இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி வெளியான படம் பீஸ்ட். இந்த படம் படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வியது. கடும் விமர்சனத்துக்கு உள்ளான பீஸ்ட் படம், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் நெல்சன் மட்டும் எங்கள் கையில் கிடைத்தால். என கோபம் அடையும் விதத்தில் படம் படு கேவலமாக இருந்தது. இது விஜய் நடிப்பில் வெளியான சுறா, பகவதி போன்ற படங்களின் வரிசையில் இடம்பெற்றது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்து நடிகர் ரஜினிகாந்த் படத்தை நெல்சன் இயக்குவதாக இருந்தது. பீஸ்ட் படத்தை தயாரித்து சன் பிக்சர் தான், ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் கூட்டணியை வைத்து புதிய படத்தை இயக்குவதாக இருந்தது. இதனை தொடர்ந்து பீஸ்ட் படத்தை ரஜினிகாந்த் பார்ப்பதற்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. படத்தை பார்த்த ரஜினி கடும் அப்செட்டில் படம் எப்படி இருக்கு என்று கூட சொல்லாமல் செம்ம டென்ஷனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது.
இதன் பின்பு ரஜினி நடிக்கும் புதிய படத்தின் இயக்குனரை மாற்றுவதற்காக தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரஜினிகாந்த் இரண்டு தரப்பு நடத்திய பேச்சுவார்த்தையில், ரஜினியின் விருப்பத்துக்கு விட்டு விட்டது தயாரிப்பு நிறுவனம். இதன் பின்பு இயக்குனரை மாற்றுவதற்கான வேலைகளில் இறங்கினார் ரஜினிகாந்த். இத அறிந்த நெல்சன், புதிய படத்தில் தன்னை மாற்றிவிட்டால் தன்னுடைய சினிமா கேரியர் முடிந்து விடும் என்று உணர்ந்த நெல்சன்.
நண்பன் அனிரூத் உதவியை நாடியுள்ளார், ஆனால் அனிரூத் இந்த விஷயத்தில் ரஜினியை நெருங்க கூட முடியவில்லை. இதனை தொடர்ந்து நெல்சன் இருக்கும் சூழல் அறிந்து தானாகவே முன் வந்து நான் ரஜினி சார்ட பேசுறேன் என நெல்சனுக்கு ஆதரவு தெரிவித்த விஜய், உடனே ரஜினியிடம் பேசியுள்ளார். நெல்சன் குறித்து பாசிட்டிவான விசயங்களை ரஜினியிடம் தெரிவித்துள்ளார் விஜய், இதன் பின்பு தான் புதிய படத்தில் இயக்குனரை மாற்றும் முடிவை கைவிட்டுள்ளார் ரஜினி.
இதனை தொடர்ந்து நெல்சனை நேரில் அழைத்த ரஜினிகாந்த். படத்தில் கதையை படம் தொடங்கிய டைட்டில் கார்டு முதல் படம் முடியும் வரை முழு கதையையும் தயார் செய்து, எந்த இடத்தில் பாடல் காட்சி, சண்டை காட்சி , படத்தின் அணைத்து டைலாக் என மொத்த ஸ்கிரிப்ட் தயார் செய்து கொண்டு வாங்க, அதை பார்த்துட்டு முடிவு செய்யலாம் என நெல்சனிடன் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த் என்று கூறப்படுகிறது.
மேலும் நடிகர் விஜய் சிபாரிசு செய்தும் நெல்சன் மீது முழு நம்பிக்கை ரஜினிகாந்த்க்கு வரவில்லை என்றும், அதனால் தான் முதலில் முழு கதையையும் என்னிடம் கொண்டு வா என நெல்சனை விரட்டிவிட்டுள்ளார் ரஜினிகாந்த் என்றும், இந்த விவகாரத்தில் விஜய் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து விட்டார் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.