ஒரு காலத்தில் நகமும் சதையுமாக ஒன்றாக இருந்து, இன்று எதிரும் புதிருமாக இருக்கும் நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்ஐசி இடையே விரிசல் வர காரணம் என்னவென்று தற்பொழுது வெளியாகியுள்ளது. 2012 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளியாகி பட்டி தொட்டி எங்கும் சரவெடியாய் ஓடிய திரைப்படம் தான், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் துப்பாக்கி திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அதுவரை, தமிழ்நாட்டில் மட்டுமே தெரிந்த ஹீரோவாக இருந்த விஜய், துப்பாக்கி வெற்றிக்கு பின்னர் PAN இந்தியா கதாநாயகனாக உருவெடுத்துவிட்டார். இந்த அளவிற்கான ஒரு வெற்றிப்படம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சியின் தவறான முடிவால் வேறு ஒரு நடிகருக்கு கை மாறி போயிருக்கும்…! இந்தப் படத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டு ஹீரோவை தேடி அலைந்திருக்கிறார்.
அப்போதே இவர், ஏழாம் அறிவு , கஜினி, ரமணா உள்ளிட்ட வெற்றி திரைப்படங்கள் கொடுத்த இயக்குனர் என்பதால் பெரிய ஹீரோக்களையே தன் படத்திற்கு புக் செய்ய விரும்பினார். அந்த வகையில் தமிழகத்தில் விஜய்க்கு நிகரான சினிமா பிரபலம் கொண்ட மற்றொரு நடிகருக்கு தான் இந்த திரைப்படத்தின் கதையை முதலில் முருகதாஸ் சொல்லி இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
ஆனால் அவரோ கதை கேட்டுக் கொண்டிருக்கும்போதே காதில் பேப்பரை குடைந்து கொண்டு அலட்சியமாக நிராகரித்து விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த ஏ ஆர் முருகதாஸ் நேராக மும்பை சென்று அப்போதைய டாப் நடிகர் அக்சயகுமாரிடம் கதையை கூறியுள்ளார் அவருக்கு துப்பாக்கி படத்தின் கதை மிகவும் பிடித்து போனது! ஆனால், வேறு ஹிந்தி படங்களின் கால்ஷீட் பெண்டிங்கில் இருந்ததால் ஒன்றரை வருடம் காத்திருக்க சொல்லி கேட்டிருக்கிறார்.
இதனால் மனம் நொந்து போய் தமிழகம் வந்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ்..! இதனை அறிந்த நடிகர் விஜய், நேரடியாக ஏர் முருகதாஸை அழைத்து அவர் வைத்திருக்கும் கதைகளை பற்றி கேட்டிருக்கிறார். உடனே இந்த துப்பாக்கி படத்தின் கதையை கூற முயன்ற போது, விஜய் அவரை நிறுத்தி எனக்கு கதை கேட்பது என்னுடைய அப்பா எஸ்.ஏ.சி தான் எனக்கூறி அவரிடம் அனுப்பி வைத்துள்ளார்.
ஏ ஆர் முருகதாஸ் எஸ்ஏசி இடம் சென்று முழு கதையையும் கூறி முடித்துள்ளார். கதை முழுவதையும் அமைதியாக கேட்ட எஸ்.ஏ.சி, முருகதாஸை பார்த்து ஏளனமாக சிரித்துள்ளாராம் .மேலும், இந்த கதையில் குறைகளை சொல்லியும் நிராகரித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் நேராக விஜய் இடம் சென்று நடந்ததை சொல்ல,இனி என் அப்பாவிடம் வேண்டாம் என்னிடமே கதை சொல்லுங்கள் எனக் கூறி முழு கதையும் கேட்டு படத்திற்கு OK சொல்லி இருக்கிறார்.
இதை தெரிந்து கொண்ட எஸ்ஏசிக்கு விஜய் மீது கோபம்! ஆனால், எஸ்ஏசி கணித்ததற்கு நேர் எதிராக படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது! இதனாலேயே விஜய், துப்பாக்கி படத்தில் இருந்து அடுத்து வந்த எந்த படத்திற்கும் எஸ்ஏசியை கதை கேட்க அனுமதிக்கவில்லை! இன்று அரசியல் ரீதியாக அப்பா மகனுக்கிடையே பல முரண்கள் இருந்தாலும், ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட விரிசலுக்கு காரணம் விஜயின் வெற்றி படமான துப்பாக்கி தான் என்பது பலருக்கும் தெரியாத தகவலாகவே இருக்கும்.