சிறுவர்கள் ஒரு முறை பார்க்கலாம். மொத்தத்தில் பீஸ்ட் படத்தின் முதல் பாதி சுமார், இரண்டாம் பாதி படுமொக்கை. நடிகர் விஜய்யை வெச்சு செய்துவிட்டர் நெல்சன். இனி பீஸ்ட் படத்தை வெச்சு விஜய் ரசிகர்களை வெச்சு செய்வார்கள் அஜித் ரசிகர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை என்பது குறிப்பிடதக்கது.

ப்ளீஸ் எங்களை விட்டுடும்மா… ஐஸ்வர்யா கொடுமை தாங்க முடியாமல் கதறும் மகன்கள்..! என்ன டார்ச்சர் தெரியுமா.?