மரணத்திற்கு போராடிய சொந்த தம்பி… வடிவேலுக்கு கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா.?

0
Follow on Google News

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். 1988ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

மேலும், இவர் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சத்யராஜ், பிரபு, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு படத்திலும் இவருடைய கதாபாத்திரம் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. மேலும், இவர் காமெடி நடிகராக மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் படங்களில் நடித்து இருக்கிறார்.

அதிலும், இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார் வடிவேலு. இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து வடிவேலு நடிக்கும் படத்தின் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவரிடமும் முரண்டப்படாக செய்யப்பட்டு வந்ததால், பல வருடங்கள் பட வாய்ப்புகள் இல்லாமல், வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

தற்போது சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு புதியதாக படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இந்த படம் பெரும் தோல்வியை தழுவி இருந்தது. இப்படி ரீ என்ட்ரி கொடுத்த படம் தோல்வியடைந்ததை நினைத்து சோகத்தில் இருந்த வடிவேலுவிற்கு மாமன்னன் திரைப்படம் வடிவேலுவிற்கு ஒரு கம் பேக் படமாக அமைந்தது.

தற்போது அடுத்தடுத்து படங்களால் மகிழ்ச்சியில் இருக்கும் வடிவேலுவிற்கு சோகத்தை ஏற்படுத்தும் விதமாக அவரது சகோதரர் காலமாகி இருக்கிறார். நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் கடந்த மாதம் உடல் நலக்குறைவின் காரணமாக மரணம் அடைந்திருக்கிறார். அவருக்கு வயது 52. இவர் மலைக்கோவில் தீபம், காதல் அழிவதில்லை’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்த அவர், கடந்த சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பால அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த மாதம் காலமானார். இந்நிலையில் மூத்த சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், யூடியூப் சேனல் ஒன்றில் வடிவேலுவின் தம்பி மரணம் குறித்து பேசி உள்ளார்.

அதில், வடிவேலு மாபெரும் நகைச்சுவை நடிகர், மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார், இதை கண்கூடாக நான் பார்த்து இருக்கிறேன். அவர் சிறந்த நடிகர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், வடிவேலு தனது குடும்பத்தை இதுவரையில் வெளி உலகத்திற்கு காட்டியதே இல்லை. அவருடன் பிறந்தவர்கள் எத்தனை பேர், மகன்,மகள் இப்படி எந்த விவரமும் யாருக்கும் தெரியாது.

அதே போல, தனது மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நடந்த போதும் பத்திரிக்கையாளர்கள் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகத்தான் செய்தார். அது போலத்தான் வடிவேலுவிற்கு ஒரு தம்பி இருப்பதும், அவர் காதல் அழிவதில்லை படத்தில் நடித்துள்ளதும் தற்போது தான் தெரியவந்துள்ளது. மறைந்த வடிவேலுவின் தம்பி பார்ப்பதற்கு அச்சு அசல் வடிவேலு போலவே இருக்கிறார். இரண்டு படத்தில் நடித்துள்ள இவரை வடிவேலு நினைத்து இருந்தால், சினிமாவில் நடிகராக்கி இருக்கலாம்.

ஆனால், வடிவேலு அதை செய்யவில்லை. ஜெகதீசனுக்கு வேறு வேலை இல்லாததால் பிழைப்புக்காக ஜவுளி கடையை நடத்தி வந்துள்ளார். வடிவேலு தம்பி 55 வயசுல கல்லீரல் செயல் இழந்து உயிரிழந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது சாதாரணமாகி விட்டது. இவர் உதயநிதி இடமோ, மா சுப்பிரமணியத்திடமோ உதவி கேட்டு இருந்தால், நிச்சயம் உதவி செய்து இருப்பார்கள்.

ஆனால், வடிவேலுவிற்கு உதவ மனம் வரவில்லை. சாகுற வயசா இது…கோடி கோடியா பணம் இருந்தும், தம்பியை இப்படி சாக விட்டுவிட்டார் என்கிற வேதனையில் இதை சொல்கிறேன். மற்றபடி வடிவேலு மீது குற்றம்சாட்டவில்லை என்று பயில்வான் ரங்நாதன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.