ராஜ்கிரண் என்ட்ரி கொடுத்ததும்… பீதியில் விஜய் என்ன செய்தார் தெரியுமா.? ராஜ்கிரண் – விஜய் இடையே என்ன பிரட்சனை…

0
Follow on Google News

ஆனந்தம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனரானவர் லிங்குசாமி. அடுத்து அவர் இயக்கிய திரைப்படம்தான் ரன் மிக பெரிய ஹிட் அடுத்தது.அதன்பின் பையா, சண்டக்கோழி, ஜி என அதிரடி ஆக்‌ஷன் படங்களை இயக்கினர். சூர்யாவை வைத்து அவர் இயக்கிய அஞ்சான் படத்தில் கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்கி பல்பு வாங்கினார். அதன்பின் சில படங்களை இயக்கினார். விஷாலை வைத்து சண்டக்கோழி 2 படத்தை எடுத்தார். அந்த படமும் ஓடவில்லை.

தமிழ் தான் செட் ஆகவில்லை. ஆந்திரா பக்கம் போவோம் என நினைத்து வாரியர் எனும் தெலுங்கு படத்தை இயக்கினார். அந்த படமும் ஹிட் அடிக்கவில்லை. இப்போது எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்கும் முயற்சியில் இருக்கிறார். இதனை அடுத்து லிங்குசாமி அவர்கள் ரன் படத்தின் பார்ட்-2 எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சண்டக்கோழி படம் குறித்து லிங்குசாமி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கடந்த 2005 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. இந்த படம் 225 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை செய்தது. இந்த படத்தில் விஷால், ராஜ்கிரன், மீரா ஜாஸ்மின், லால், சுமன் ஷெட்டி, கருப்புசாமி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்நிலையில் சண்டக்கோழி படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இது தொடர்பாக லிங்குசாமி பேட்டியில், முதலில் சண்டக்கோழி படத்தின் கதையை நான் விஜயிடம் தான் சொன்னேன். அவர் முதல் பாதியை கேட்டார்.

தொடர்ந்து கதையை விஜய்க்கு விவரித்துக்கொண்டிருந்தேன். ராஜ்கிரண் கதைக்குள் நுழையப் போகிறார் என்று சொன்னவுடனே, அவர் கதை சொல்வதை நிறுத்துங்கள் என்று சொல்லிவிட்டார். ஏன் என்று கேட்ட பொழுது, ராஜ்கிரண் சார் வந்த பின்னர் அதற்கு மேல் அங்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்று கேட்டார். ஆனால் நான் அவரை சமாதானம் செய்து, ஒரு பத்து நிமிடம் இரண்டாம் பாதியை கேளுங்கள்.. உங்களுக்கு பிடிக்கும் என்று சொன்னேன் ஆனால் விஜய் முடியாது. இந்த கதையில் நான் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.

பின் ராஜ்கிரன் என்ட்ரிக்கு பிறகு கதையைக் கேட்கவே இல்லை. பின் படம் ரிலீஸாகி வெற்றியடைந்ததை அடுத்து அதன் வெற்றி விழா லீ மெரிடியன் ஹோட்டலில் நடந்தது. அப்போது விஜய்யும் அங்கு வந்திருந்தார். என்னை பார்த்து நேராக வந்து படம் பார்த்தேன் சூப்பராக இருந்தது என்றார். நான் அவர் மீது அப்போது கோபத்தில் இருந்தேன். ஏனெனில் அந்த இரண்டாம் பாதி கதையை அவர் கேட்கவில்லை. நான் அவரிடம், நீங்கள்தான் இரண்டாம் பாதியை கேட்கவே இல்லையே என்றேன்.

அதற்கு அவரோ அட விடுங்க. இதுதான் கரெக்ட். இப்படி ஒருத்தர் ஃபீல்டுக்கு வரணும்னு இருந்துருக்கும் என சொன்னதாக லிங்குசாமி குறிப்பிட்டார். இதற்கு முன்னரும் ஒரு நேர்காணலில், இந்தப் படத்தின் கதையை விஜய் முழுமையாக கேட்காததால் அவர்மீது ஒரு கோபம் இருந்ததாகவும் ஆனால் அவரே தன்னிடம் வந்து படம் குறித்தும் விஷால் குறித்தும் பாராட்டியது அவர் மீதான கோபத்தை நீக்கி மரியாதையை அதிகரித்ததாகவும் லிங்குசாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு ஒரு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ரன் படத்தில் விஜயை நடிக்க வைக்க நினைத்தேன். அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரரிடம் கதை சொன்னேன். அப்போது விஜய் தமிழன் படத்தில் நடிக்க தயாராகி வந்தார். விஜயை வேறுமாதிரி கொண்டு செல்ல போகிறோம். மறுபடியும் காதல் கதை வேண்டாம்’ என எஸ்.ஏ.சி சொல்லிவிட்டார். அதன்பின் மாதவனை நடிக்க வைத்தோம்.” என்றார்.