என்னை வடிவேலு ஆட்கள் வைத்து அடித்தார்.. காதல் சுகுமாருக்கு நடந்த துயர சம்பவம்…

0
Follow on Google News

கோலிவுட்டில் மிகப்பெரிய காமெடியனாக வலம் வந்தவர்தான் வடிவேலு. ஆனால் பல தரப்பட்ட பிரச்சனைகளின் காரணமாக அவர் நடிப்பில் இருந்து சில காலம் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் அவர் மீண்டும் வந்த பொழுது அவரது காமெடி எடுபடவில்லை. அந்தப் படம் படுதோல்வி அடைந்தது. ஆனால் கொஞ்சமும் தளர்வு அடையாமல் தனது நடிப்பை மெருகேற்றி, தற்போது வடிவேலு மாமன்னன் படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து விட்டார். அவர் என்னதான் நடிப்பில் கம்பேக் கொடுத்திருந்தாலும் அவருடன் நடித்த சக நடிகர்கள் அவர் மீது பல குற்ற சாட்டுகளை வைத்து வருகின்றனர்.

ஒன்றிரண்டு பேருடன் நின்றுவிடும் என நினைத்தால் அந்தப் பட்டியல் மளிகை கடை லிஸ்ட் போல் நீண்டு கொண்டே செல்கிறது. அந்தவகையில் நடிகர் காதல் சுகுமார் தற்போது ஒரு பகீர் சம்பவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் பேசியிருக்கும் அந்த வீடியோவானது தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,

“ஒருமுறை வடிவேலுவுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. அப்போது போண்டா மணியும், முத்துக்காளையும் வந்து என்னிடம் உங்களை வடிவேலு பார்க்க விரும்புவதாக சொன்னார்கள்.நான் உடனே மகிழ்ச்சியாகி அடடா நம் குருநாதரை பார்க்கப்போகிறோமே என்ற பெரும் ஆவலோடு பொக்கே எல்லாம் வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன்.

மருத்துவமனைக்கு சென்ற நான், ‘அண்ணே வணக்கம். குரு இல்லாம வித்தை கத்துகிட்ட மாதிரி அண்ணே’என்றேன். உடனே அவர் ஆமாம்யா என் வயித்துல பிறந்தவன் மாதிரியே நீ இருக்கனு என் ஆத்தா சொல்லும்யா என சொல்லி பேசிக்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் போண்டா மணியையும், முத்துக்காளையையும் வெளியே அனுப்பிவிட்டார்கள். அதற்கு பிறகு என்ன ப்பா நீ பல கம்பெனில போயி என்ன மாதிரி நடிப்பேனு சொல்றியாமேனு கேட்டாரு.

அண்ணே உங்கள மாதிரி நடிப்பேனு உலகத்துக்கே தெரியும். அது ஷோவுல பண்ணுவேன் சினிமால இல்லை என்றேன். இல்லையே ஒரு படத்துல என்ன மாதிரி நடிச்சிருக்கியாமே என சொன்னார் அவர்.அதற்கு நான், இல்லை அண்ணே அப்படி ஒரு சூழல் அமைஞ்சு போச்சு. இனி அப்படி எதுவும் பண்ணமாட்டேன்.மதுரைல உங்கள மாதிரி நடிச்சுதான் தங்கச்சிகளை எல்லாம் படிக்க வைத்தேன் என சொல்லிக்கொண்டிருந்தேன்.

அப்போது பின்னாடி இருந்து ஒருவர், என்னடா எதிர்த்து எதிர்த்து பேசுற என்று சொல்லி கீழே தள்ளிவிட்டார். அதுக்கப்புறம் நல்லாவே அடி விழுந்தது. நான் இனி அப்படி பண்ணவே மாட்டேன் அண்ணே. ஊர விட்டு ஓடி போயிடுறேன் என கூறிவிட்டு வீட்டுக்கு ஒருவழியாக வந்துட்டேன். நான் வீட்டுக்கு வந்ததும் என் முகம் வீங்கியிருந்ததையும், சட்டை கிழிந்திருந்ததையும் பார்த்த மனைவி மீனா என்ன ஆச்சு என கேட்டார்.

நானோ, இல்லை வண்டிலேர்ந்து கீழே விழுந்துட்டேன் என்றேன். உடனே அவர் வண்டியை போய் பார்த்து என்ன வண்டிக்கு ஒன்னும் ஆகல கீழ விழுந்துட்டேன்னு சொல்றீங்கனு கேட்டார். ஒருவழியா சமாளிச்சு நைட்டு தூங்க போயிட்டேன்.ஆனா தூக்கமே வரல. சொன்னா நம்பமாட்டீங்க தற்கொலை எண்ணம் எல்லாம் வந்துவிட்டது. என்னடா இது நம்ம ஒரு மாதிரி நினைச்சோம் இங்க வேற மாதிரி நடக்குதே என தோன்றியது.

ஒருகட்டத்துக்கு மேல் எனது மனைவியிடம் அனைத்தையும் சொல்லி அழ ஆரம்பித்துவிட்டேன். அதற்கு அவர் ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார், “ஏங்க ஒருத்தர் உங்களை பார்த்து பயப்படும் அளவுக்கு இருக்கிறார் என்றால் நீங்கள் அவருக்கு இணையாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.. மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியாதுனு சொன்னார்” என்று பேசி உள்ளார்.

சுகுமார் ஆரம்பகட்டத்தில் வடிவேலு மாதிரி இமிடெட் செய்து சில மேடைகளில் நடித்தார் ‌ ஆனால் அவரின் தனித்துவமான காமெடி அதில் இருக்கும். தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கி பல படங்களில் காமெடி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. காதல், வல்லவன், விருமாண்டி போன்றவை அவர் நடித்த படங்களில் மிகவும் முக்கியமானதாகும்.