மிரட்டப்பட்ட விஜய்… விஜய் உடன் நடிக்க மறுப்பு தெரிவிக்கும் நடிகைகள்…

0
Follow on Google News

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு, அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபட்ட தொடங்கிவிட்டார். லியோ திரைபடத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் ஏற்கெனவே விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படம் எடுத்து நல்ல வசூலையும், கவனத்தையும் பெற்றிருந்தார். தொடர்ந்து, அவரின் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியால், தமிழ் சினிமாவில் தற்போதைய தவிர்க்க முடியாத இயக்குநராக அவர் உருவெடுத்துள்ளார் எனலாம்.

எனவே, லோகேஷ் – விஜய் கூட்டணி மீதான எதிர்பார்ப்பில் ஏற்கெனவே உச்சத்தில் உள்ளது. லியோ படத்தில் விஜய்யுடன், நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜூன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பெரும் பட்டாளமே நடித்திருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு முழுமையாக காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில், மற்ற கட்ட பட்டப்பிடிப்பு சென்னை பகுதிகளில் நடைபெற்றது.

லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ படத்தின் ‘நான் ரெடி’ சிங்கிள் 100 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி யூ-ட்யூப்பில் சாதனை படைத்து வருகிறது. லியோ படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவே ரசிகர்கள் மத்தியில் அதிகம் கொண்டாடப்பட்டாலும், படத்தின் பாடலும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்துவிட்டது எனலாம்.

அடுத்த மாதம் 19ஆம் தேதி லியோ திரைப்படம் திரைக்கு வர உள்ளதால், போஸ்ட்-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்யின் டப்பிங் பணிகளும் நிறைவு பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு அப்படியே விஜய்யின் அடுத்த படத்தின் மீதும் திரும்பியிருக்கிறது எனலாம். விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கூட்டணியில் உருவாகும் தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது நடிகர் விஜய் அமெரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில், அவருடன் வெங்கட் பிரபு, தயாரிப்பு நிறுவனத்தினரும் பயணித்துள்ளனர். அங்கு தளபதி 68 படத்திற்கான முதற்கட்ட VFX பணிகள் நடப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ‘University Of Southern California – Institute for Creative Technologies’ என்ற VFX பணியில் சிறந்து விளங்கும் நிறுவனத்திற்கு நடிகர் விஜய், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் விசிட் அடித்துள்ளனர்.

இங்கு தளபதி 68 படத்தின் 3D மாடலிங், விஜய்யின் பாடி ஸ்கேனிங் உள்ளிட்ட பணிகள் நடைபெறும் எனவும் தெரிகிறது. இந்த நிறுவனம் இதற்கு முன் அவதார், ஃபாஸ்ட் அண்ட் ஃபூரியஸ், ரெடி பிளேயர் ஒன் ஆகிய பெரும் பொருட்செலவில் உருவான ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி இந்த படத்தில் விஜய் தந்தை, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தந்தை விஜய்க்கு ஜோடியாக நடிக்க முதலில் ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அவர் இன்னொரு விஜய்க்கு அம்மாவாக நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு நடிகை சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவரும் ஜோதிகா சொன்ன அதே காரணத்தைக் கூறி மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் அவருக்கு பதிலாக தந்தை விஜய்க்கு ஜோடியாக சினேகாவிடம் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விஜய் ஜோடியாக 2003-ம் ஆண்டு வசீகரா என்ற படத்தில் சினேகா நடித்துள்ளார். 20 வருடங்களுக்கு பின்னர் தற்போது அவருக்கு ஜோடியாக சினேகா நடிக்க இருப்பது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் வசீகரா படத்தில் சசிகலா தான் விஜயை மிரட்டி நடிக்க வைத்தார் என ஒரு பேட்டியில் அந்தணன் கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது போயஸ் கார்டனில் இருந்து முதலில் விஜய் இடம் கால்ஷீட் கேட்டனர். அதற்கு விஜய் ஒப்பு கொள்ளவில்லை. பிறகு சசிகலா நீங்கள் உடனே கால்ஷீட் கொடுக்க வேண்டும் என மிரட்டி தான் விஜய் வசீகரா படத்தில் நடித்தார் என்ற பேச்சு அப்பொழுது பெரிய அளவில் பேசப்பட்டதாக அந்தணன் கூறியிருக்கிறார்.