மீண்டும் உருவெடுத்த விஜய் – திரிஷா விவகாரம்… விஜய் – சங்கீதா இடையே உச்சக்கட்ட மோதல்..!

0
Follow on Google News

நடிகர் விஜய் – திரிஷா இருவரும் ஜோடி சேர்ந்து நடித்த முதல் படம் கில்லி, இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. மேலும் விஜய் திரிஷா இடையிலான கெமிஸ்ட்ரி நல்ல ஒர்க் அவுட் ஆகி உள்ளது என்கிற பாராட்டையும் பெற்றனர். இதனைத் தொடர்ந்து விஜய்- திரிஷா நடிப்பில் வெளியான இரண்டாவது படம் திருப்பாச்சி மெகா ஹிட் அடித்ததை தொடர்ந்து, விஜய் – த்ரிஷா ஜோடி வெற்றி கூட்டணி என்று அழைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விஜய் – திரிஷா இடையில் நெருக்கம் அதிகமாகி படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கூட இருவரும் தனியாக சந்தித்து வருவதாக கிசு கிசுக்கள் வெளியானது, மேலும் விஜய் தான் நடிக்கும் படங்களில் தனக்கு ஜோடியாக நடிக்க திரிஷாவை நடிக்க, அந்த படத்தின் இயக்குனரிடம் சிபாரிசு செய்து வந்துள்ளார். விஜய் சிபாரிசின் காரணமாக ஆதி, குருவி படத்தில் தொடர்ந்து விஜய் உடன் ஜோடி சேர்ந்தார் திரிஷா.

ஆனால் விஜய் -திரிஷா கூட்டணியில் வெளியான ஆதி,குருவி படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. படப்பிடிப்பு இடைவேளையின் போது ஒரே கேரவனுக்குள் நீண்ட நேரம் விஜய் திரிஷா இருவரும் இருப்பதாகவும், படப்பிடிப்பு தொடங்கும் போதும், இருவரும் ஒருவர் கையை ஒருவர் இறுக்கி பிடித்து கொண்டு ஜோடியாக கேரவன் உள்ளே இருந்து வெளியில் வருவதாக கிசு கிசு வெளியானது.

மேலும் குருவி படத்தின் படபிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடந்த நிலையில் திரிஷா- விஜய் இருவரும் மிக நெருங்கி பழகி வருவதாக கிசுகிசுக்கள் வெளியானதை தொடர்ந்து விஜய் மற்றும் அவருடைய மனைவி இடையே அப்போது பெரும் பிரச்சனை வெடித்துள்ளது. இதன் காரணமாக இனி திரிஷாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க கூடாது என கணவர் விஜய்க்கு கடும் கண்டிஷன் போட்டுள்ளார் மனைவி சங்கீதா.

அதனை தொடர்ந்து திரிஷாவுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை தவிர்த்து வந்தார் விஜய். இந்நிலையில் சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் த்ரிஷா- விஜய் ஒரே படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய், இந்த படத்தை முடித்துவிட்டு, அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் ஆறு வில்லன்கள், மற்றும் பல முன்னணி நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தில் திரிஷாவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் விஜயுடன் ஜோடி சேர்ந்து திரிஷா நடிக்க இருப்பது, விஜய் மனைவி சங்கீதா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படும் நிலையில், கணவர் விஜய் மீண்டும் திரிஷாவுடன் நடிக்க கூடாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

200 கோடி முதலீடு மாதம் 20 கோடி சம்பாரிக்கு சூர்யா.. என்ன தொழில் தெரியுமா.?