தமிழ் சினிமா முன்னணி நடிகர், நடிகைகளின் கால் சீட் மற்றும் சினிமா தொடர்பான வேலைகளுக்கு மேனேஜர் இருப்பார்கள். இதில் மேனேஜர் வாங்கும் சம்பளத்தை சம்பந்தப்பட்ட அந்தந்த நடிகர் நடிகைகள் கொடுத்து விடுவார்கள். ஆனால் நடிகர், நடிகைகள் அழைத்துவரும் உதவியாளர்களின் சம்பளத்தை அவர்கள் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர் தலையில் கட்டி விடுவார்கள்.
முன்னனி நடிகர், நடிகைகள் அவர்களின் மேனேஜர்களுக்கு மாதம் சம்பளத்தை கொடுத்து விடுவார்கள். குறைந்த சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் தங்களுடைய சம்பளத்தில் பத்து சதவீதம் மேனேஜர் கமிஷன் அடிப்படையில் சம்பளம் கொடுப்பார்கள், இந்நிலையில் தயாரிப்பாளர் தான் தங்கள் உதவிய உதவியாளர்களுக்கு சம்பளம் தருகிறார் என்பதற்காக, முன்னணி நடிகர், நடிகைகள் அதிக அளவில் உதவியாளர்களை வைத்துக் கொள்கிறார்கள்.
மேலும் தயாரிப்பு தரப்பில் இருந்து உதவியாளர்களை நியமித்தால், அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. முன்னணி ஆர்ட்டிஸ்கள் விஜய், ரஜினிகாந்த், நயன்தாரா போன்றவர்களின் மேக்கப் மேன் சம்பளமே அதிக அளவில் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் ஆர்டிஸ்ட்கள் ஒவ்வொரு படத்திற்கும் சம்பளத்தை அதிகரித்து செல்வது போல் உதவியாளர்களின் சம்பளத்தையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்.
ஒவ்வொரு படத்தின் போது உதவியாளர்களுக்கு மட்டும் சுமார் 1 கோடி முதல் 2 கோடி வரை சம்பளம் கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது என பல தயாரிப்பாளர்கள் வேதனை அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் வலிமை படத்திற்கு பின்பு அஜித் ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளார். இனி தான் நடிக்கும் படங்களில் தயாரிப்பாளர் நியமிக்கும் உதவியாளரே தனக்கு போதுமானது.
நான் வெளியில் இருந்து தனியாக உதவியாளர்களை அழைத்து வரமாட்டேன் என்ற அஜித் முடிவு, அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதேபோன்று தெலுங்கு சினிமாவில் தற்போது புதிய சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் நடிகர் நடிகைகளுக்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தான் உதவியாளர் நியமனம் செய்யப்படும்.
அப்படி அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவியாளர்களை அழைத்து வந்தால் அந்த சம்பளத்தை நடிகர் நடிகைகள் தான் கொடுக்க வேண்டும். அதை தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக்கொள்ளாது என்ற புதிய சீர்திருத்தம் தெலுங்கு சினிமாவில் வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் இந்த சீர் திருத்தம் தமிழ் சினிமாவில் இல்லை என்றாலும், அஜித் தானாகவே தான் தனிப்பட்ட முறையில் உதவியாளர்களை அழைத்து வர மாட்டேன் என்கிற ந அஜித்தை பின்பற்றி நயன்தாரா, விஜய் போன்ற முன்னணி ஆர்ட்டிஸ்கள் திருந்த வேண்டும் என்கின்றனர் சினிமா துறையினர்.