போச்சா.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க… மாமன்னன் படத்தில் பின்னடைவுக்கு இது தான் காரணம்…

0
Follow on Google News

இயக்குனர் மாரிசெல்வராஜ் மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய பல்வேறு சர்ச்சைகளும், விமர்சனக்ளுக்கும் மத்தியில் திரைக்கும் வந்துள்ளது மாமன்னன் படம். இந்த படம் வெளியாவதற்கு முன்பு, இதில் மாமனானாக வடிவேலுவின் கதாபாத்திரம் தான் இருக்கும் என அந்த படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ் பேசிய பேச்சுக்கள். மேலும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் வடிவேலு முன்னிலை படுத்தப்பட்டு வந்தார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து காமெடியனாகவே பார்க்கப்பட்ட வடிவேலு நடித்த காமெடி காட்சிகள் வருடங்கள் கடந்து இன்றும் பார்க்க பட்டால் கூட வயிறு குலுங்கி சிரிக்கலாம், ஒரு காமெடி நடிகனாக வடிவேலு மார்க்கெட் இழந்தாலும் கூட, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப அவருடைய பழைய காமெடி கட்சிகளுக்கு இன்றளவும் மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

குறிப்பாக சமூக ஊடகங்களில் வடிவேலு மீம்ஸ் இன்றளவும் ஆதிக்க செலுத்தி வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் தொடர்ந்து ஒரு காமெடியனாக மக்கள் பார்த்த வடிவேலு, ஒரு சீரியசான கதாபாத்திரத்தை ஏற்று மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் இந்த படம் வெளியாவதற்கு முன்பே பலரும் வடிவேலு நடிக்கும் சீரியஸான கதாபாத்திரம் மக்கள் மத்தியில் ரசிக்கும்படி இருக்காது என்றும், அந்த வகையில் மாரிசெல்வராஜ் தவறு செய்துவிட்டார் என எச்சரித்து வந்தனர்.

அதை நிரூபிக்கும் வகையிலேயே வடிவேலுவின் பல காட்சிகள் மாமன்னன் படத்தில் அமைந்துள்ளது. வடிவேலுவின் காமெடி வசனங்களையே பன்ச் வசனங்களாக இயக்குனர் மாரிசெல்வராஜ் மாற்றிவிட்டார் என மாமன்னன் படத்தில் வடிவேலு சீரியசாக பேசும் வசனங்கள் அமைத்துள்ளது. அந்த வகையில் மாமன்னன் படத்தில் மாமன்னனாக முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலுவுக்கு பதில் வேறு ஒரு குணசித்திர நடிகரை நடிக்க வைத்திருக்கலாம் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

ராஜ்கிரண், தம்பி ராமையா போன்ற ஒரு குணச்சித்திர நடிகர் வடிவேலுவுக்கு பதில் மாமன்னன் படத்தில் நடித்திருந்தால், அந்த கதாபாத்திரம் மிக பெரிய அளவில் மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கும். மேலும் படத்தை பார்க்கின்ற ரசிகர்களுக்கும் அந்த கதாபாத்திரம் மிக ஆழமாக மனதில் பதிந்திருக்கும். ஆனால் ஒரு காமெடியனாக பார்த்த ஒரு நடிகர் சீரியஸாக நடிக்கும் போது அந்த கதாபாத்திரம் மக்கள் மனதில் பதியவில்லை என்றே சொல்லலாம்.

மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் என்பது, ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து கொண்டு, தொடர்ந்து பத்து வருடங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஒரு முதிர்ச்சியான ஒரு அரசியல்வாதியாக வடிவேலுவின் கதாபாத்திரம் அமைத்துள்ளது. அந்த வகையில் இந்த கதாபாத்திரத்திற்கு எத்தனையோ குணச்சித்திர நடிகர்கள் பொருத்தமாக இருந்திருப்பார்கள். ஆனால் வடிவேலுவின் தேர்வு என்பது இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

ஒரு காமெடியனாகவே அறியப்பட்ட வடிவேலு மாமன்னன் படத்தில் நடிக்கும் பல காட்சிகளில், தான் நடிக்கும் இந்த கதாபாத்திரத்தை மக்கள் சீரியசாக எடுத்து கொள்வார்களா.? இது நமக்கு சரியாக இருக்குமா? நம்மால் அஇந்த காட்சியில் நடிக்க முடியுமா? என்கின்ற ஒரு அச்சத்துடனே வடிவேலு இந்த படத்தை நடித்துள்ளது திரையில் பார்க்கும் பொழுதே வெளிப்படுகிறது என்கின்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

அந்த வகையில் மாமன்னன் படத்தில் மாமன்னனாக வடிவேலுவை தேர்வு செய்து அந்த படத்திற்கு மிக பெரிய பின்னடைவு ஏற்படுவதற்கு இயக்குனர் மாரிசெல்வராஜே முக்கிய காரணமாக அமைந்துவிட்டார் என்கின்றனர் எதிர்பார்ப்புடன் படம் பார்க்க சென்ற ரசிகர்கள்.