சினிமாவில் உச்சத்தில் இருந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு வாய் கொழுப்பெடுத்து ஆணவத்தால் சினிமாவில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனார் வடிவேலு. இதன் பின்பு நீண்ட இடைவெளிக்கு பின்பு ரீ என்ட்ரி கொடுத்த வடிவேலு பட்டும் திருந்தவில்லை என்று சொல்லும் அளவுக்கு இன்னும் அவருடைய ஆணவம் மற்றும் வாய் கொழுப்பு அடங்கவில்லை என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது கூறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் லைக்கா தயாரிப்பில் வெளியான நாய் சேகர் ரிட்டன் படத்தில் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து தயாரிப்பு தரப்பிற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் சொல்வதை வடிவேலு கேட்பதில்லை, கதை காட்சிகள் அனைத்துமே வடிவேலு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி படத்தை கெடுத்துள்ளார்.
அதேபோன்று லைக்கா தயாரிப்பில் சந்திரமுகி 2 படத்தில் வடிவேலு காமெடியனாக நடித்து வரும் நிலையில் படப்பிடிப்பில் தொடர்ந்து படத்தின் இயக்குனர் பி வாசு மற்றும் வடிவேலு இடையே மோதல் நடைபெற்று வந்துள்ளது. இதனால் படத்தின் படப்பிடிப்பை மிக சிரமத்துடன் நடத்தி வருகிறார் பி வாசு. இதனை தொடர்ந்து இயக்குனர் பி வாசுவை தொடர்பு கொண்ட தயாரிப்பு நிறுவனம் வடிவேலு நடிக்கும் காட்சிகளை பெரும் அளவு குறைத்து விடுங்கள் என்றும். முடிந்தளவு இந்த படத்தில் வடிவேலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வின்னர், கிரி, லண்டன் , தலைநகரம் என தொடர்ந்து வெற்றி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் வடிவேலு, அடுத்த சுந்தர் சி இயக்கத்தில் ரெண்டு படத்தில் நடித்து கொண்டிருந்த போது இயக்குனர் சுந்தர் சி உடன் மோதல் போக்கை கடைபிடித்துள்ளார், மேலும் என்னுடைய நகைச்சுவை காட்சி இல்லை என்றால் சுந்தர் சி படத்தை யார் பார்ப்பார்கள் என ஆணவத்துடன் பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து ரெண்டு படத்தில் பாதியிலே வடிவேலுவை விரட்டிவிட்டு சந்தனத்தை இரண்டாம் பாதியில் நடிக்க வைத்தர் சுந்தர் சி, இதன் பின்பு தனது எந்த ஒரு படத்திலும் நடிகர் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதே போன்று நடிகர் அஜித் உடன் ராஜா படத்தில் வடிவேலு நடித்த போது. படத்தின் படப்பிடிப்பு கொடைகானலில் நடைபெற்றுளளது. அப்போது நடிகர் அஜித்தை ஆணவத்துடன் அவமதித்துள்ளார் வடிவேலு.
படத்தில் அஜித் உடன் வடிவேலு பேசும் காட்சிகளில் அஜித்தை வாடா.. போடா .. என்று வடிவேலு பேசியுள்ளார். ஆனால் இயக்குனர் அப்படி வசனம் எழுதி கொடுக்கவில்லை. இயக்குனர் பலமுறை எடுத்து கூறியும் கேட்க வில்லை. மேலும் படப்பிடிப்பு தளத்தில் சாதாரணமாக பேசும் போது கூட அஜித்தை வாடா… போடா.. என்று வடிவேலு பேசியுள்ளார். படப்பிடிப்பில் இருந்தவர்கள் அஜித் சார் என்று கூப்பிடுங்க, அல்லது அஜித் தம்பி என்று கூப்பிடுங்க என்று வலியுறுத்தி உள்ளனர்.
என்னப்பா.. என்னை விட அவருக்கு வயசு குறைவு தான அப்புறம் என்ன.. என்று தொடர்ந்து அஜித்தை வாடா..போடா.. என்றே அழைத்து வந்துள்ளார் வடிவேலு. இதை நடிகர் அஜித் பெரும் அவமரியாதையாக கருத்தியுள்ளார். இதன் பின்பு நடிகர் வடிவேலு உடன் அஜித் நடிக்க கூடாது என முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இப்படி தான் வாய்க்கொழுப்பு எடுத்து ஆணவத்தால் சினிமாவில் வடிவேலு காணாமல் போனார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்பொழுது சினிமாவில் பல வருடம் வாய்ப்பு கிடைக்காமல் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு, நடித்த படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது. மேலும் வடிவேலு நடிக்கும் சந்திரமுகி படத்தில் வடிவேலுக்கு முக்கியத்துவம் இல்லை எனபதால், இந்த படத்தில் வடிவேலு கதாபாத்திரம் பெருமளவு பேசப்படாது. அந்த வகையில் தற்பொழுது வடிவேலு நடித்து வரும் மாமன்னன் படத்தை மட்டுமே முழுக்க முழுக்க நம்பி உள்ளார் வடிவேலு.