வடிவேலுவா.. வேண்டவே வேண்டாம்… தூக்கி எரிய சொன்ன நடிகர் தனுஷ்..

0
Follow on Google News

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தில் வெறும் ஒரு கோடி ரூபா மட்டும் சம்பளம் வாங்கி அடக்க ஒடுக்கமாக படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் சொல்வதைக் கேட்டு நடித்துக் கொடுத்து வரும் வடிவேலு. அந்த ஒரு படத்தை தவிர்த்து. அவர் காமிட்டன மற்ற அணைத்து படங்களிலும் பிரச்சனை மேல் பிரட்சனை செய்து படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் பெரும் தலைவலியாக இருந்து வருகிறார் வடிவேலு.

இந்நிலையில் வடிவேலுவின் உண்மை முகம் தெரியாமல், மாரி செல்வராஜ் மீண்டும் அடுத்து தனுஷை வைத்து இயக்க இருக்கும் படத்தில் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுக்க இருக்கிறாராம், ஆனால் தனுஷ் மற்றும் வடிவேலு இருவருக்கும் இடையில் ஏற்கனவே மோதல் ஏற்பட்டு இதுவரை இருவரும் இணைந்து ஒரு படம் கூட நடிக்கவில்லை.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மிக பெரிய ஹிட் அடித்த படம் படிக்காதவன்,இந்த படத்தில் நடிகர் விவேக் நடித்த காட்சிகள் இன்றளவும் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவேக் நடித்த காட்சியில் முதலில் வடிவேலு தான் நடிப்பதாக இருந்துள்ளது. படிக்காதவன் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் இயக்குனரை அழைத்து கதையில் பல மாற்றங்களை கொண்டு வர சொல்லி வலியுறுத்தி உள்ளார்.

ஆனால் அதற்கு தனுஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார், மேலும் இயக்குனர் சொல்லும் வசனத்தை பேசாமல், அவராக ஒரு வசனத்தை பேசி நடித்துள்ளார் வடிவேலு, இதற்கு தனுஷ் சார், இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை செய்யுங்கள் என தெரிவித்துள்ளார், இருந்தும் படிக்காதவன் படத்தில் தனுஷை டம்மியாக்கி நான் தான் அந்த படத்தில் ஹீரோ போன்று தனுஷை விட தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இயக்குனருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார் வடிவேலு.

இதனால் தனுஷ் – வடிவேலு இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உடனே இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என வடிவேலு படிக்காதவன் படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இதன் பின்பு வடிவேலுக்கு பதில் நடிகர் விவேக்கை படிக்காதவன் படத்தின் உள்ளே கொண்டு வந்துள்ளார் தனுஷ். அந்த வகையில் வடிவேலு – தனுஷ் இருவரும் இணைந்து இதுவரை ஒரு படம் கூட நடிக்க வில்லை.

இந்நிலையில் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க இருக்கும் மாரி செல்வராஜ், அதில் தற்பொழுது தன்னுடைய மாமன்னன் படத்தில் நடிக்கும் வடிவேலுவை நடிக்க வைக்க இருப்பதாக முடிவு செய்துள்ளார். ஆனால் மாரி செல்வராஜுக்கு நெருக்கமானவர்கள், மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பதால், எந்த ஒரு பிரச்ச்னையும் செய்யாமல் இயக்குனர் சொல்வதை கேட்டுக்கொண்டு நடித்து கொடுத்து வருகிறார் வடிவேலு.

ஆனால் மற்ற படங்களில் அவர் இயக்குனர்களுக்கு கொடுக்கும் தொல்லை ஏராளம், இதனால் ஒரு முறை வடிவேலு உடன் இணைந்து படம் எடுப்பவர்கள் அடுத்தமுறை அவரை வைத்து படம் எடுக்க மாட்டார்கள், அதனால் தனுஷ் நடிக்கும் படத்தில் வடிவேலுவை நடிக்க வைத்து மிக பெரிய சிரமத்தை எதிர்கொள்ள வேண்டாம் என மாரி செல்வராஜுக்கு அறிவுரை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தன்னுடைய படத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ், வடிவேலுக்கு வாய்ப்பு தருவது குறித்து அறிந்த தனுஷ், உடனே வடிவேலுவா வேண்டவே வேண்டாம், தயவு செய்து அவருக்கு பதில் வேறு ஒரு நடிகரை போடுங்க என வடிவேலுவுக்கு தனக்கு நடந்த பழைய பிரச்சனைகளை எடுத்து கூறி, வடிவேலுவை நான் நடிக்கும் படத்தில் தவிர்த்து விடுங்கள் என இயக்குனர் மாரி செல்வராஜிடம் நடிகர் தனுஷ் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடன் தொல்லையில் தத்தளிக்கும் சிவகார்த்திகேயனுக்கு தனுஷ் வைக்க போகும் ஆப்பு..