நடிகர் ராஜ்கிரன் அலுவலகத்தில் ஆபீஸ் பையனாக இருந்த நடிகர் வடிவேலு பின்பு நடிகர் ராஜ்கிரனால் தமிழ் சினிமாவில் அறிமுகம் படுத்தப்பட்டார். அதன் பின்பு தொடர்ந்து பட சினிமாவில் சிறு சிறு வாய்ப்புகள் கூட கிடைத்தால் போதும் என்று பட வாய்ப்புகள் தேடி வந்த வடிவேலு சின்ன கவுண்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி சென்ற பொழுது அந்த படத்தில் நடித்த கவுண்டமணி இந்த பையன் எல்லாம் வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார்.
அதன்பின்பு நடிகர் விஜயகாந்த்தை சந்தித்த வடிவேலு கவுண்டமணி என்னை இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார். நீங்கள் தான் பேசி எனக்கு ஒரு வாய்ப்பு வாங்கி தர வேண்டும் என்று கெஞ்சி கேட்டதை தொடர்ந்து சின்ன கவுண்டர் படத்தின் இயக்குனர் உதயகுமாரிடம் எனக்கு கூடவே குடை பிடித்து வரும் காட்சியில் இந்த பையன் நடிக்கட்டும் என்று விஜயகாந்தின் சிபாரிசில் சின்ன கவுண்டர் படத்தில் இடம்பெற்றார் வடிவேலு.
அதே போன்று கோவில் காலை படத்தில் நடிகர் விஜயகாந்த் சிபாரிசு வடிவேலுக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த காலகட்டத்தில் வடிவேலுக்கு பட்ஸ் என்று கூட சொல்ல தெரியாதாம். இந்த காதில் வைத்து குடைவர்களே அது வாங்கிட்டு வாங்க என்று சொல்வாரா.? அதாவது பட்ஸ் என்று கூட சொல்ல தெரியாமல். இந்த காதில் ஒன்றை வைத்து குடைவர்களே அதை வாங்கிட்டு வாங்க என்று சொல்வாரா வடிவேலு.
இந்த நிலையில் வடிவேலு ஒரு கட்டத்தில் வளர்ந்து வந்த பின்பு அவருடைய அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. மேலும் எந்த நிலை வந்தாலும் வந்த வழி மறவாதே என்பதற்கு எதிர்மறாக தன்னை சினிமாவில் கை கொடுத்து தூக்கி விட்ட விஜயகாந்தை எதிர்த்து பட வாய்ப்புகளை இழக்க நேரிட்டார் வடிவேலு.
அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் படம் மிகப்பெரிய ஹிட் அடித்த படம். இந்த படத்தில் விவேக் பதில் முதலில் வடிவேலு தான் கமிட் செய்யப்பட்டுள்ளார். படிக்காதவன் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு அன்று காலை 7.30 மணிக்கு எல்லாம் தனுஷ் இயக்குனர் மற்ற அனைத்து நடிகர்களும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விட்டார்கள் . ஆனால் வடிவேலு 10:30 மணிக்குத்தான் வந்துள்ளார்.
வந்தவர் இயக்குனரிடம் இந்த கேரட்டரில் யார் இவரா.? வேண்டாம் வேறு ஆளை போடுங்க. டயலாக்கை மாற்றுங்கள் என வடிவேலு அட்ராசிட்டி பார்த்த தனுஷ்க்கு என்னடா இந்த படத்தின் ஹீரோ நானே சும்மா இருக்கேன் என செம்ம சென்ஷன் ஏற்பட்டுள்ளது. அடுத்த இரண்டாம் நாள் படப்பிடிப்பின் பொழுது வில்லன் நடிகருக்கு வடிவேலு கால் அமுக்கி விடுவது போன்ற ஒரு காட்சி எடுப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.
உடனே வடிவேலு, டென்ஷநில் இந்த காட்சியில் நான் நடிக்க முடியாது காட்சியை மாற்றுங்கள் என தெரிவித்துள்ளார். இந்த படத்தில் இதுதான் ஒரு முக்கியமான காட்சி. அதனால் இந்த காட்சியை இந்த படத்தில் இருந்து எடுக்க முடியாது என்று இயக்குனர் தெரிவித்திருக்கிறார். அதற்கு வடிவேலு நான் தமிழ்நாட்டில் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா.? நான் கால் அமுக்கி விடுவது போன்று அடித்தால் அது நன்றாகவா இருக்கும் என்று இயக்குனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இயக்குனர் நடித்தே ஆக வேண்டும் என பிடிவாதம் பிடிக்க, இறுதியாக அந்த கால் அமுக்கி விடும் காட்சியில் என்னால் நடிக்க முடியாது என தெரிவித்த வடிவேலு அந்த படத்தின் படப்பிடிப்பிலிருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளார். அதன் பின்பு நடிகர் விவேக் படிக்காதவன் படத்தில் கமிட் செய்யப்பட்டு இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. குறிப்பாக அந்த படத்தில் விவேக் அந்த வில்லன் நடிகருக்கு கால் அமுக்கி விடும் காட்சி தான் அந்த படத்தில் மிகப்பெரிய ஹைலைட் ஆக இன்றளவும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.