நடிகர் அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படத்தின் இயக்குவதின் மூலம் நட்சத்திர இயக்குனர் என்கின்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் இயக்குனர் மகில் திருமேனி. நடிகர் அஜித்தை வைத்து மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தில் கமிட் ஆகுவதற்கு முன்பு ஏஜிஎஸ் தயாரிப்பில் நடிகர் சிம்பு நடிப்பில் ஒரு படத்தில் கமிட் ஆகி இருந்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு அனைத்து வேலைகளும் தயாராக இருந்த நிலையில், நடிகர் அஜித்திடம் இருந்து இயக்குனர் மகில் திருமேனிக்கு அழைப்பு வந்துள்ளது.
அதன்படி மகிழ் திருமேனி கதையை கேட்ட அஜித்தும் ஓகே செய்து, லைக்கா தயாரிப்பில் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் மகிழ்திருமேனி. ஆனால் நடிகர் அஜித் படத்தில் கமிட் ஆவதற்கு முன்பு ஏற்கனவே கமிட்டாகி இருந்த ஏஜிஎஸ் நிறுவனத்திடம் சென்றமகிழ்ந்திருமேனி, தனக்கு அஜித்திடம் இருந்து அழைப்பு வந்துள்ளது என கேட்க, அவர்களும் உடனே அஜித் படத்தை நீங்கள் முடித்துவிட்டு பின்பு தங்கள் நிறுவனத்திற்கு கமிட்டாகி இருந்த படத்தை பண்ணுங்க என தெரிவித்துள்ளனர்.
அதன்படி மிக்க மகிழ்ச்சியில் மகிழ்ந்திருமேனி அஜித் படத்தில் கமிட் ஆகி வேலை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் உடனே மகிழ் திருமேனியை அஜித் படத்தை இயக்குவதற்கு பச்சை கொடி காட்டி, அஜித் படத்தை முடித்துவிட்டு வாருங்கள் நாங்கள் காத்திருக்கிறோம் என ஏஜிஎஸ் நிறுவனம் தெரிவித்ததற்கு பின்னணி காரணம் குறித்து வெளியாகியுள்ளது.
அதாவது இயக்குனர் மகிழ் திருமேனி மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைக்கா தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கும் பிரம்மாண்டமான ஒரு படத்தை இயக்கும் போது, அந்த படத்தின் மூலம் நச்சத்திர இயக்குனராக உருவெடுத்து விடுவார். அதன் பின்பு அந்த இயக்குனர் இயக்க இருக்கும் படத்திற்கு மிக பெரிய வரவேற்பு இருக்கும்.
இதனிடைப்படையில் லைக்கா தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்தை எடுத்து முடித்துவிட்டு மகிழ்த்திருமேனி ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஒரு படம் தயாரிக்கும் போது, அந்த படத்திற்கான வரவேற்பு வேற லெவெலில் இருக்கும். மேலும் அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி நடிக்கும் படம் மிக பெரிய ஹிட் அடித்து வசூல் சாதனை படைக்கும் போது, அடுத்து மகிழ் திருமேனி இயக்க இருக்கும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் படத்தின் வியாபாரமும் அமோகமாக இருக்கும்.
இதெயெல்லாம் மனதில் வைத்து தான் அஜித்திடம் இருந்து அழைப்பு வந்துள்ளது என மகிழ் திருமேனி தெரிவித்த உடன் பரவாயில்லை உடனே அந்த படத்தை பண்ணிட்டு வாங்க என ஏஜிஎஸ் நிறுவனம் தெரிவித்ததற்கு முக்கிய காரணம் என்றும், இதன் பின்னணி நோக்கமே வியாபார தந்திரம் தான் என்கிறது சினிமா வட்டாரங்கள்.
இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கிடைத்த இதே போன்ற ஒரு வாய்ப்பு, இதற்கு முன்பு உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படம் கழகத் தலைவன். இந்த படத்தை தொடங்குவதற்கு முன்பு நடிகர் விஜய்யிடம் இருந்து மகிழ்திருமேனிக்கு அழைப்பு வந்துள்ளது.
ஆனால் உதயநிதி ஸ்டாலின் கழகத் தலைவன் படத்தை முடித்துவிட்டு விஜய் நடிக்கும் படத்திற்கு செல்லுங்கள் என மகிழ் திருமேனியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் விஜய் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் திருமணிக்கு கிடைக்காமல் போனது. ஆனால் விஜய் நடிக்கும் படத்தை இயக்கி விட்டு வாங்க, பின்பு கழகத் தலைவன் படத்தை இயக்கலாம் என மகிழ் திருமேனியை அனுப்பி வைத்திருக்க வேண்டும் உதயநிதி என்கிறது சினிமா வட்டாரங்கள்.
அப்படி விஜய் என்னும் மிகப்பெரிய நடிகர் நடிக்கும் படத்தை இயக்கி ஹிட் கொடுத்த ஒரு இயக்குனர் அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்கும் போது, அந்த படத்திற்கான வரவேற்பு வேற லெவலில் இருந்திருக்கும், ஆனால் ஏஜிஎஸ் நிறுவனம் செய்த அந்த புத்திசாலித்தனத்தை உதயநிதி ஸ்டாலின் செய்ய தவறிவிட்டார், அந்த வகையில் விஜய் விவகாரத்தில் கோட்டை விட்டுவிட்டார் உதயநிதி என்கின்றது சினிமா வட்டாரம்.