வாரிசு நஷ்டம்.. விஜய்க்கு எதிராக போர்க்கொடி தூக்கும் விநியோகஸ்தர்கள்..சிக்கலில் விஜய் நடிக்கும் லியோ..

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு திரையில் வெளியான படம் வாரிசு. பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடிப்பில் வெளியான துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு ஆகிய இரண்டு படங்களும் ஒரே தேதியில் வெளியாகியதால், இந்த இரண்டு படத்திற்கான போட்டி மிகக் கடுமையாக இருந்தது. ஆக்சன் கலந்த த்ரில்லர் படம் துணிவு என்பதால், அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி இன்றைய இளம் தலைமுறைகள் கொண்டாடும் விதத்தில் துணிவு படம் அமைந்திருந்தது.

இதனால துணிவு ரிலீசான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று முதல் நாள் வசூலில் விஜய்யின் வாரிசை விட அஜித்தின் துணிவு அதிக வசூலை பெற்று பொங்கல் போட்டியில் துணிவு வெற்றி பெற்றது. வாரிசு படம் சீரியல் போன்று உள்ளது என கேலி கிண்டல் விமர்சனத்துக்கு உள்ளானது, ஆனால் இந்த விமர்சனமே வாரிசு படத்திற்கு ப்ரோமோஷனான அமைத்தது.

வாரிசு வெளியாகி முதல் இரண்டு நாட்கள் அந்த படத்திற்கு வரவேற்பு இல்லாமல் இருந்தது, ஆனால் வாரிசு சீரியல் போன்று இருப்பதாக வந்த விமர்சனத்தினால், பெண்கள் கூட்டம் வாரிசு படம் வெளியாகும் திரையரங்குகளில் அலைமோத தொடங்கியது. இதனால் தோல்வியை சந்திக்கும் நிலையில் இருந்த வாரிசு குடும்பங்கள் கொண்டாடும் வாரிசு என வெற்றி பெற்று, பெரும் நஷ்டத்தில் இருந்து தப்பித்து பெரும் லாபத்தை பெற்றது.

இந்த நிலையில் வாரிசு திரைப்படம் வெளிநாடுகளில் வெளியான திரையரங்குகளில் ஆரம்பத்தில் இருந்தே வரவேற்ப்பு இல்லாமல் இருந்தது, மேலும் அஜித் நடிக்கும் அடுத்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருந்ததால், துணிவு படத்திற்கு மிக பெரிய அளவில் லைக்கா நிறுவனம் வெளிநாடுகளில் விளம்பரம் செய்தது, அதே நேரத்தில் பல நாடுகளில் லைக்கா நிறுவனம் துணிவு படத்தை நேரடியாக வாங்கி வெளியிட்டது அந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைத்தது.

இந்த நிலையில் வெளிநாடுகளில் வாரிசு திரையிடப்பட்ட திரையரங்குகளில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் வாரிசு நஷ்டத்தை சரி செய்வதற்காக விஜய் நடிக்கும் லியோ படத்தை மிக குறைந்த விலைக்கு எங்களுக்கு தர வேண்டும் என வெளிநாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் வெளிநாட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் நடிகர் விஜய்க்கு எதிராக போர் கொடி தூக்கி வருவதாக தகவல் வெளியகியுள்ளது.

ஆனால் இது குறித்து விசாரித்த போது, வாரிசு படம் வெளிநாடுகளில் வெளியாகி முதல் இரண்டு நாட்கள் தமிழகத்தை போன்று வரவேற்பு இல்லாமல் இருந்தது, ஆனால் அடுத்தடுத்து பெண்கள் கூட்டம் அதிகரிக்க வாரிசு நல்ல வசூலை பெற்று தந்துள்ளது.ஆனால் வாரிசு படம் வெற்றி அடைந்து விட்டது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டால், விஜய் நடிக்கும் லியோ படத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள் என்பதால்.

வாரிசு படம் தோல்வியை தழுவி எங்களுக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது, அதனால் லியோ படத்தை குறைந்த விலைக்கு கொடுக்க வேண்டும் என்கிற வியாபார தந்திரம் காரணமாக தான் வெளிநாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வாரிசு படம் தோல்வியை கொடுத்துள்ளது என தெரிவித்து, நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்திற்கு நெருக்கடி கொடுத்து போர் கொடி தூக்கி வருவதாக கூறப்படுகிறது.