விஜய் – லோகேஷ் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஜோரான வியாபாரம்.. எத்தனை கோடி தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் பொங்கல் அன்று வெளியாகும் என்று வெளியாகும் என்று பட குழுவினர் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான அனைத்து வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியாகும் அதே தேதியில் தான் அஜித் நடிக்கும் துணிவு படமும் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் வாரிசு படத்தை முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் கமிட் ஆகியுள்ளார் விஜய். இந்த படத்திற்கான லொக்கேஷன் தேர்வு, ஸ்கிரிப்ட் எழுதும் பணி, நடிகர் நடிகைகள் தேர்வு என அனைத்தையும் சுமார் 90 சதவீதங்களுக்கு மேல் முடித்துவிட்டு வரும் டிசம்பர் 5ஆம் தேதி மூணாறில் படப்பிடிப்பு தொடங்க தயாராக இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷ் கனகராஜ் – விஜய் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய்க்கு 125 கோடி சம்பளமும், லோகேஷ் கனகராஜ்க்கு 20 கோடி சம்பளம், மற்றும் இதர தயாரிப்புச் செலவுகள் அனைத்தும் சேர்த்து ரூபாயில் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருக்கிறது. ஆனால் படம்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே தற்பொழுது இந்த படத்தின் வியாபாரம் படு ஜோராக நடந்து வருகிறது.

அனைத்து மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமையை சுமார் 150 கோடி ரூபாய்க்கு பேசப்பட்டு, இறுதியில் 175 கோடி ரூபாய்க்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வெறும் டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் தான். அடுத்தடுத்து இந்த படத்தின் விற்பனை சுமார் 400 கோடி வரை வியாபாரம் நடக்கும் என்று உறுதியான தகவல் தெரிவிக்கிறது. 150 கோடி ரூபாய் வரை இந்த படத்தின் தயாரிப்பாளர் லலித்துக்கு லாபம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது.

விஜய் மற்றும் லலித் இருவருக்கும் இடையே நட்பானது மிக நெருக்கமாக சமீப காலமாக இருந்து வருகிறது. அதனால் தான் தொடர்ந்து விஜய் படங்கள் பெரும்பாலும் தியேட்டர் உரிமைகள் மற்றும் தயாரிக்கும் வாய்ப்பை லலித் பெற்று வருகிறார். வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டிருந்த நிலையில், விஜய் தலையிட்டு தயாரிப்பாளர் லலித்திடம் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.