நடிகர் விஜயகாந்த் மரணம் அடைந்து நாட்கள் கடந்து கொண்டாலும் இன்னும் சோகத்திலிருந்து மீளாமல் மக்கள் தினந்தோறும் கோயம்பேட்டில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருவதை பார்க்க முடிகிறது. விஜயகாந்த் சினிமா துறையில் யாருடனும் பகைமையை சம்பாதித்ததாக வரலாறு கிடையாது.
விஜயகாந்த் கோபப்படக் கூடியவர், யாரையும் சட்டென்று அடிக்கக் கூடியவர் என்று விமர்சனம் இருந்தாலும் கூட, தான் சார்ந்த சினிமா துறவினர் அனைவரும் கலைஞர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார், அதேபோன்று அவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது அனைத்து நடிகர்களையும் ஒருங்கிணைத்து அவர் நடத்திய கலை நிகழ்ச்சியே சினிமா துறையினர் எந்த அளவுக்கு ஒற்றுமையாக ஈகோ இல்லாம இருந்தார்கள் என்பதற்கு சாட்சி.
அந்த வகையில் விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பின்பு அவரால் வளர்ந்த வடிவேலு மேடைகளில் விஜயகாந்தை மிக இழிவாகவும் பேசினாலும் கூட, தன்னை இழிவு படுத்திய வடிவேலு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த காலத்தில், அவன் எல்லாம் பிறவி கலைஞன் அவனுக்கு பட வாய்ப்பு கொடுங்கள் என பல தயாரிப்பாளர் இயக்குனர்களிடம் விஜயகாந்த் நேரடியாக சொன்னதாக கூறப்படுகிறது.
வடிவேலுவின் சினிமா வீழ்ச்சி என்பது, எப்போது விஜயகாந்த் அவருக்கு செய்த நன்றியை மறந்து நாக்கில் நரம்பு இல்லாமல் மிக கீழ்த்தரமாக விஜயகாந்தை பேச தொடங்கினாரோ அன்றே வடிவேலுவின் சினிமா வாழ்கை அழிவை நோக்கி செல்ல தொடங்கி விட்டது, விஜயகாந்தை இழிவாக வடிவேலு பேசிய மிக குறுகிய காலத்திலே சினிமாவில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனார் வடிவேலு.
வடிவேலு தன்னை இழிவாக பேசியதால் விஜயகாந்த் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி வடிவேலுவை சினிமாவில் காலி செய்தாரா என்றால் இல்லை, ஏனென்றால் விஜயகாந்துக்கு ஒருத்தரை வாழ வைத்து தான் பழக்கம், ஒருத்தர் விஜயகாந்தால் அழிந்தார் என்கிற வரலாறு கிடையாது, விஜயகாந்தை இழிவாக பேசிய வடிவேலுவை மக்களே புறக்கணிதத்தின் விளைவு தான் சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போனார்.
சினிமாவில் வீழ்ந்த வடிவேலு மீண்டு எழுந்து வர 12 வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறார், கேப்டனுக்கு செய்த துரோகம் இன்னும் எழுந்து வரமுடியாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது நடிகர் இளவரசு விஜயகாந்த் உடனான தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார் அதில், “எங்கள் ஆசான் படத்தில் விஜயகாந்த்துடன் நடித்தேன். அப்போது அவரிடம் அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.
அதற்கு அவர், ‘ஐயோ முடியவே இல்ல. ஒருத்தனும் சொன்ன பேச்ச கேட்க மாட்டேங்குறான். சட்டப்பேரவையில் நடப்பதெல்லாம் பார்த்தால் கடுப்பா இருக்கு. ஒன்னு சொன்னா வெளியே ஒன்னு போடுறானுங்க. ஒரே டார்ச்சர். இரவில் வடிவேலுவின் காமெடியை பார்த்து சிரித்துவிட்டுத்தான் தூங்கவே போகிறேன் என சொன்னார். உடனே நான் அவரது முகத்தை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.
அதை புரிந்துகொண்ட விஜயகாந்த், ‘அவன் திட்டுனா திட்டிட்டுப்போறான் இளவரசு. அவனுக்கு அவ்ளோதான் அறிவு’ என்று கள்ளங்கம் இல்லாமல் விஜயகாந்த் கூறியதாக இளவரசு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இப்படி கள்ளம் கபடம் இல்லாத மனுசன தான் வடிவேலு நாக்கில் நரம்பு இல்லாமல் பேசினாரா என விமர்சனம் எழுந்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.