வடிவேலு சாயலில் பிரபல காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறியப்பட்டவர் காதல் சுகுமார். இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான காதல் படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து பிரபலம் அடைந்தார்.ஆனால் காதல் படத்திற்கு முன்பாகவே இவர் கமலுடன் விருமாண்டி என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால் காதல் படத்தின் மூலம் தான் சுகுமாருக்க சினிமாவில் தனி அங்கீகாரம் கிடைத்தது.
தொடர்ந்து வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அறை எண் 305ல் கடவுள், விசிடி, என் ஆளோட செருப்ப காணோம் போன்ற பல படங்களில் நடித்த காதல் சுகுமார், ஒரு நடிகராக மட்டுமில்லாமல், சில படங்களை இயக்கியும் உள்ளார், அதில் அவருடைய இயக்கத்தில் விசிடி மற்றும் 2016 ஆம் ஆண்டு சும்மா ஆடுவோம் என்று கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை படமாக இயக்கி இருந்தார். காதல் சுகுமார் நடிப்பு வடிவேலு சாயலில் இருந்து வந்ததால், வடிவேலுக்கு பதில் இவரை வைத்து படம் எடுத்தால் என்ன என்கிற அளவுக்கு சுகுமாரின் காதல் காட்சிகள் சிறப்பாக இருந்தது.
சுகுமார் சினிமாவில் ஆரம்பகட்டத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வந்தவர், திடீரென காணாமல் போனார், இந்நிலையில் தற்பொழுது சுகுமார் மிக பிரபலமாக வளர்ந்து வந்த கலகட்டத்தில் வடிவேலு இவருக்கு செய்த இடையூறுகளைப் பற்றி சுகுமார் பேசியுள்ளது பார்ப்பவரை கண்கலங்க வைத்துள்ளது, அந்த பேட்டியில் பேசிய சுகுமார் வடிவேலு தனக்கு பல மோசமான காரியங்களை செய்ததாக தெரிவித்துள்ளவர்.
மேலும் “வடிவேலு தன்னை சந்திக்குமாறு அழைத்தார். நான் அவரை சந்திக்கபோனபோது, ஏன் தம்பி ஒவ்வொரு கம்பெனியா போய் என்னை மாறி நடிப்பேனு சொன்னீங்களாமே என கேட்டார். சினிமால அப்படி பண்ண மாட்டேனு அவரிடம் சொன்னேன். அதற்கு அவர், இல்லையே ஒரு படத்தில் அப்படி நடிச்சிருக்கீங்களே என கேட்டார். அதற்கு நான், இல்லணே வாய்ப்பு வந்தது. வேறு வழியில்லாமல் நடித்தேன். இனி அப்படி பண்ண மாட்டேன் என வடிவேலுவிடம் சுகுமார் தெரிவித்துள்ளார்.
அபப்டி வடிவேலுவிடம் சுகுமார் பேசிக்கொண்டே இருக்கும்போதே என்னடா எதிர்த்து பேசற, என பின்னாடி ஒருவர் பிடித்து தன்னை தள்ளியதாக தெரிவித்த சுகுமார், பின்னர் தாறுமாறாக அவரை அங்கிருந்தவர்கள் தாக்கியதாகவும், இதனை தொடர்ந்து இனி அப்படி பண்ண மாட்டேன், ஊர விட்டு ஓடிடுறேன் என்று சுகுமார் தெரிவித்த பின்பும் கூட, வடிவேலு நேரில் வரவழைத்து ஆட்களை வைத்து அடித்ததை சுகுமார் வெளியில் சொல்லிவிட கூடாது என்பதற்காக.
சுகுமாரிடம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியதாகவும், அதில் வடிவேலுவை சந்தித்து பத்தாயிரம் ரூபாய் சுகுமார் பெற்றுக்கொண்டதாக ஒப்பந்தம் போட்டு தன்னிடம் கையெழுத்து வாங்கியதாக தெரிவித்த சுகுமார், இன்றும் அந்தப் பத்திரம் இன்னும் வடிவேலுவிடம் தான் உள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய சுகுமார் இதற்காக வடிவேலுவை அடுத்து ஒரு முறை சந்தித்த போது பழி தீர்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதாவது ஏவிஎம் தியேட்டரில் சிங்கம் களம் இறங்கிடுச்சு என்ற காட்சியில் நடிப்பதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு அங்கே வடிவேலு இருந்துள்ளார், அதே இடத்தில் காதல் சுகுமாரும் இருந்துள்ளார். அப்பொழுது சுகுமாரை தாண்டி வடிவேலு சென்ற போது அங்கிருந்தவர்கள் வடிவேலுவை பார்த்து எழுந்து நின்று மரியாதை செய்துள்ளார்கள், ஆனால் சுகுமார் மட்டும் கால் மேல் கால் போட்டு வடிவேலுவை பார்த்துள்ளார், உடனே சுகுமாரை பார்த்தவுடன் வேறுபக்கமாக சென்றுள்ளார் வடிவேலு என தெரிவித்த காதல் சுகுமார்.
மேலும் நடிகர்களும் சில நேரம் அரசியல்வாதி போல நடந்து கொள்வார்கள். சினிமாவில் ஆண்களுக்கு இந்த நிலைமை என்றால் பெண்கள் நிலைமை ரொம்ப மோசம். எல்லாத்துக்கும் சம்மதிக்க வேண்டும் இல்லையென்றால் வீட்டில் தான் உட்கார வேண்டும். சினிமாவிலும் நிறைய அரசியல் நடக்கிறது” என சுகுமார் தெரிவித்துள்ளது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.