அட்லீக்கு கிடைத்த 50 கோடி ரூபாய் பரிசு… விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவில் நான்கு படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார், அதில் மூன்று படங்கள் நடிகர் விஜய் நடித்த படங்கள். விஜய் மற்றும் அட்லி இருவருக்கும் ஒரு நெருங்கிய உறவு உண்டு. தன்னுடைய அண்ணன் விஜய் என்று பல மேடைகளில் பேசி வருகின்றவர் அட்லி. தற்பொழுது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படம் ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

அதேபோன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 67 படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படப்பிடிப்பு அடுத்த சில மதங்களில் முடிவடையும் என்று தெரிகிறது. இந்நிலையில் அட்லி இயக்கும் ஜவான், விஜய் நடிக்கும் லோகேஷ் கனகராஜ் படம், இந்த இரண்டு படங்களிலும் இருவரும் முடித்துவிட்டு விஜய் 68 படத்தில் அட்லி மற்றும் விஜய் இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.

ஏற்கனவே அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திடம் இந்த ப்ராஜெக்ட்டை விஜய் கொண்டு சென்றுள்ளார். ஆனால் இந்த ப்ராஜெக்ட் மிகப் பெரிய பட்ஜெட் என்பதால் ஏஜிஎஸ் நிறுவனம் தயக்கம் காட்டி யோசித்து சொல் சொல்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால் விஜய் இந்த ப்ராஜெக்ட்டை சன் பிக்சர்ஸ்க்கு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அட்லி மனைவி பிரியாவுக்கு சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு அட்லி – பிரியா இருவரும் இருக்கும் ஒரு ஓவியத்தை பரிசாக கொடுத்தார். இந்த பரிசு அனைவருக்கும் தெரிந்தது, ஆனால் விஜய் சத்தமே இல்லாமல் 50 கோடி ரூபாய் பரிசை அட்லிக்கு கொடுத்துள்ள தகவலும் தற்பொழுது வெளியாகியுள்ளது.

வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், விஜய் மற்றும் அட்லி ஆகிய மூவரும் சந்தித்து விஜய் 68வது படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அப்போது இவர்களுடைய மேனேஜர்கள் மட்டும் இந்த சந்திப்பு பங்கேற்று உள்ளார்கள். இந்த படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட் என்றும்,

இதில் நடிகர் விஜய்க்கு 150 கோடி சம்பளம் பேசப்பட்டு, இயக்குனர் அட்லிக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடியில், 200 கோடி இயக்குனர் மற்றும் நடிகர்களுக்கான சம்பளம் போக மீத 200 கோடியில் இந்த படம் தயாராக இருக்கிறது, இயக்குனர் அட்லிக்கு வளைகாப்பு பரிசாக தன்னுடைய படத்தில் ஒப்பந்தம் செய்து சுமார் 50 கோடி ரூபாய் சம்பளத்தை பரிசாக பெற்று தந்துள்ளார் விஜய் என்கின்றது சினிமா வட்டாரங்கள்.

ரசிகர்கள் இடையே சண்டை இழுத்து விட்டு குளிர் காய்கிறாரா விஜய்.? இப்படி செய்யலாமா.?