அண்மையில், லியோ படத்தின் ட்ரெய்லர் யூட்யூப் மற்றும் தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகிய சில நிமிடங்களிலேயே மில்லியன் பார்வைகளைக் கடந்தது. படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் களமிறக்கப்பட்டிருப்பதாலும், கேமியோ ரோலில் எந்த முன்னணி நடிகர் வரப்போகிறார் என்பதைப் பார்க்கவேண்டும் என்பதாலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் லியோ படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி லியோ படத்திற்காக ஓவர் ஹைப்பில் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், லியோ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா இல்லையா என்பது படம் ரிலீஸ் ஆன பிறகுதான் தெரியும். ஒரு பக்கம் லியோ திரைப்படம் ரிலீஸ் அன்று, திரையரங்குகள் அத்துனையும் விழாக்கோலம் பூண்டிருக்கும், சரவெடிகள் அதிர வைக்கும் என்றாலும், மற்றொரு பக்கம் தியேட்டருக்குள் விஜய் ரசிகர்கள் செய்யும் அட்டூழியங்களினால் ஏற்படப்போகும் அசம்பாவிதம் மற்றும் சேதங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியதாகத்தான் இருக்கிறது.
ஏற்கனவே விஜய் படத்தின் டீசர் வெளியான பொழுது ரோகிணி தியேட்டரை அடித்து நொறுக்கி தும்சம் செய்தனர் விஜய் ரசிகர்கள். இந்த அசம்பாவிதம் தொடர்பான வீடியோக்கள் செய்தி ஊடகங்களில் வெளியாகவே, பலரும் விஜய்க்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ரோகினி தியேட்டரின் உரிமையாளர் சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்த்துள்ளார்.
அவர் பேசிய போது, லியோ திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில் இன்னும் டேமேஜ் ஆன சீட்டுகளெல்லாம் சரிசெய்யும் வேலையில் மும்முரமாக இறங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தியேட்டருக்குள் இருக்கைகளை நாசம் செய்த விஜய் ரசிகர்கள் பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்ட போது, “விஜய் ரசிகர்கள் தான் இப்படி செய்தார்களா என்று சொல்ல முடியாது.
வேறு ரசிகர்களாக கூட இருக்கலாம். ஏனெனில் விஜய் ரசிகர்களை தளபதி மிகவும் கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறார். அதனால் அவர்கள் இவ்வாறு செய்யக் கூடியவர்கள் அல்ல, மக்கள் பண்ண தப்புக்கு தளபதி என்ன செய்ய முடியும்” பல்வேறு விமர்சகர்களுக்கு தெளிவான பதிலடி கொடுத்திருக்கிறார். அதுமட்டுமிலாமல், அன்று விஜய் ரசிகர்கள் ஆரவாரமாகக் கூச்சலிட்டு தியேட்டருக்குள் டிரெய்லரைக் கொண்டாடிய போது, தியேட்டர் நிர்வாகத்தினர் மைக்கில் எச்சரிக்கை செய்து கொண்டு இருந்ததாகவும்,
ஆனால் உற்சாகத்தில் தலைகீழாக குதித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் யாரும் அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய தியேட்டர் உரிமையாளர், தியேட்டரில் உள்ள CCTV கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, ரசிகர்கள் சீட்டை சேதப்படுத்திவிட்டு அந்த சீட்டிலேயே படுத்துக் கொண்டு செல்ஃபி வேறு எடுத்துக் கொள்ளும் காட்சிகளும் இடம்பெற்றிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த நடிகர் விஜய் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். தொலைபேசியில் தளபதி பேசும் போது, எதாவது ரசிகர்களுக்கு அடி எதும் பட்டிருக்கிறதா? என்று முதலில் ரசிகர்களைப் பற்றி விசாரித்துள்ளார். அதையடுத்து தியேட்டரில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டார் என்றும் ரோகினி தியேட்டர் உரிமையாளர் கூறியுள்ளார். இவர் அளித்துள்ள இந்த பேட்டி விஜய் ஹேட்டர்ஸ்க்கு சரியான பதிலடியாக உள்ளது.