ரஜினி போன்று நான் ஏமாளி இல்லை.. விஜய் எடுத்த அதிரடி முடிவு…

0
Follow on Google News

சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றால், அதற்கான நேரமும் காலமும் அவர்களுக்கு ஏற்றார் போல் அமைய வேண்டும், அந்த வகையில் மக்கள் மத்தியில் தனக்கான வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருக்கும் அதே காலகட்டத்தில் அதிரடியாக அரசியலில் இறங்கினால் மட்டுமே வெற்றி அடைய முடியும், காலம் கடந்தும், சினிமாவில் ஓய்வு பெரும் சூழலில் ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு அந்த நடிகர் மீது எதிர்ப்பார்ப்பு இருக்காது.

அப்படி தான் எம்ஜிஆர் என்கிற நடிகர் சினிமாவில் மிக பெரிய உயரத்தில் இருக்கும் போது, தலைவா தலைவா என மக்கள் கொண்டாடி காலத்தில், அன்றைய முதல்வர் கருணாநிதியை எதிர்த்து அதிரடியாக அரசியல் கட்சி தொடங்கி முதல்வரானார் எம்ஜிஆர். இதே போன்ற சூழல் 1996 சட்டசபை தேர்தலின் போது ரஜினிக்கு அமைந்ததை சரியாக பயன்படுத்த தவறியவர், காலம் கடந்து சுமார் 20 வருடங்களுக்கு பின்பு அரசியல் அறிவிப்பை வெளியிட்டு கட்சி தொடங்காமலே தோல்வியை தழுவி பின்வாங்கினார் ரஜினிகாந்த்.

காலம் கடந்த ரஜினியின் அரசியல் பிரவேச தோல்விக்கு முக்கிய காரணம் 1996ல் ரஜினிக்கு மக்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பும் செல்வாக்கும் 2018ல் இல்லை என்பதே நிதர்சனம். அந்த வகையில் எம்ஜிஆரின் அரசியல் வெற்றியையும் , ரஜினியின் அரசியில் தோல்வியையும் நன்கு அறிந்த விஜய், அடுத்த பத்து வருடங்களுக்கு பின்பு தனக்கான செல்வாக்கு மக்கள் மத்தியில் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாது என்பதை நன்கு உணர்ந்திருப்பார்.

அதனால், தன்னுடைய அரசியல் ஆசையை நிறைவேற்ற, இது தான் சரியான காலம் என்பதை அறிந்து, மேலும் தற்பொழுது தமிழக அரசியல் களத்தில் திமுகவுக்கு எதிராக வலுவாக செயல்படகூடிய வகையில் எந்த ஒரு அரசியல் கட்சியும் இல்லை என்கிற அரசியல் களத்தை தனக்கு சாதகமாக்கி கொள்ள முடிவு செய்த விஜய் தன்னுடைய அரசியல் நகர்வுகளை அதிரடியாக தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் அம்பேத்கார் சிலைக்கு விஜய் மக்கள் மன்ற தலைவர் புஸ்லி ஆனந்த் மாலை அனுவித்து மரியாதை செலுத்தியது, அதே போன்று தீரன் சின்ன மலை சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தியது, அந்த தலைவர்களால் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான சராசரி ஒரு அரசியல்வாதி போன்ற அரசியல் விளையாட்டை தான் தன்னுடைய மக்கள் மன்றம் தலைவர் மூலம் விஜய் செய்துள்ளார்.

மேலும் அரசியல் கட்சி தொடங்கி 10 சதவிகிதம் 5 சதவிகிதம் வாக்குகளை பெற்று நடிகர் விஜய்காந்த் போன்று இருந்து விடாமல், வரும் 2016 தேர்தலில் அதிரடியாக களம் இறங்கி ஆட்சியை பிடிக்க வேண்டும். என்கிற திட்டத்தை வகுத்து, அதற்கான திட்டத்தை தற்பொழுது இருந்தே செயல்பட்டு வருகிறார் விஜய். மேலும் விஜய் அடுத்தடுத்து கமிட்டாகும் படங்களில் 2025க்குள் முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

2026 சட்டசபை தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு தன்னுடைய விஜய் மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி, புதிய அரசியல் கட்சியை மிக பிரமாண்டமாக தொடங்க இருப்பதாகவும், அதன் பின்பு 2016 சட்டசபை தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கும் விஜய், மாவட்ட தலைநகரங்களில் பொது கூட்டம் நடத்தும் திட்டமும் உள்ளதாம்.

ஒவ்வொரு பொது கூட்டமும் மாநாடு போன்று இருக்கும் என்றும், மேலும் ஒவ்வொரு பொது கூட்டத்திற்கு விஜய் செல்லும் போது, அந்த மாவட்டடத்தை சேர்த்த பிற காட்சிகளை சேர்ந்த அரசியல் முக்கிய புள்ளிகளை விஜய் அவருடைய அரசியல் கட்சியில் இணைக்கும் திட்டமும் உள்ளது, மேலும் ஆளும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான அரசியலை விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் மிக தீவிரமாக மக்கள் மத்தியில் பேசுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் விஜய்யின் அரசியல் நகர்வுகள் இருக்காது என்றும், அவருடைய ஓரே நோக்கம் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் என்கிறது நம்பதகுந்த வட்டாரங்கள், இதற்கு காரணம், 1996ல் ரஜினிக்கு ஏற்பட்ட அதே வாய்ப்பு தனக்கு 2026ல் அமைத்துள்ளது, இந்த வாய்ப்பை தான் தவற விட்டால், பின்பு ரஜினி போன்று தனக்கு அரசியல் எதிர்காலம் எப்போதும் இல்லை என்பதை உணர்ந்து, தன்னுடைய அரசியல் ஆசையை நிறைவேற்றும் வகையில் 2026 சட்டசபை தேர்தலில் விஜய் களம் காண்பார் என கூறப்படுகிறது.

கமல், சூர்யாவால் சிறைக்கு சொல்கிறாரா லிங்குசாமி.? சூர்யா, கமல் இருவரும் கருணை காட்ட கூடாதா.