கேப்டனை மட்டுமா…. வாழ்க்கை கொடுத்த ராஜ்கிரனையும் அவமானபடுத்திய வடிவேலு…இவரெல்லாம் மனுஷன் தானா.?

0
Follow on Google News

மதுரையில் இருந்து வடிவேலுவை சென்னைக்கு அழைத்து வந்தவர் ராஜ்கிரண். ராஜ்கிரண் அலுவலகத்தில் ஆபிஸ் பையனாக வேலை செய்து வந்த வடிவேலு, ராஜ்கிரணுக்கு எடுபுடி வேலைகளையும் செய்து வந்தார். வடிவேலு நல்ல திறமையான ஆளாக இருக்கானே என்று அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பை அமைத்து கொடுத்தவர் வடிவேலு. அதன் பின்பு விஜயகாந்த் பார்வையில் வடிவேலு பட, அடுத்தடுத்து பட வாய்ப்புகளை வடிவேலுக்கு ஏற்படுத்தி கொடுத்தவர் விஜயகாந்த்.

இதன் பின்பு அடுத்தடுத்து சினிமாவில் நடித்து உச்சகட்ட காமெடி நடிகரானார் வடிவேலு. சொந்தமாக படம் தயாரித்து நஷ்டம் அடைந்து நெருக்கடியில் இருந்து வந்தார் ராஜ்கிரண். அப்போது ராஜ்கிரண் பணப்பிரச்சனையில் இருப்பதை தெரிந்து கொண்ட வடிவேலு, சில லட்சங்கள் கொடுத்து உதவி செய்துள்ளார். ஆனால் செய்த உதவியை வெளியில் தம்பட்டம் அடிப்பது போன்று. ராஜ்கிரண் மிக பெரிய கஷ்டத்தில் இருக்கிறார். நான் தான் பண உதவி செய்துள்ளேன் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்க. இந்த செய்தி பரவலானது.

இது ராஜ்கிரணுக்கு மிக பெரிய அவமானத்தை சினிமா வட்டாரத்தில் பெற்று தந்தது. அப்போது ராஜ்கிரண் தனக்கு நெருக்கமானவர்களிடம் நான் வடிவேலுவிடம் பணம் கேட்கவில்லை வடிவேலுவாக வந்து பணம் கொடுத்தான். அதை வெளியில் அனைவரிடம் தெரிவித்து என்னை அசிக்கப்படுத்தி விட்டார், என ராஜ்கிரண் வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கலைஞர் 100 நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. விழாமேடைக்கு கார் பார்க்கிங்கில் இருந்து பேட்டரி கார் மூலம் முக்கிய திரையுலகினர் அழைத்து செல்லப்பட்டனர். அதில் ஆறேழு பேர் பயணம் செய்யலாம். ஆளுக்கு ஒரு பேட்டரி கார் வருமென நினைத்திருந்தார்கள். ஆனால் ஏற்கனவே சோனியா அகர்வால் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே நயன்தாரா அமர வைக்கப்பட்டதால்..அப்செட் ஆனார் அவர்.

அடுத்து வடிவேலு வந்தார். பேட்டரி காரில் ராஜ்கிரணுக்கு அருகே அமர்வோம் என அவர் எதிர்பார்க்கவில்லை. அதனால் கடுப்பான வடிவேலு… உடனே வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு கீழே இறங்கிவிட்டார். ராஜ்கிரணை ஏறிட்டு கூட பார்க்கவில்லையாம். அதன்பிறகு வந்த பேட்டரி காரில் டிரைவருக்கு அருகே அமர்ந்து விழா மேடைக்கு சென்றுள்ளார்.

ராஜ்கிரண் அலுவலகத்தில் எடுபுடி வேலை பார்த்து வந்த வடிவேலுவை முறைப்படி காமடி கேரக்டரும், ஒரு பாடல் காட்சியும் அளித்து தன்னுடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து உதவியர் ராஜ்கிரண். அடுத்து சின்னக்கவுண்டரில் வாய்ப்பு தந்தார் விஜயகாந்த்.என் ராசாவின் மனசில், சின்னக்கவுண்டர் படங்களில் ஏற்கனவே கவுண்டமணி, செந்தில் போன்ற காமெடியன்கள் இருக்கும்போது இவர் எதற்கு என மற்றவர்கள் கூறியும் ‘பரவாயில்லை. திறமைசாலி. வாய்ப்பு அளிக்கலாம்’ எனக்கூறி கைதூக்கி விட்டார்கள் ராஜ்கிரணும், கேப்டனும்.

தனக்கு வாழ்வளித்த ராஜ்கிரணை கூட பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருக்கிறார் வடிவேலு என கலைஞர் 100 நிகழ்வில் நடந்த இந்த நிகழ்வை தெரிவித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். மேலும் மதுரை சுற்றி திரிந்த வடிவேலுவை அழைத்து வந்து வாழ்க்கை கொடுத்த ராஜ்கிரண் அருகில் இருந்தும் கண்டு கொள்ளாமல் வடிவேலு சென்றுள்ளதாக கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.