மண்ணை கவ்விய நடிகர் விஜய்..! இனிமேல் இந்த பக்கம் எட்டி கூட பார்க்க கூடாது… என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னனி நடிக்கர்களின் கமல், ரஜினியை தொடர்ந்து அரசியல் கனவில் இருந்து வருகின்றவர் நடிகர் விஜய், விரைவில் அரசியல் கட்சி தொடங்கி தமிழகம் முழுவதும் 2021 சட்டசபை தேர்தலில் தனியாக போட்டியிட போவதாக அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களுக்கு அல்வா கொடுத்தவர் நடிகர் ரஜினிகாந்த், யாரும் எதிர்பாராத விதத்தில் அரசியல் கட்சி தொடங்கியவர் கமல்ஹாசன் அந்த வகையில் அரசியலில் இறங்குவது குறித்து நீண்ட வருடமாக கனவில் இருந்து வருகின்றவர் விஜய்.

2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று விஜய் மக்கள் மன்றம் சார்பில் போட்டியிட சீட் கேட்டு ஜெயலலிதாவை சந்தித்து விஜய் மற்றும் அவருடைய தந்தை இருவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது, ஜெயலலிதா சீட் கொடுக்க மறுத்துவிட்டார், இருந்தும் 2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதன் பின்பு தேசிய அரசியல் பக்கம் தனது கவனத்தை திருப்பிய நடிகர் விஜய்.

கடந்த 2017 கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் தேசிய இளைஞரணி தலைவர் பதவி கேட்டு டெல்லியில் தந்தையுடன் முகாமிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினார், இந்நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதில் தயக்கம் காட்டி வரும் விஜய், அரசியலில் மெல்ல நூல் விட்டு பார்க்கும் விதத்தில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனது விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை சுயேட்சையாக களம் இறக்கி நூல் விட்டு பார்த்தார்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த வருடம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுமார் 100க்கு மேற்பட்டவர்கள் வெற்றி பெற்றனர், வெற்றி பெற்றவர்களை சென்னைக்கு நேரில் அழைத்து குரூப் போட்டா எடுத்து கொண்டார் விஜய், ஊரக உள்ளாட்சி தேர்தல் என்பது மிக குறைந்த அளவு வாக்குகள் உள்ள வார்டுகளில் அந்தந்த பகுதிகளில் அரசியல் அப்பாற்பட்டு செல்வாக்கு மிகுந்த நபர்கள் வெற்றி பெறுவது வழக்கம்.

உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் விஜய் மக்கள் மன்றம் நிர்வாகிகள் வெற்றி பெற்றதை தொடர்ந்து, விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் புஸ்லி ஆனந்த், நடிகர் விஜய்யை உசுப்பேத்தி விட்டு, நமக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் நமது பலம் என்ன என்பது பற்றி மற்ற அரசியல் கட்சிகளுக்கு காட்ட வேண்டும் என்றால் நகராட்சி தேர்தலில் நாம் முழு மூச்சில் களம் இறங்கி போட்டியிட வேண்டும் என தெரிவிக்க விஜய்யும் பச்சை கொடி காட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் வெற்றி பெற்று கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்களுடன் குரூப் போட்டா எடுத்தது போன்று இம்முறையும் எடுக்கலாம் என காத்திருந்த விஜய் இம்முறை மண்ணை கவ்வியது தான் மிச்சம். நகராட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் படுதோல்வி அடைந்து பெருசா சொல்வது போன்று ஏதும் அமையவில்லை.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அரசியல் கனவை கலைத்து விட்டு சினிமா பக்கம் தனது முழு கவனத்தையும் செலுத்த தொடங்கியுள்ள நிலையில், இனிமேல் உனக்கு இந்த அரசியல் ஆசை ஜென்மத்துக்கு வரக்கூடாது, இந்த பக்கம் எட்டி கூட பார்க்க கூடாது என தமிழக மக்கள் பாடம் புகட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் நடிகர் விஜயை உசுப்பேத்தி விட்டு மண்ணை கவ்வ விட்டு கம்ம்முனு இருக்கிறார் புஸ்லி ஆனந்த் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது கூறிப்பிடத்தக்கது.

அஜித்தை தனி அறையில் வைத்து அன்புசெழியன் என்ன செய்தார் தெரியுமா.? அஜித் தப்பித்தது எப்படி.?