என் வீட்டு பக்கமே வர கூடாது என விரட்டியடிப்பு… வடிவேலு – சுந்தர் சி இடையில் நடந்தது என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சுந்தர் சி வடிவேலு காம்பினேஷனில் வெளியான படங்களில் வின்னர், கிரி, லண்டன் என தொடர்ந்து நகைச்சுவையில் செம ஹிட் அடித்தது. இதில் வின்னர், கிரி ஆகிய படங்களில் இடம்பெற்ற வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் தற்போது பார்த்தால் கூட சலிப்பு இல்லாமல் சிரிப்பு வரும். 2003ம் ஆண்டு 2004ம் ஆண்டு ஆகிய காலகட்டங்களில் இந்த மூன்று படங்கள் சுந்தர் சி – வடிவேலு காமினேஷனில் வெளியானது.

அப்போது வடிவேலு மிகப் பெரிய உச்சத்தில் இருந்தவர். இந்நிலையில் மீண்டும் சுந்தர் சி- வடிவேலு காம்பினேஷனில் ரெண்டு என்கின்ற படத்தில் இணைந்தார்கள். ஆனால் இரண்டு படத்தில் சந்தானம் நடிப்பதை வடிவேலுக்கு தெரிவிக்காமலேயே வடிவேலு நடிக்கும் காட்சிகளை சுந்தர் சி எடுத்து முடித்த பின்பு, வடிவேலுக்குத் தெரியாமல் சந்தானம் நடிக்கும் காட்சிகளை எடுத்து வந்துள்ளார் சுந்தர் சி.

படம் முழுவதும் எடுத்து முடிக்கப்பட்டு படத்தில் நடித்த அனைவரும் வரவழைக்கப்பட்டு ரெண்டு படம் திரையிடப்பட்டது. இந்த படத்தில் சந்தானம் இடம்பெறும் காட்சியை பார்த்த வடிவேலுக்கு பெரிய அதிர்ச்சி. படம் பார்த்துக் கொண்டிருந்தபோதே பாதியிலே வெளியான சுந்தர் சி இடம் சண்டையிட்டு வெளியேறினார் வடிவேலு. இந்த நிலையில் சுந்தர் சி- வடிவேலு இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்தது.

ஆனால் வடிவேலு இனி நான் சுந்தர் சி படத்தில் நடிக்க மாட்டேன். என்னிடம் கால்ஷீட் கேட்டு என் வீட்டு பக்கமே அவர் வந்து விடக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இருந்தும் தொடர்ந்து வடிவேலு -சுந்தர் சி யையும் மீண்டும் இணைத்து வைத்து படம் எடுக்கும் முயற்சியில் சுந்தர் சி மனைவி குஷ்பூ பேச்சு வார்த்தை நடத்தினார். ஒரு கட்டத்தில் நகரம் என்கின்ற படத்தில் சுந்தர் சி – வடிவேலு காம்பினேஷனில் மீண்டும் இணைந்தது.

இந்த படத்தை குஷ்பூ சொந்தமாக தயாரித்தார், ஆனால் நகரம் படத்தில் நடிக்க பத்து நாள் கால் சீட் தான் தர முடியும், ஒரு நாளைக்கு பத்து லட்சம் மொத்தம் பத்து நாளைக்கு ஒரு கோடி சம்பளம் பேசி கமிட் ஆகியுள்ளார் வடிவேலு. ஆனால் சுந்தர் சி மீது இருந்த கோபம் வடிவேலுக்கு கொஞ்சமும் குறையவில்லை. அதனால் சுந்தர்.சியை பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் சுந்தர் சிக்கு கடுமையான டார்ச்சர் செய்து வந்துள்ளார் வடிவேலு.

ஒரு கட்டத்தில் ஒன்பதாவது நாள் படப்பிடிப்பு தொடக்கத்தின் போது வடிவேலுவின் டார்ச்சர் தாங்க முடியாமல் நெஞ்சு வலிக்கிறது என கேரவன் உள்ளே சென்று படுத்துவிட்டார் சுந்தர் சி. தனது உதவி இயக்குனர்களை அழைத்து இனி இவரை வைத்து என்னால் படம் எடுக்க முடியாது, நீங்கள் மீதி காட்சிகளை இன்று ஒரு நாளே எடுத்து முடித்து விடுங்கள் என தெரிந்து விட்டார் சுந்தர் சி.

இதனைத் தொடர்ந்து உதவி இயக்குநர்கள் ஒன்பதாவது நாளில் வடிவேலுவை வைத்து மொத்த காட்சியும் எடுத்து முடித்துள்ளனர். ஆனால் 9 நாளில் படம் எடுக்கப்பட்டாலும், ஒரு நாள் வேலை செய்யவில்லை என்றாலும் கூட, பேசியது போன்று பத்து நாள் கால் சீட்டுக்கான சம்பளம் எனக்கு கொடுத்தாக வேண்டும். அப்படி இல்லை என்றால் டப்பிங் பேச வர மாட்டேன் என தெரிவித்துவிட்டார் வடிவேலு.

இதனைத் தொடர்ந்து ஒன்பது நாள் படம் நடித்த வடிவேலுக்கு பத்து நாள் கால்சீட் சம்பளம் கொடுத்து டப்பிங் பேச வைத்துள்ளனர் இயக்குனர் சுந்தர் சி மற்றும் நகரம் படத்தின் தயாரிப்பாளரான குஷ்பூ ஆகியோர். இதன் பின்பு இனி நான் வடிவேலுவை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்கின்ற முடிவுக்கு வந்தார் சுந்தர் சி என்பது குறிப்பிடத்தக்கது.

மானம், மரியாதை போச்சு… லெஜெண்ட் சரவணன் குடும்பத்தில் வெடித்த பிரச்சனை… என்ன பிரட்சனை தெரியுமா.?