எப்படி இப்படி ஒரு ஆட்களை விஜய் தேர்வு செய்கிறார்.. அஜித் பட இயக்குனர் என்ன சொல்கிறார் தெரியுமா.?

0
Follow on Google News

விஜய் நடிக்கும் படத்தின் இயக்குனர்களுக்கு பொதுவாகவே வாய் கொழுப்பு அதிகம் என்கிற ஒரு விமர்சனம் உண்டு,அதே போன்று வாய் கொழுப்பு அதிகம் உள்ளவர்களை தேடி தேடி அவர்களின் படத்தில் விஜய் நடித்து வருகிறாரா என்கிற ஒரு விமர்சனமும் உண்டு.. அந்த வகையில் பிகில் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய அப்படத்தின் இணயக்குனர் அட்லீ.

எங்க அண்ணன் டா! அவருக்கு நான் தான் டா படம் பண்ணுவேன்..அப்படி தான் டா பண்ணுவேன் என தலைக்கனத்தில் அட்லீ பேசிய அடுத்த சில நாட்களில் பிகில் படம் வெளியாகி சரிவை சந்திக்க, உங்க அண்ணன் தாண்டா.. அவரை நல்லாவே வெச்சு பிகில் படத்தில் வெச்சு செஞ்சுருக்க என சினிமா ரசிகர்கள் ட்ரோல் செய்து வெச்சு செய்தார்கள்.

அதே விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் சற்று அதிகமாகவே பேச, ஆனால் அவர் பேசிய பேச்சுக்கு ஏற்றார் போல் படம் இல்லை. இதில் உச்சகட்டமாக சமீபத்தில் வெளியாகியுள்ள வாரிசு படம் சீரியல் போன்று உள்ளது என விமர்சனம் வந்துள்ளதை தொடர்ந்து கடும் கோபம் அடைந்த வாரிசு பட இயக்குனர் எப்படி சீரியல் என்று வாரிசு படத்தை சொல்லலாம்,

ஒரு படத்தை உருவாக்க எத்தனை கலைஞர்கள் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய நடிகர்களுள் ஒருவரான விஜய் எவ்வளவு தியாகம் செய்து கஷ்டப்பட்டுள்ளார்கள் தெரியுமா ? சுலபமாக கேலி செய்கிறார்கள் சீரியல் என்று, முதலில் ஏன் சீரியலை தரக்குறைவாக பேசுகிறீர்கள், அதுவும் ஒரு கிரியேட்டிவ் துறை தான்.போய் பாருங்கள் உங்கள் வீட்டில் அம்மா, சித்தப்பா என எத்தனை பேர் அந்த சீரியலை பார்க்கிறார்கள்,

என்னுடைய சாப்ட்வேர் வேலையை எல்லாம் விட்டுவிட்டு இத்துறைக்கு வந்து கமர்ஷியல் சினிமா மூலம் பார்வையாளர்களை ரசிக்க வைக்க வேண்டுமென மட்டுமே எண்ணி வாரிசை உருவாக்கினேன், என வம்சி தன்னுடைய வாரிசு படத்தை விமர்சனம் செய்த்தவர்களை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இப்படி விஜய் பட இயக்குனர்கள் வாய் கொழுப்பில் பேசி ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை பெற்று வரும் நிலையில்.

அஜித் படம் இயக்குனர்களான சிறுத்தை சிவா, H.வினோத் போன்றவர்கள் பேச்சுக்கள் அஜித் பட இயக்குனர்கள் தன்னடக்கத்தை கற்று கொள்ள வேண்டிய படமாக அமைத்துள்ளது. மேலும் தோல்வியின் போது கூட அஜித் பட இயக்குனர்கள் தங்களை பக்குவ படுத்தி கொண்டு தங்கள் தவறுகளை உணர்ந்து பேசி வந்துள்ளதும் குறிப்பிடதக்கது.