இயக்குனர் SA சந்திரசேகர் மகன் என்கிற பின்புலத்தில் சினிமாவில் தன்னை அடையாளம் காட்டி கொண்டவர் நடிகர் விஜய்.தனது தந்தை இயக்கத்தில் சுமார் ஆறு படங்கள் வரை குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய், ஒரு படத்தில் கூட மக்கள் மனதில் அவருடைய நடிப்பு இடம்பெறவில்லை. தந்தை பின்புலம் இருந்தாலும் குழந்தை நட்சத்திரமாக நடிப்பில் அசத்தியிருப்பார் சிலம்பரசன், ஆனால் சிம்பு போன்று விஜய் ஜொலிக்கவில்லை.
ஒரு கட்டத்தில் உனக்கு சினிமா செட் ஆகாது, வேறு துறையை பார் என தந்தை SA சந்திரசேகர் அறிவுறுத்த, சில வருடம் இடைவெளிக்கு பின்பு , மீண்டும் தனது 18 வயதில் தந்தையிடம் சினிமாவில் நடிக்க தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் விஜய், இதனை தொடர்ந்து நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தார் SA சந்திரசேகர், இந்த படத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை, மேலும் விஜய்யை வைத்து படம் இயக்க வேறு எந்த ஒரு இயக்குனரும் முன் வரவில்லை.
தந்தை இயக்கத்தில் அடுத்தடுத்து படங்களில் நடித்த விஜய்க்கு தோல்வியே கிடைத்தது. இந்நிலையில் அந்த காலகட்டத்தில் நடிகர் விஜயகாந்த் அணைத்து தரப்பு ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக மிக பெரிய உச்சத்தில் இருந்தார். இந்நிலையில் விஜய் என்கிற ஒரு நடிகரை மக்கள் மத்தியில் அறிமுகமம் செய்து வைக்க, அப்போது உச்சத்தில் இருந்த நடிகர் விஜயகாந்த் உடன் இணைந்து நடிக்க வைப்பது குறித்து SA சந்திரசேகர் முயற்சித்துள்ளார்.
அதற்கென்ன உங்களுக்கு எத்தனை நாள் கால்சீட் வேண்டும் என உடனே செந்தூரப்பாண்டி படத்தில் தன்னுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை விஜய்க்கு கொடுத்தார் விஜயகாந்த். இந்த படம் வெளியான பின்பு தான் விஜய் என்கிற நடிகர் ஒருவர் இருக்கிறார் என்பது மக்களுக்கு தெரியவந்தது. விஜயகாந்த் தன்னுடைய இமேஜ் பற்றி சற்றும் கவலைப்படாமல் வளர்ந்து வரும் நடிகரான விஜய்க்கு தன்னுடைய படத்தில முக்கிய கதாபாத்திரங்கள் கொடுத்து அவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்.
பொதுவாக நடிகர் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் நடிக்கும் படத்தில் தங்களை தாண்டி மற்ற நடிகர்கள் ஓவர் டெக் செய்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். ஆனால் விஜயகாந்த் அதை எல்லாம் பொருட்படுத்த மாட்டார். தன்னுடன் ஒரு படம் நடித்தால் மக்கள் மத்தியில் எளிதாக சென்று அடைந்து விடுவார் விஜய் என்பதற்காக செந்தூரப்பாண்டி படத்தில் விஜய் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தவர் விஜயகாந்த்.
இந்நிலையில் நீண்ட நாளாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் விஜயகாந்தை இதுவரை நேரில் சென்று சந்தித்து உடல் நலம் கூட விசாரிக்கவில்லை விஜய் என்கிற விமர்சனம் எழுந்து வருகிறது. மேலும் பலர் சினிமாவில் முன்னேற்றம் அடைய, உதவி செய்தவர் விஜயகாந்த், ஆனால் அவருடைய மகன் சண்முகபாண்டியன், இன்று சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க கடுமையாக போராடி வருகிறார்.
அந்த வகையில் விஜய்க்கு தன்னுடைய படத்தில் உடன் நடிக்க வைத்து மக்கள் மத்தியில் அடையாளம் காட்டியவர் விஜயகாந்த், அந்த நன்றிக்கு விசுவாசமாக,விஜயகாந்த் மகன் சண்முக பண்டி மற்றும் விஜய் இருவரும் இணைந்து ஒரு படம் நடிக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, ஷண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் 5 நிமிடம் இடம்பெறும் வகையில் விஜய் கெஸ்ட் ரோல் நடித்தால் கூட ஷண்முக பாண்டியனுக்கு உதவியாக இருக்கும்.
ஆனால் அதற்கான வாய்ப்பை விஜய் ஏற்படுத்தி தருவது மாதிரி இல்லை. இந்நிலையில் ஷண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான சகாப்பதம் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு விஜய்யை நேரில் சந்தித்து அழைத்த விஜயகாந்த மனைவி பிரேமலதா, நீங்க கண்டிப்பாக வரவேண்டும் என கெஞ்சாத குறையாக கேட்டுள்ளார், இருந்தும் விஜயகாந்த செய்து உதவியை கொஞ்சம் கூட சிந்தித்து பார்க்காமல், சகாப்தம் ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு விஜய் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.