ஏஜிஎஸ் நிறுவனத்திடம் பங்கு கேட்ட விஜய்… ஷாக் ஆன நிறுவனம் விஜய்க்கு என்ன செய்தது தெரியுமா.?

0
Follow on Google News

வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு படத்திற்கு பிறகு விஜய்யின் சம்பளம் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 125 கோடி ரூபாய் அளவுக்கு வாரிசு படத்தில் சம்பளமாக பெற்றாராம் தளபதி விஜய். இந்நிலையில் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்துக்கு 135 கோடி ரூபாய் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தின்போதே விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாகும் என்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி லலித் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், அனுராக் காஷ்யப், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள லியோ படம் 700 முதல் 1000 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக் குழு தெரிவித்து உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்குனர்கள் விஜயிடம் கதை சொல்லிய நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் வெங்கட் பிரபு தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இதற்கு முன் விஜய் நடித்த பிகில் படத்தை இந்நிறுவனம் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபுவின் படம் எப்போதும் கலகலப்பான படமாக இருக்கும் என்பதால் படத்தின் மீது இப்போதே மிகப் பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகின.

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதில் விஜய்யின் தோற்றம் எப்படி இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் போட்டோஷுட் காட்சிகள் எடுக்க படக்குழு வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் விஎப்எக்ஸ் 3டி ஸ்கேன் தொழில்நுட்ப முறையில் விஜயின் லுக் டெஸ்ட் மற்றும் போட்டோஷுட் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக விஜய், வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அமெரிக்க சென்றுள்ளனர். இதற்காக நடிகர் விஜய் அமெரிக்கா சென்றதாகவும், அமெரிக்க விமான நிலையத்தில் விஜய் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் தளபதி 68-ல் விஜய் தன்னுடைய சம்பளத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தளபதி 68ல் அதிகப்படியாக நடிகர் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியான.

பிகில் படத்துக்கு பிறகு மீண்டும் விஜய்யை வைத்து படம் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்துக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் எல்லாம் சென்று பெரியளவில் செலவு செய்ய முடிவு செய்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாக உள்ள இந்த படத்தின் பிசினஸ் ஆரம்பத்திலேயே பெரியளவில் இருக்கும் நிலையில், ஒரு பாதி ஷேரையே சம்பளமாக விஜய் கேட்டிருந்தாராம்.

பாதி ஷேர் என்றால் 250 கோடி வரை சம்பளமாக கொடுக்கக்கூடிய நிலை வரும் என்பதை கணக்குப் போட்டுத் தான் உஷாராக ஏஜிஎஸ் நிறுவனம் 200 கோடியை ரவுண்டாக கொடுத்து விஜய் தரப்பை ஆஃப் செய்து விட்டது என்கின்றனர். நடிகர் விஜய் 2026ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நேரடியாக அரசியலில் குதிக்கப் போகிறார் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், அரசியலுக்கு வர அவருக்கு அதிக பணத்தேவை இருப்பதாலேயே, அடுத்தடுத்த பெரிய படங்களை கமிட் செய்யும் விஜய் அதிகமான சம்பளத்தையும் கேட்டு வருகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.