படம் வெளியாவதற்கு முன்பே மண்ணை கவ்விய வாரிசு… உச்சகட்ட சோகத்தில் விஜய் ரசிகர்கள்..

0
Follow on Google News

வரும் பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் வெளியாக இருப்பதால் இரண்டு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். வாரிசு மற்றும் துணிவு என இரண்டு மிகப்பெரிய திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகுவதால், இரண்டு படங்களுமே அதிக திரையரங்குகளில் தங்கள் படத்தை வெளியிட வேண்டும் என்பதில் போட்டி நிலவியது.

திரையரங்குகள் புக்கிங் செய்வதில் இரண்டு தரப்புக்கு கடும் போட்டி நிலவி வந்தது, இந்த நிலையில் ஒரு வழியாக துணிவு மற்றும் வாரிசு என இரண்டு படங்களுக்குமான திரையரங்கு புக்கிங் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களின் கதைகள் எந்த ஒரு காரணத்திற்காக லீக் ஆகிவிட வேண்டாம் என்பதற்காகவே அந்த படத்தின் இயக்குனர்கள் முழு கதையை தங்களுடைய உதவி இயக்குனர்களிடம் கூட சொல்லாமல் ரகசியம் காத்து வந்தனர்.

துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே சென்சார் முடிந்து நிலையில், இரண்டு படங்களின் கதை என்னவென்று லீக்கவுட் ஆகியுள்ளது. துணிவு படம் முதல் பாதி மிக விறுவிறுப்பாக செல்கிறது என்றும், இரண்டாவது பாதி முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் துணிவு படம் அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக நிச்சயம் அமையும் என்கிறரர்கள் சினிமா துறையினர்.

விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் வாரிசு படம் ஒரு குடும்ப சப்ஜெக்ட் படம் என்பதால், இந்தப் படம் ரசிகர்களை கவர்வது மிகப்பெரிய சந்தேகம் தான் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டால், இது குடும்பங்கள் கொண்டாடும் பிளாக்பஸ்டர் படமாக ஏற்றுக் கொள்ளப்படும். அதே நேரத்தில் இது என்ன மெகா சீரியல் போன்று உள்ளது என ரசிகர்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்தினால், மிக பெரிய தோல்வியை சந்திக்கும் வாரிசு.

இந்த நிலையில் சமீபத்தில் துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களின் ட்ரெய்லர்கள் வெளியானது துணிவு படத்தின் டிரைலரை அஜித் ரசிகர்கள் மற்றுமின்றி அனைவரும் கொண்டாடி வருகின்றனர், மேலும் துணிவு படத்தின் ட்ரைலர் வெளியான பின்பு அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஆனால் வாரிசு படத்தின் டிரைலர்கள் விஜய் ரசிகர்களையே மிகப்பெரிய ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன்பு வந்த தமிழ் சினிமாக்களின் குடும்ப படங்களை ஒப்பிட்டு வாரிசு படம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது, மேலும் இது தொலைக்காட்சி சீரியல் போன்று இருக்கிறது என்கின்ற ஒரு விமர்சனம் எழுந்துள்ளதால் உச்சகட்ட சோகத்தில் விஜய் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். மேலும் படம் வெளியாவதற்கு முன்பே இரண்டு படங்களின் ட்ரைலர் போட்டியில் மண்ணை கவ்வி உள்ளது வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.