தாய் – தந்தைக்கு விஜய் அழைப்பு… உச்சகட்ட கோபத்தில் மனைவி சங்கீதா… பரிதாபத்தில் விஜய்..!!

0
Follow on Google News

நடிகை விஜய் அசூர வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்கள் அவருடைய குடும்பத்தினர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை பொது நிகழ்ச்சிகளில் தாய், தந்தை, மனைவி என குடும்பத்துடன் பல நிகழ்ச்சிகளில் நடிகர் விஜய் கலந்து கொள்வதை பார்க்க முடியும். பொதுவாக விஜய் நடிக்கும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் மேடையில் பேச, முன் வரிசையில் அவருடைய தாய்,தந்தை, மனைவி என அனைவரும் கைதட்டி ரசிப்பார்கள்.

அந்த வகையில் விஜய் குடும்பத்துடன் மிக ஒற்றுமையாக இருந்து வந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு விஜய் மக்கள் மன்றம் தொடர்பாக, விஜய் மற்றும் அவர் தந்தை இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு உச்ச கட்டத்தை அடைந்ததை தொடர்ந்து, குடும்பத்தில் பிளவு ஏற்பட்டது. அதன் பின்பு விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் யாரும் தந்தை சந்திரசேகர் உடன் எந்த ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்ன நடிகர் விஜய் உத்தரவும் விட்டார்.

இதன் பின்பு தாய் – தந்தையுடன் விஜய் பேசுவதை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் தனது தந்தையின் 80 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்ட போது, நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் யாருமே கலந்து கொள்ளவில்லை, விஜய்க்கும் அவருடைய தந்தைக்கும் ஏற்பட்ட பிரச்சனைக்கு பின்பு விஜய் முழுவதும் குடும்ப விவகாரத்தில் அவருடைய மனைவி கட்டுப்பாட்டில் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அதனால் தான் தன்னுடைய தந்தையின் 80 பிறந்தநாளுக்கு கூட விஜய் கலந்து கொள்வதற்கு அவருடைய மனைவி சங்கீதா அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் விஜய் நடிக்கும் படங்கள் இயக்குனர்களை தேர்வு செய்வது கூட முக்கிய பங்காற்றி வருகிறார் சங்கீதா என கூறப்படுகிறது. அந்த வகையில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படத்தின் இயக்குனர் தேர்வு கூட சங்கீதாவின் தேர்வு தான் என்று கூறப்படுகிறது.

அதனால் தான் பீஸ்டு படம் படுதோல்வி அடைந்த பின்பு விஜய் தந்தை சந்திர சேகர் பீஸ்ட் படத்தை மிக கடுமையாக விமர்சனம் செய்தவர், கதையை தேர்வு செய்தது தவறு என்று மறைமுகமாக மருமகள் சங்கீதாவை தான் தாக்கினார் என்றும் கூறப்படுகிறது. இப்படி ஒரு பக்கம் தாய் தந்தை மறுபக்கம் மனைவி என இடையில் சிக்கிக் கொண்டிருக்கும் விஜய் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜயின் தாய் தந்தை கலந்து கொண்டார்கள்.

ஆனால் அவருடைய மனைவி சங்கீதா கலந்து கொள்ளவில்லை. சினிமாவில் பல முக்கிய பிரமுகர் பல மேடைகளில் விஜய் அவருடைய தாய் தந்தையை மதிக்க வேண்டும் என்றும் ஓப்பனாகவே பேசினார்கள். இதனால் தாய் தந்தை விவாதத்தில் விஜய் மீது கடுமையான விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து, அதை சரி செய்வதற்காக வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு விஜய் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் தாய் தந்தையை அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இது தாய் தந்தையை விஜய் அழைத்தது அவருடைய மனைவி சங்கீதாவுக்கு விருப்பமில்லை என்றும், இருந்தும் தன் மீது ஏற்கனவே தாய் தந்தை விவகாரத்தில் மிக கடுமையான விமர்சனம் உள்ளதால் அதை சரி செய்வதற்கு இதுதான் உகந்த நேரம் என விஜய் தன்னோட தாய் தந்தையை வாரிசு பட ஆடியோ வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள வைத்துள்ளார்.

ஆனால் விஜயின் இந்த நடவடிக்கை சங்கீதாவுக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, இதனால் லண்டனில் இருந்த சங்கீதா சென்னையில் நடக்கும் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வராமல் புறக்கணித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

துபாய் ஓட்டலில் enjoy… காயத்ரி ரகுராம் துபாய் ரகசிய சந்திப்பு பற்றிய தகவல் வெளியானது..